பொது செய்தி

இந்தியா

கெஜ்ரிவால் வேட்பாளர்களுக்கு ஆதரவு: அன்னா ஹசாரே அறிவிப்பு

Added : டிச 03, 2012
Share
Advertisement
 கெஜ்ரிவால் வேட்பாளர்களுக்கு ஆதரவு: அன்னா ஹசாரே அறிவிப்பு

புரி :அரவிந்த் கெஜ்ரிவால் நிறுத்தும் வேட்பாளர்களுக்கு மட்டும் தேர்தல் பிரசாரம் செய்யப் போவதாக, "ஊழலுக்கு எதிரான இந்தியா அமைப்பின்' நிர்வாகியும், சமூக சேவகருமான, அன்னா ஹசாரே, 75, தெரிவித்துள்ளார்.

அன்னா ஹசாரேவின் தீவிர ஆதரவாளர்களில் ஒருவராக இருந்த, அரவிந்த் கெஜ்ரிவால், சமீபத்தில், தனியாக பிரிந்து, "ஆம் ஆத்மி' என்ற அரசியல் கட்சியை துவக்கியுள்ளார்.வரும், லோக்சபா தேர்தலில், நாடு முழுவதும் வேட்பாளர்களை நிறுத்தி, ஊழலற்ற அரசியல்வாதிகளையும், அரசியலையும் உருவாக்கப் போவதாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில், ஒடிசாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட, ஊழலுக்கு எதிரான இந்தியா அமைப்பின் நிர்வாகியும், சமூக சேவகருமான, அன்னா ஹசாரே கூறியதாவது:தேர்தலில் பல கட்சிகள், வேட்பாளர்களை நிறுத்தும்; அவர்களில் சிலர், நேர்மையானவர்களாக இருக்கக் கூடும். அவர்கள் நேர்மையானவர்கள் தானா என, கணிப்பது கடினம். எனவே, அரவிந்த் கெஜ்ரிவால் நிறுத்தும் வேட்பாளர்களை மட்டும், தேர்தலில் ஆதரிப்பது என, முடிவு செய்துள்ளேன்; அவர்களின் வெற்றிக்காக மட்டும், தேர்தல் பிரசாரம் மேற்கொள்வேன்.ஏனெனில், கெஜ்ரிவாலை எனக்கு நன்றாகத் தெரியும்; அவர், தனக்காக எதையும் செய்யக் கூடியவர் அல்ல. பொது நலனை கருத்தில் கொண்டே செயல்படுபவர். அவர், நியாயமான ஆட்களைத் தான் தேர்ந்தெடுப்பார். எனவே, அவர் தேர்ந்தெடுக்கும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக, நான் பிரசாரம் செய்வேன்.எனினும், கெஜ்ரிவாலின் வேட்பாளர்களை, கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்க மாட்டேன்; அவர்கள், நல்லவர்கள் தானா என, ஆராய்வேன்.சமூக விரோதிகளிடம் இருந்தும், தீயவர்களிடம் இருந்தும், அரசியல் கட்சிகள் நன்கொடை திரட்டுகின்றன. அந்த பெரிய தொகைகளை, 20 ஆயிரம் ரூபாய்களாக பிரித்து, வேறு நபர்கள் பெயர்களில், வரவு வைத்துக் கொள்கின்றன.இவ்வாறு, அன்னா ஹசாரே கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X