நகரி:ஆந்திராவில், கழுதைப் பாலுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டு உள்ளது; ஒரு லிட்டர் கழுதைப் பால், 5,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.குழந்தை பிறந்த இரண்டு, மூன்று நாட்களுக்குள், சிறிதளவு கழுதைப் பால் ஊற்றினால், குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்ற நம்பிக்கை, ஆந்திராவில், கிராம மக்களிடம் பரவலாக உள்ளது. அதனால், கிராமப் பகுதிகளில், பிறக்கும் குழந்தைகளுக்கு, கழுதைப் பால் ஊட்டப்படுகிறது.
தற்போது, இந்தப் பழக்கம், நகரங்களிலும் பரவியுள்ளது. பிறக்கும் குழந்தைகளுக்கு, கழுதைப் பால் ஊட்ட, நகரவாசிகள், அதை தேடி அலைகின்றனர். அதனால், கழுதை பாலுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டு உள்ளது.ஆந்திரா, அடிலாபாத் மாவட்டத்தில், கழுதை வளர்க்கும் சிலர், கழுதைகளை ஒவ்வொரு மாவட்டமாக அழைத்துச் சென்று பாலை விற்பனை செய்கின்றனர்.
இவர்களிடம் சொன்னால் போதும், சம்மந்தப்பட்ட நபர்களின் வீடுகளுக்கே கழுதையை அழைத்துச் சென்று, அவர்கள் முன்னிலையிலேயே, பாலை கறந்து தருகின்றனர்.கடந்த சில தினங்களுக்கு முன், குண்டூர் நகருக்கு வந்த இவர்கள், குழந்தைகளுக்கு கழுதைப் பால் ஊட்டி வளர்த்தால், நோய் எதிர்ப்பு சக்தி ஏற்படும் என, பிரச்சாரம் செய்து, பாலை விற்றனர். கழுதைப் பால் விற்பனை செய்வதற்காக, சில இடங்களில் இப்போது, பண்ணைகள் திறக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE