தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க முடியாது: அமைச்சர் பசவராஜ் பொம்மை திட்டவட்டம்

Updated : நவ 18, 2012 | Added : நவ 17, 2012 | கருத்துகள் (71)
Advertisement
தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க முடியாது:  அமைச்சர்  பசவராஜ் பொம்மை திட்டவட்டம்

பெங்களூரு: ""தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட முடியாது; கர்நாடகா, தன் நிலையை விளக்கி, காவிரி கண்காணிப்பு குழு கூட்டத்தில், அறிக்கை தாக்கல் செய்யும். சுப்ரீம் கோர்ட்டிலும், அடுத்த மாதம், 23ம் தேதி மனு தாக்கல் செய்யும்,'' என, கர்நாடக நீர்ப்பாசனத் துறை அமைச்சர், பசவராஜ் கூறினார்.

"நேற்று முதல், வரும், 30ம் தேதி வரை, தமிழகத்துக்கு, காவிரியில், 4.8 டி.எம்.சி., தண்ணீர் திறந்து விட வேண்டும்' என, கர்நாடகாவுக்கு, காவிரி கண்காணிப்பு குழு உத்தரவிட்டது.இது குறித்து பெங்களூருவில், கர்நாடக நீர்ப்பாசனத் துறை அமைச்சர், பசவராஜ் பொம்மை கூறியதாவது:டில்லியில் நடந்த, காவிரி கண்காணிப்பு குழு கூட்டத்தில், குழு தலைவர் டி.வி.சிங் உத்தரவிட்டபடி, தமிழகத்துக்கு தண்ணீர் விட இயலாது.கர்நாடகா அணைகளில் உள்ள, உண்மையான தண்ணீர் அளவை, காவிரி கண்காணிப்பு குழு கவனத்தில் கொள்ள வேண்டும் என, கர்நாடக மாநில தலைமைச் செயலர் ரங்கநாத் கூறியதை, குழு பொருட்படுத்தவில்லை.


உண்மை நிலையை கவனத்தில் :

கர்நாடகா அணைகளில், எட்டு அடிக்கு மேல் சகதியாகக் காணப்படுகிறது. தற்போது அணைகளிலுள்ள தண்ணீரை கணக்கெடுக்கும் போது, எட்டு அடியை, "மைனஸ்' செய்ய வேண்டும். அணைகளின் நீர்மட்டத்தை அளவிடும் போது, எப்போதுமே உண்மை நிலையை கவனத்தில் கொள்ள வேண்டும்.விவசாயம், குடிநீருக்கான தண்ணீர், கர்நாடக அணைகளில் ஒரு சில மாதங்களுக்கு மட்டுமே உள்ளது; எனவே, தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடுவது இயலாத காரியம். மீண்டும், கர்நாடகா தன் நிலையை விளக்கி, காவிரி கண்காணிப்பு குழு கூட்டத்தில் அறிக்கை தாக்கல் செய்யும்.அத்துடன், சுப்ரீம் கோர்ட்டிலும், அடுத்த மாதம், 23ம் தேதி, கர்நாடகா சார்பில், மனு தாக்கல் செய்யப்படும். இவ்வாறு பொம்மை கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (71)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
g.s,rajan - chennai ,இந்தியா
18-நவ-201222:51:35 IST Report Abuse
g.s,rajan போங்கடா தண்ணியெல்லாம் நீங்களே வெச்சுக்குங்க ஆனா வெள்ளம் வந்தா திறந்து விட்டீங்கன்னா, அவ்வளவுதான் ,பதிலுக்கு நாங்க "கரண்ட் " தரமாட்டோம் "டீலா", "நோ டீலா"? ஜி.எஸ்.ராஜன் சென்னை .
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
18-நவ-201219:05:41 IST Report Abuse
Nallavan Nallavan இங்கே நான் திமுக ஆதரவு வாசகர்களது கருத்துக்களைப் படித்தவுடன் என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை ஆம், காவிரிப் பிரச்னை ஏதோ ஜே முதல்வராக இருக்கும்போதெல்லாம் மட்டுமே வருகின்ற பிரச்னை போலவும், டெல்டா விவசாயிகளுக்காக உயிரைக்கூட தியாகம் செய்யத் தயாராக இருப்பவர் கலைஞர் என்பது போலவும் கதைக்கின்றனர் ஆனால் உண்மை நிலை என்ன? திமுக ஆட்சியில் காவிரிப் பிரச்னையைத் "தீர்த்து" வைத்து விட்டதற்காக கலைஞர் சட்டசபையிலேயே பாராட்டப்பட்டார் அங்கே (கர்நாடகத்தில்) திருவள்ளுவர் சிலையையும், இங்கே சர்வக்ஞர் சிலையையும் நிறுவிவிட்டால் பிரச்னை தீர்ந்துவிடும் என்றால்,,,, ஒப்புக்கொள்கிறோம் கலைஞர் காவிரிப் பிரச்னையைத் தீர்த்தவர்தான் தன் மீதான சர்க்காரியா வழக்குகளை வாபஸ் பெறவேண்டும் என்றால் இலங்கைக்குக் கச்சத் தீவைத் தாரை வார்க்க வேண்டும்,,,, கபினி அணையைக் கட்ட கர்நாடகாவுக்கு அனுமதி தரவேண்டும் என்ற நிலையில் மறுத்துப் பேசாமல் தன்னைக் காப்பாற்றிக் கொண்டு மாநில நலனை இந்திரா காந்தி என்ற பெண் தெய்வத்தின் முன்னாள் மண்டியிட்டுப் பலி கொடுத்தவர்தான் இந்தக் கருணாநிதி கேரளாவுடன் முல்லைப் பெரியாறு, ஆந்திராவுடன் கிருஷ்ணா நதி நீர்ப் பிரச்னை என்று எதை எடுத்தாலும் அதில் தோல்வியே கண்டவர் பிரச்னைகள் இவரது ஆட்சிக்காலத்தில் பூதாகரமாக ஆகும் அளவிற்கு """"நிர்வாகத் திறமை"""" கொண்டவர் ஆட்சி நிலைக்கும்,,,, பதவி சுகம் தொடரும் என்றால் தமிழர்களின் நலனைக் காலில் போட்டு மிதிப்பவர்தான் இந்தக் கருணாநிதி பேச வந்துவிட்டார்கள் அவரது அடிவருடிகள் மத்திய அரசுதான் நீங்கள் ஆட்டுவித்தபடி ஆடுகிறதே???? மத்திய அரசிடம் கெஞ்சி, மிரட்டி ராஜாவுக்கும், ராணிக்கும் ராஜினாமா வாங்க முடிகிறது, காவிரிப் பிரச்னையில் மத்திய அரசைக் கொண்டு கர்னாடக அரசுக்கு நெருக்குதல் தர முயற்சிக்கலாமே? கேரளாவில் காங்கிரஸ் ஆட்சிதானே நடக்கிறது???? உங்கள் கூட்டநியில்தானே காங்கிரஸ் உள்ளது???? முல்லைப் பெரியாறு விஷயத்தில் காங்கிரசிடம் உங்கள் கோரிக்கையை வைக்க வேண்டியதுதானே???? தமிழக அரசு உச்ச நீதி மன்றம் போக வேண்டிய அவசியமே இல்லாமல் பிரச்னையைத் தீர்த்திருக்கலாமே? எந்தப் பிரச்னையை உங்கள் ஆட்சியில் தீர்த்தீர்கள்? கடந்த உங்கள் சிறுபான்மை ஆட்சியில் நீங்கள் செய்ததெல்லாம் கொள்ளை, துரோகம் இவைகள்தானே????
Rate this:
Share this comment
Cancel
ananth india - madurai,இந்தியா
17-நவ-201223:15:12 IST Report Abuse
ananth india நான் சொல்லல தம்பி நல்ல கருத்தா பேசுவாருன்னு
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X