Andhra couple appeal against prison sentence | சிறை தண்டனையை எதிர்த்துஆந்திர தம்பதி மேல்முறையீடு| Dinamalar

சிறை தண்டனையை எதிர்த்துஆந்திர தம்பதி மேல்முறையீடு

Added : டிச 07, 2012
Advertisement

ஆஸ்லோ:நார்வே நாட்டில், மகனை கண்டித்ததற்காக, சிறைத் தண்டனை பெற்றுள்ள ஆந்திர தம்பதியர், மேல்முறையீடு செய்துள்ளனர்.ஐதராபாத்தை சேர்ந்தவர் சந்திரசேகர்; நார்வே நாட்டில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிகிறார். இவரது மனைவி அனுபமா. இவர்களது ஏழு வயது மகன், ஆஸ்லோ நகர் பள்ளியில் படிக்கிறான்.


சமீபத்தில் இவர்களது மகன், பள்ளியில், "பேன்ட்'டிலேயே சிறுநீர் கழித்து ஈரமாக்கிக் கொண்டான். இதற்காக சந்திரசேகர், மகனை கண்டித்துள்ளார். மறுநாள், பள்ளியிலிருந்து ஒரு பொம்மையை எடுத்து வந்து விட்டான். இதனால் கோபமடைந்த சந்திரசேகர், "இது போன்று செய்தால், உன்னை, ஐதராபாத்துக்கு திருப்பி அனுப்பி விடுவேன்' என, மிரட்டியுள்ளார்.இந்த விஷயத்தை சிறுவன், தன் பள்ளி ஆசிரியையிடம் தெரிவித்துள்ளான். சிறுவனை, அவனது பெற்றோர் தொடர்ந்து கொடுமைப்படுத்துவதாக ஆசிரியை, போலீசில் புகார் செய்துள்ளார்.


சமீபத்தில், இந்தியா வந்த சந்திரசேகர் தம்பதியர், மகனை, ஐதராபாத்தில், உறவினர் வீட்டில் விட்டு சென்று விட்டனர்.நார்வே திரும்பிய, சந்திரசேகரையும், அவரது மனைவியையும், அந்நாட்டு போலீசார் கைது செய்தனர்.இது குறித்து, நார்வே போலீஸ் அதிகாரி குர்த் லிர் குறிப்பிடுகையில், ""சிறுவனின் உடலில், சூடு வைத்த காயமும், "பெல்ட்'டால் அடித்த தழும்பும் உள்ளது. இதை வைத்து பார்க்கும் போது, சந்திரசேகர் தம்பதியர், மகனை அதிகமாகவே கொடுமைப்படுத்தியது தெரியவந்துள்ளது. எனவே, தான் அவர்களை கைது செய்துள்ளோம்,'' என்றார்.


ஆஸ்லோ மாவட்ட கோர்ட், சந்திரசேகருக்கு, 18 மாத சிறைத் தண்டனையும், அனுபமாவுக்கு, 15 மாத சிறைத் தண்டனையும் அளித்து தீர்ப்பு கூறியுள்ளது.இந்த தீர்ப்பை எதிர்த்து, நார்வே உயர் நீதிமன்றத்தில், சந்திரசேகர் தம்பதியர் மேல்முறையீடு செய்துள்ளனர். கரண்டியை காய வைத்து மகனுக்கு சூடு போட்டதாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நார்வே உயர் நீதிமன்றம், இந்த வழக்கை நேற்று விசாரித்தது.




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X