இந்திய "சக்தி பானம்' மீது அமெரிக்கா சந்தேகம்

Added : நவ 17, 2012 | கருத்துகள் (2)
Share
Advertisement

நியூயார்க்: அமெரிக்காவில், சிலர் மர்மமான முறையில் இறந்தது குறித்து, இந்திய நிறுவனத்தின் சக்தி பானத்தை, அதிகாரிகள் பரிசோதித்து வருகின்றனர்.உத்தரபிரதேச மாநிலம், லக்னோவை சேர்ந்தவர், மனோஜ் பார்கவா,59. இவரது நிறுவனம் அமெரிக்காவில் "5 ஹவர் எனர்ஜி' என்ற பெயரில் சக்தி பானத்தை விற்பனை செய்து வருகிறது.
கடந்த, நான்கு ஆண்டுகளில், 13 பேர், மர்மமான முறையில் இறந்தனர். இவர்கள் இறப்புக்கு, சில சக்தி பானங்கள் தான் காரணம் என, கூறப்பட்டது.அமெரிக்காவின் பிரபல ,"பாக்ஸ் நியூஸ்' நிறுவனம், "மர்ம சாவுகளுக்கு, "5 ஹவர் எனர்ஜி, பானம் காரணமாக இருக்கலாம்' என, செய்தி வெளியிட்டது.இதையடுத்து, இந்த நிறுவனத்தில், அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.இதுகுறித்து, பார்கவா கூறியதாவது:சில செய்தி நிறுவனங்கள், பரபரப்புக்காக, மர்ம சாவுக்கு எங்கள் கம்பெனியை காரணம் காட்டியுள்ளன. இது முட்டாள் தனமானது. எங்களது தயாரிப்பில் காபியில் உள்ளது போன்ற "காபின்' என்ற வேதி பொருள் உள்ளது. காபின் உடலுக்கு நல்லது தான். இதனால், மரணம் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது என்ற கருத்து அடிப்படை இல்லாதது.இவ்வாறு பார்கவா கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
E Sreekanth - singapur,சிங்கப்பூர்
17-நவ-201214:23:45 IST Report Abuse
E Sreekanth கோக், பெப்சி யில் விஷம் இல்லையா? அதை தடுக்க முடியுமா?
Rate this:
Cancel
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
17-நவ-201211:23:09 IST Report Abuse
மதுரை விருமாண்டி இவரது "பானத்தில்" கேஃபின் இல்லை என்று சொன்னவர் இப்பொழுது அது இருப்பதாகச் சொல்வது சந்தேகத்தை எழுப்புகிறது,,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X