கபினி, கே.ஆர்.எஸ்., அணை கட்டுப்பாட்டு அறையை பூட்டுவோம்

Added : நவ 16, 2012 | கருத்துகள் (17)
Share
Advertisement
பெங்களூரு:""மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து, கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டரால் கேள்வி கேட்க முடியவில்லை என்றால், கே.ஆர்.எஸ்., கபினி அணைகளை முற்றுகையிட்டு, கட்டுப்பாட்டு அறையை பூட்டி விடுவோம்,'' என, காவிரி நதி நீர் பாதுகாப்பு கமிட்டி தலைவர் மாதே கவுடா எச்சரித்துள்ளார்.தமிழகம் - கர்நாடகம் இடையே, காவிரியில் தண்ணீர் திறந்து விடுவது தொடர்பாக, பிரச்னை எழும் போதெல்லாம்,
கபினி, கே.ஆர்.எஸ்., அணை கட்டுப்பாட்டு அறையை பூட்டுவோம்

பெங்களூரு:""மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து, கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டரால் கேள்வி கேட்க முடியவில்லை என்றால், கே.ஆர்.எஸ்., கபினி அணைகளை முற்றுகையிட்டு, கட்டுப்பாட்டு அறையை பூட்டி விடுவோம்,'' என, காவிரி நதி நீர் பாதுகாப்பு கமிட்டி தலைவர் மாதே கவுடா எச்சரித்துள்ளார்.

தமிழகம் - கர்நாடகம் இடையே, காவிரியில் தண்ணீர் திறந்து விடுவது தொடர்பாக, பிரச்னை எழும் போதெல்லாம், கர்நாடகாவில், காவிரி பாயும் பகுதிகளில் உள்ள, விவசாயிகளும், கன்னட அமைப்பினரும் போராட்டம் நடத்துவது வழக்கம்.அதேபோல், இந்த ஆண்டும், தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடும் படி, காவிரி நதி நீர் ஆணையம் மற்றும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்ட போது, தொடர் போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில், தமிழகத்திற்கு நேற்று முதல், வரும், 30ம் தேதி வரை, கர்நாடகா திறந்து விட வேண்டிய தண்ணீரின் அளவு குறித்து முடிவு செய்ய, காவிரி கண்காணிப்பு குழுவின் கூட்டம், நேற்றுமுன்தினம் டில்லியில் நடைபெற்றது.இந்தக் கூட்டத்திற்குப் பின், "தமிழகத்துக்கு வரும், 30ம் தேதி வரை, 4.8 டி.எம்.சி., தண்ணீர் திறந்து விட வேண்டும்' என, கர்நாடக அரசுக்கு, காவிரி கண்காணிப்பு குழு உத்தரவிட்டது.

இதையறிந்த, கர்நாடகா மாண்டியா விவசாயிகள், மீண்டும் போர்க்கொடி தூக்கி உள்ளனர். கர்நாடக அணைகளிலிருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட்டால், தங்கள் போராட்டத்தை துவக்கவும் முடிவு செய்துள்ளனர்.இதுதொடர்பாக, காவிரி நதி நீர் பாதுகாப்பு கமிட்டி தலைவர், மாதே கவுடா கூறியதாவது:கர்நாடகாவின் தற்போதைய சூழ்நிலையை, மத்திய அரசு புரிந்து கொள்ளவே இல்லை. 27 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களில், நெல் மற்றும் கரும்பு பயிரிட தேவையான தண்ணீர், கர்நாடக அணைகளில் இல்லை. அதனால், சில பகுதிகளில், நெல், கரும்புக்கு பதிலாக, தினை விதைக்கப்பட்டுள்ளது.

மேலும், மைசூரு, பெங்களூரு நகரங்களுக்கு, குடி தண்ணீர் சப்ளை குறையும் அபாயமும் உள்ளது. இது தொடர்பாக, பிரதமர் மன்மோகன் சிங், முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டருக்கு கடிதம் எழுத உள்ளேன்.காவிரி நதி நீர் அடிப்படை பிரச்னை பற்றி, கர்நாடகாவில் காவிரி நீர் பிடிப்பு பகுதியைச் சேர்ந்த, நான்கு எம்.பி.,க்கள் உட்பட, மாநிலத்தில் உள்ள, 28 எம்.பி.,க்களுக்கும் விவரித்து கடிதம் எழுத உள்ளேன். கர்நாடக அணைகளில் உள்ள, தண்ணீர் இருப்பை கருத்தில் கொள்ளாமல், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட, காவிரி கண்காணிப்பு குழு உத்தரவிட்டுள்ளது.

சமீபத்தில், தமிழகத்தில் பெய்த மழையால், பல மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளித்தன; பலர் உயிரிழந்தனர். வெள்ளப் பெருக்கால் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டன. 55 தடுப்பு அணைகள் மற்றும் முக்கிய அணைகளில் விளிம்பு வரை தண்ணீர் நிரம்பியுள்ளது; பாசன கால்வாய்களும் நிரம்பியுள்ளன.இதில், உண்மை என்னவென்றால், தற்போது, அதிகமாக உள்ள தண்ணீரை, தமிழகம் கடலில் விடுகிறது.மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து, கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டரால் கேள்வி கேட்க முடியவில்லை என்றால், இங்குள்ள, கே.ஆர். எஸ்., கபினி அணைகளை முற்றுகையிட்டு, கட்டுப்பாட்டு அறையை பூட்டி விடுவோம்.இவ்வாறு மாதே கவுடா கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
tamizhan - chennai,இந்தியா
18-நவ-201200:21:55 IST Report Abuse
tamizhan தமிழ்நாட்டில் புரட்சி,போராட்டம் எல்லாம் டிவி விளம்பரங்களில் மட்டுமே வருகிறது. அனைத்து மாவட்ட மக்களும் ஒன்று சேர்ந்து சென்னையில் அமைதியான முறையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினால் மத்திய அரசு மூலமாக ஒரு தீர்வு கிடைக்கும் . இரண்டு கழகங்களும் தமிழ்நாட்டை மாறி மாறி ஆட்சி செய்து இருட்டில் தள்ளியது தான் மிச்சம். தமிழர்கள் இளிச்சவாயர்கள்,சகிப்புத்தன்மை கொண்டவர்கள் என்பதால் இங்கு உற்பத்தி செய்யும் மின்சாரம் பிற மாநிலங்களுக்கு கொடுத்துவிட்டு நம் குழந்தைகள் இருட்டில் தூக்கம் இல்லாமல் தவித்து வருகின்றனர். இப்படியே போனால் கண்டிப்பாக ஒரு தலைமுறையே மன நோயாளிகள் ஆகும் அபாயம் உள்ளது. இந்த கொடிய அபாயம் எதையும் உணராமல் மின்வெட்டிற்கு தன்னை பழகி கொண்டு விட்டான் தமிழன். பெரியாரும், காமராஜரும் இன்று உயிரோடு இருந்திருந்தால் மக்களை இப்படி தவிக்க விட்டிருப்பார்களா தமிழ் பிள்ளைகள் அனாதைகள் தான். சினிமா நடிகர்கள் ஒருவர் கூட இதை பற்றி பேசாதது வேதனையிலும் வேதனை. ஏழை தமிழனிடம் போராடும் தெம்பு இல்லை......
Rate this:
Cancel
Mohanasundaram D. - Chennai,இந்தியா
17-நவ-201220:09:25 IST Report Abuse
Mohanasundaram D. இதற்கு ஒரே தீர்வு மாண்டியா மற்றும் காவிரி நீர் பிரச்சனை செய்யும் மாவட்டங்களை தமிழ்நாட்டோடு இணைத்து விடுவது தான். :) இல்லையெனில் இப்படிதான் ஒவ்வொரு வருடமும் பிரச்சினை தான். :(
Rate this:
Cancel
PR Makudeswaran - madras,இந்தியா
17-நவ-201219:57:26 IST Report Abuse
PR Makudeswaran மறைந்த பால் தாக்கரே சொத்து எதுவும் சேர்த்தாரா? நமக்கு தெரியாது. ஆனால் தைரியமாக பேசினார். ஹிந்து என்ற கொள்கைக்காக மும்பை மராட்டியம் என்ற பிரச்சினைகளுக்காக எடுத்த முடிவுக்காக போராடினார். இடையில் காசுக்காகவும் குடும்பத்திற்காகவும் கட்சியை பணயம் வைக்கவில்லை என தோன்றுகிறது பதவி ஆசை இல்லை.அவர் மாதிரி ஒருவர் தமிழகத்திற்கு கிடைக்கவில்லை.இங்கு எல்லோரும் பணம் தின்னி பேய்கள்.பதவி ஆசை ஊழல் பெருச்சாளிகள் காவிரி தண்ணீர் இல்லை என்பார்கள்.வந்ததை பேணி பாதுகாக்க மாட்டார்கள்.எங்கு நீர் வரப்போகிறது.தமிழ்நாடு உருப்படப்போகிறது. .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X