பொது செய்தி

இந்தியா

பாக்., கிரிக்கெட் ரசிகர்களுக்கு 3 ஆயிரம் விசா: இந்தியா முடிவு

Added : நவ 30, 2012
Share
Advertisement

புதுடில்லி:இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இடையே நடக்கும் கிரிக்கெட் போட்டி தொடரை பார்க்க வரும், பாகிஸ்தான் ரசிகர்களுக்கு, 3,000 விசா வழங்க இந்தியா முடிவு செய்துள்ளது.மும்பையில் கடந்த, 2008ம் ஆண்டு, பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, இந்தியா - பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் உறவில் முறிவு ஏற்பட்டது. இந்தியா - பாகிஸ்தான் நேரடியாக பங்கேற்கும் கிரிக்கெட் போட்டிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.கடைசியாக, இந்தியா-பாக்., இடையேயான தொடர் கடந்த, 2007ம் ஆண்டு நடந்தது.

இந்நிலையில், மீண்டும் இரு நாடுகள் இடையே, கிரிக்கெட் போட்டிகளை நடத்த, கடந்த ஜூலை மாதம், இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்தது.இதையடுத்து, பாகிஸ்தான் அணி அடுத்த மாதம் இந்தியா வருகிறது. டிசம்பர் 25ம் தேதி முதல், ஜனவரி 6ம் தேதி வரை, மூன்று ஒரு நாள் போட்டி, இரண்டு 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் நடக்க இருக்கிறது.
ஒருநாள் போட்டிகள், சென்னை, கோல்கட்டா, டில்லி நகரங்களிலும், 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பெங்களூர் மற்றும் ஆமதாபாத்தில் நடக்கிறது.இப்போட்டிகளை நேரில் பார்ப்பதற்காக வரும், பாகிஸ்தான் ரசிகர்களுக்கு விசா வழங்குவது குறித்து, மத்திய உள்துறை அமைச்சகம் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வந்தது.

இந்நிலையில், நேற்று மத்திய உள்துறை அமைச்சகம், பாகிஸ்தான் ரசிகர்களுக்கு, 3,000 விசா வழங்க முடிவு செய்தது. இம் முடிவை பாகிஸ்தானுக்கு தெரிவித்தது.இதன்படி, டில்லியில் நடக்கும் போட்டிக்கு, ஆயிரம் விசாக்களும், மற்ற இடங்களில் நடக்கும் போட்டிக்கு, தலா 500 விசாக்களும் வழங்க முடிவு செய்யப்பட்டது.இருப்பினும், பாகிஸ்தான் ரசிகர்கள், வாகா எல்லை வழியாக நடந்து வருவதற்கு அனுமதியில்லை. அவர்கள் இந்தியாவுக்கு வருவதாக இருந்தால், பஸ், ரயில் அல்லது விமானம் மூலமாகத்தான் வரவேண்டும்.

இந்த முடிவை, மத்திய உள்துறை அமைச்சகம் உட்பட பல்வேறு அமைச்சக அதிகாரிகள், பாதுகாப்பு ஏஜென்சிகள் அடங்கிய உயர்மட்ட கமிட்டி கடந்த ஒரு மாதமாக பல்வேறு கட்ட ஆலோசனைகளை நடத்தி எடுத்தது.விசாவுக்கு விண்ணப்பிக்கும் பாக்., ரசிகர்கள், போட்டிக்கான டிக்கெட், பயண டிக்கெட், ஓட்டலில் தங்குவதற்கு செய்யப்பட்ட முன்பதிவு ரசீது ஆகியவற்றை, விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.


கடந்த 2007ம் ஆண்டு இந்திய-பாக்., அணிகளுக்கு இடையே நடந்த போட்டி தொடரை பார்ப்பதற்காக, இந்தியா வந்த பாக்., ரசிகர்கள், 12 பேர், பாகிஸ்தான் திரும்பவில்லை. அவர்களை இன்று வரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதில் சிலர், டில்லியில் பதுங்கியிருப்பதாக வந்த தகவலையடுத்து பரபரப்பு ஏற்பட்டது.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X