கோவிலுக்குச் சொந்தமான 6,000 பசுக்கள் மாயம் : தணிக்கையில் அம்பலம்

Updated : நவ 30, 2012 | Added : நவ 28, 2012 | கருத்துகள் (38) | |
Advertisement
திருச்செந்தூர் கோவிலுக்கு, தானமாக வழங்கப்பட்ட, பசுக்களில், 5,000 பசுக்கள் மாயமாகியுள்ளது, தணிக்கைத்துறை ஆ#வில் தெரியவந்துள்ளது. தமிழகத்தில் உள்ள மற்ற கோவில்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டால், இந்த எண்ணிக்கை, 6,000 ஆக உயரும்.திருச்செந்தூரில் தனியார் கோசாலைகளுக்கு வழங்கப்பட்ட, இந்த பசுக்கள் குறித்து, அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டதால், அவை விற்பனை
more than 6,000 temple cows disapperad :report கோவிலுக்குச் சொந்தமான 6,000  பசுக்கள் மாயம் :  தணிக்கையில் அம்பலம்

திருச்செந்தூர் கோவிலுக்கு, தானமாக வழங்கப்பட்ட, பசுக்களில், 5,000 பசுக்கள் மாயமாகியுள்ளது, தணிக்கைத்துறை ஆ#வில் தெரியவந்துள்ளது. தமிழகத்தில் உள்ள மற்ற கோவில்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டால், இந்த எண்ணிக்கை, 6,000 ஆக உயரும்.
திருச்செந்தூரில் தனியார் கோசாலைகளுக்கு வழங்கப்பட்ட, இந்த பசுக்கள் குறித்து, அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டதால், அவை விற்பனை செ#யப்பட்டிருப்பதாக, புகார் எழுந்திருக்கிறது.
கோவில்களுக்கு பசுக்களை தானமாக வழங்குவதை, பக்தர்கள் புனிதமானதாக கருதுகின்றனர். இவ்வாறு பக்தர்கள் வழங்கும் பசுக்கள், @காவில் நிர்வாகத்தால் அமைக்கப்படும், "@காசாலை'கள் மூலம் பராமரிக்கப்பட்டு வருகின்றன.


விதிமுறைகள்


அதிக அளவில் பசு தானம் செய்யப்படும் போது, பசுக்களை பராமரிக்க தனியார் பசுச்சாலைகளுக்கு வழங்கப்படும், நடைமுறை உள்ளது. இப்பசுச்சாலைகள், விலங்குகள் நல வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்டு, பதிவு பெற்ற நிறுவனமாக இருக்க வேண்டும். அவற்றை தொடர்ந்து பராமரிக்க வேண்டும்.
மேலும், ஒவ்வொரு பசுக்களுக்கும், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர், செயல் அலுவலர் பெயரில், காப்பீடு செய்ய வேண்டும். அந்த பசுக்கள் இறக்குமானால், கிடைக்கும் காப்பீட்டு தொகையில், 70 சதவீதம் கோசாலைகளுக்கும், 30 சதவீதம் @காவிலுக்கும் தர வேண்டும். மாடுகள் இறப்பு குறித்து, இணை ஆணையருக்கும், செயல் அலுவலருக்கும், தகவல் தெரிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட விதிமுறைகள், தனியார் @காசாலைகளுக்கும் விதிக்கப்பட்டுள்ளன.திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி @காவிலில் உள்ள, @காசாலைக்கு வழங்கப்பட்ட பசுக்களில், 5,389 க்கும் @மலான பசுக்கள், தனியார் @காசாலைகளுக்கு வழங்கப்பட்டன.


பசுக்கள் மாயம்


இந்த பசுக்களின் நிலை குறித்து, இந்து சமய அறநிலையத்துறை சார்பில், தணிக்கை செ#யப்பட்டது. இதில், தனியார் @காசாலைகளுக்கு வழங்கப்பட்ட, 5,389 மாடுகள் மாயமாகி இருப்பது தெரியவந்தது. இவை என்னவாயின என்பது குறித்து, எவ்வித ஆவணங்களும் இல்லை. மேலும், மற்ற முக்கிய கோவில்களுக்கு தரப்பட்ட, 700 பசுக்கள் பற்றிய விவரம் சேகரிக்கப்படுவதாக தெரிகிறது.சம்மந்தப்பட்ட இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம், கேட்ட போது, அவர்களிடமும் பதில் இல்லை. எனவே, திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமிக்கு சொந்தமான பசுக்கள், விற்பனை செய்யப்பட்டிருக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.


விதிமுறை மீறல்


திருச்செந்தூர் கோவில் நிர்வாகம், விலங்குகள் நல வாரியத்தால் அங்கீகரிக்கப்படாத பசுச்சாலைகளுக்கு மட்டுமே, பசுக்களை வழங்க வேண்டும் என்ற விதிமுறையை மீறி, அங்கீகரிக்கப்படாத பசுச்சாலைகளுக்கு, ஆயிரக்கணக்கான பசுக்களை வழங்கியதாக, தற்போது கூறப்படுகிறது.மேலும், தனியார் பசுச்சாலைகளுக்கு, வழங்கப்பட்ட பசுக்களை, இரண்டு மாதத்திற்கு ஒரு முறை, தொடர் ஆய்வு செய்ய வேண்டும் என்ற விதி உள்ள போதும், கோவில் நிர்வாகத்தினர் ஆய்வு மேற்கொள்ளவில்லை. இதனால், பசுக்கள் மாயமானது குறித்து, அதிகாரிகளுக்கு தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (38)

Nagaraj Thalavai - mumbai,இந்தியா
22-டிச-201210:08:12 IST Report Abuse
Nagaraj Thalavai டுபாகூர் அதிகாரியிடம் விசாரணை நடத்துங்கள். அவர் சொல்வார் பதில்,,,, எப்படினா? அய்யா பசு எல்லாம் கடல் பக்கமா மேய போச்சு பெரிய அலைகள் வந்தவுடன் பசு எல்லாம் உள்‌ளே போச்சு, அப்புறம் வேற என்ன கடல்டே தான் விசாரணை பண்ணுவாங்க மற்றும் சில அதிகாரிகள் ,,,, அவ்வளவுதான் பூசனிகா கதைதான்
Rate this:
Cancel
Vinoth Kumar - Chennai,இந்தியா
29-நவ-201216:20:54 IST Report Abuse
Vinoth Kumar "கொடுமை கொடுமை என்று கோயிலுக்குப் போனால் அங்க ரெண்டு கொடுமை அம்மனமா ஆடுச்சாம்" - என்று நம் முன்னோர்கள் இதைப் பார்த்துத்தான் சொன்னார்களோ? இருக்கும் இருக்கும்...
Rate this:
Cancel
ratthakatteri_modi - மோடி இல்லா தேசம் ,இந்தியா
29-நவ-201215:08:45 IST Report Abuse
ratthakatteri_modi திருவாளர் ராமகோபாலனை அவர்களை கேளும், அவருக்கு எல்லாம் தெரியும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X