தமிழ்நாடு

பச்சை வண்ணத்தில் 675 புதிய பேருந்துகள்

Added : நவ 23, 2012 | கருத்துகள் (8)
Share
Advertisement
 பச்சை வண்ணத்தில் 675  புதிய பேருந்துகள்

சென்னை:சென்னை மாநகர போக்குவரத்து கழக, மத்திய பணிமனையில் நடந்த விழாவில், 286 புதிய வழித்தடங்களில், 675 புதிய பேருந்துகளின் சேவையை, முதல்வர் ஜெயலலிதா நேற்று துவக்கி வைத்தார்.விழுப்புரம்இதில், அதிகபட்சமாக, கோவை அரசு போக்குவரத்து கழகத்துக்கு, 55 புதிய வழித்தடங்களில், 174 பேருந்துகளும், விழுப்புரம் போக்குவரத்து கழகத்திற்கு, 70 புதிய வழித்தடங்களில், 169 பேருந்துகளும், சேலம் போக்குவரத்து கழகத்திற்கு, 45 புதிய வழித்தடங்களில், 137 பேருந்துகளும் வழங்கப்பட்டன.
கும்பகோணம் போக்குவரத்து கழகத்துக்கு, 69 வழித்தடங்களில், 69 பேருந்துகளும், நெல்லை போக்குவரத்து கழகத்துக்கு, ஏழு வழித்தடங்களில், 85 பேருந்துகளும், மதுரை போக்குவரத்து கழகத்துக்கு, 10 வழித்தடங்களில், 10 பேருந்துகள் வழங்கப்பட்டன. மொத்தம், 286 புதிய வழித்தடங்களில், 675 புதிய பேருந்து சேவை துவக்கி வைக்கப்பட்டது.
அரசு விரைவு போக்குவரத்து கழகத்துக்கு, சபரிமலை மற்றும் பரமக்குடி ஆகிய இரண்டு வழித்தடங்களில், மூன்று பேருந்துகள் உட்பட சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்துக்கு, 28 பேருந்துகளும் வழங்கப்பட்டன. புதிய பேருந்துகள் அனைத்திற்கும், முதல்வருக்கு பிடித்தமான பச்சை வண்ணம் தீட்டப்பட்டு இருந்தது.
சொன்னது என்னாச்சு?அரசு போக்குவரத்து கழகங்களுக்கு, 2011-12ம் ஆண்டிற்கு, 3,000ம், 2012-13ம் ஆண்டிற்கு, 3,000ம் பேருந்துகள் வாங்கப்படும் என, அரசு அறிவித்தது. இதில், 2011-12ம் நிதியாண்டில் அறிவித்த, 3,000 பேருந்தில், நேற்று துவக்கி வைக்கப்பட்ட, 675 பேருந்துகள் சேர்த்து, 2,848 பேருந்துகள் மட்டுமே பயன்பாட்டிற்கு வந்துள்ளன.
இதுவரை, அரசு போக்குவரத்து கழக பயன்பாட்டிற்கு வழங்கப்பட்ட பேருந்துகளில், 1,400 பேருந்துகள் மட்டுமே புதிதாக வாங்கப்பட்டவை என்றும், மற்ற பேருந்துகள் புதுப்பிக்கப்பட்ட பேருந்துகள் என தொழிற்சங்க தரப்பில் கூறப்படுகிறது. இது குறித்து, அரசு தரப்பில் விளக்கம் தரவில்லை.

Advertisement


வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ராகேஷ் - Chennai,இந்தியா
25-நவ-201218:28:14 IST Report Abuse
ராகேஷ் பஸ் வாங்கிடீங்க எங்க நிறுத்துவீங்க....?
Rate this:
Cancel
muthu - mucsat,ஓமன்
24-நவ-201211:09:52 IST Report Abuse
muthu makkalluku pidicha colour thara mattingala. ithu makkal athci thanea
Rate this:
Cancel
க.வடிவேல் - .ஜோஹூர்.சென்னை.மேடவாக்கம்,இந்தியா
24-நவ-201208:08:58 IST Report Abuse
க.வடிவேல் எந்த அரசு வந்தாலும் புதிய பேருந்துகளை வாங்க தான் செய்கிறார்கள் .. ஆனால் சரியான முறையில் பராமரிக்க படாமல் வெகு விரைவில் பேருந்து வீணாகி விடுகின்றன. இதை ஒவ்வொரு பேருந்து கழகமும் ஒழுங்காக பராமரித்தால் நமது அரசுக்கு பண இருப்பு மிச்சமாகும் ... தமிழகத்துக்கு இன்னும் நல்ல பெயர் கிடைக்கும் ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X