பதிவு செய்த நாள் :
கருத்துகள் (18)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

சென்னையில், 21 ஆயிரம் ஆசிரியர்களுக்கு ஒரே நாளில் பணி நியமனம் வழங்கப்பட்டது சாதனையாக இருந்தாலும், அதை வாங்க ஆசிரியர்கள், கடுமையான நெருக்கடிகளை சந்திக்க வேண்டியிருந்தது.
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்வு செய்யப்பட்ட, 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டதாரி மற்றும் இடை நிலை ஆசிரியர்களுக்கு, இம்மாதம் 9, 10, 11ம் தேதிகளில் கலந்தாய்வு நடத்தப்பட்டது.
பணி நியமன ஆணை வழங்கும் விழா, நேற்று நடந்த நிலையில், நேற்று முன்தினம் காலை முதலே, 650 பஸ்கள் மூலம், சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர்.
அவர்கள் அனைவரும், நேற்று முன்தினம் இரவு, சென்னை பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளில், பெரிய தனியார் பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டனர். இரவு நேரத்தில் வந்திறங்கிய அவர்களுக்கு, சிறிது நேர ஓய்வு கூட அளிக்கப்படவில்லை. உடனடியாக, குளித்து தயாராக அறிவுறுத்தப்பட்டது.

தொடர்ந்து, இரவு இரண்டு மணி முதலே, அவர்கள் நந்தனம் விழா அரங்கிற்கு, பஸ்கள் மூலம் அழைத்துச் வரப்பட்டு, அரங்கில் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அமர வைக்கப்பட்டனர். 50 பேருக்கு இரண்டு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
அவர்கள் மூலமே, உணவு வழங்கப்பட்டது. எங்கு செல்வதாக இருந்தாலும், அவர்கள் அனுமதியின்றி செல்லக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது. தேர்வுசெய்யப்பட்டவர்களில், பெண்களே அதிகம் இருந்த நிலையில், அவர்களுக்கு @பாதுமான கழிப்பிட வசதிகள் இல்லை.
ஆங்காங்@க இருந்த, மொபைல் கழிப்பிடங்களில், தண்ணீர் வசதி இல்லை. ஒவ்வொரு மொபைல் கழிப்பிடத்திற்கும், 20க்கும் மேற்பட்டவர்கள், வரிசையில் நின்றே, சென்று வந்தனர்.
முதல் நாள் இரவு முதலே அவர்கள், அங்கு அமர வைக்கப்பட்டதால், பெண்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியிருந்தனர். கொ”க்கடியால், பெரிதும் பாதிக்கப்பட்டதாக பயனாளிகள்

Advertisement

புலம்பினர்.
ஆசிரியர் பணி நியமன ஆணை வழங்கும் விழாவில், 36 பேருக்கு, முதல்வர் ஜெயலலிதா பணி நியமன ஆணைகளை வழங்கினார். அதில், நான்கு மாற்றுத் திறனாளிகளும் அடக்கம். மற்றவர்களுக்கு, அவர்கள் சார்ந்த மாவட்ட அமைச்சர்கள் வழங்கினர்.

அரை மணி நேரத்தில்,20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு, நியமன ஆணைகளை அவர்கள் வழங்கினர்.நிகழ்ச்சி முடிந்ததும், அனைவருக்கும் பணி குறித்த, அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு, அதன் பின், வந்தது போல், ஒவ்வொரு பஸ்சிலும் ஏற்றி, அவர்கள் அனுப்பப்படுவர் என்று அறிவிக்கப் பட்டிருந்தது.
ஆனால், நிகழ்ச்சி முடிந்ததும், நியமன ஆணை பெற்றவர்கள் செல்ல விரும்பினால், தங்கள் உறவினர்களுடன் செல்லலாம் என அறிவிக்கப்பட்டதால், அனைவரும் நிம்மதியடைந்து சென்றனர்.

- நமது நிருபர்-
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (18)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
16-டிச-201223:28:20 IST Report Abuse
Pugazh V அடப் பாவிகளா. பணி நியமன உத்தரவு என்பது சாதாரண விஷயம். பதிவுத் தபாலில் அனுப்பினாலே போதுமானது. அதைப் பொய் நேரில் வாங்க வேண்டும் என்றும், இரவே தயாராக வேண்டும் என்றும் படாத பாடு படுத்தி, ஆயிரக்ககணக்கில் ஆசிரியர்கலானவர்களை அலைக்கழித்து, வெறும் 36 பேருக்கு முதல்வர் வழங்கிவிட்டு ஜாலியாக அவர் போய்விட்டார். மற்றவர்கள் பட்ட பாடு,,அநியாயம். ஆனால் இதையும் சப்பைக்கட்டு கட்டி, பாராட்டுப் பத்திரம் வாசித்து ஜால்ரா அடிக்கும் கொடுமை தமிழ்நாட்டில் மட்டும் தான் அரங்கேறும். சற்றே யோசித்துப் பாருங்கள் - உங்களுக்கு கஞாமுமரி வங்கியில் ஒரு வேலை கிடைக்கிறது, அதன் நியமன உத்தரவை வாங்க அந்த வங்கியின் தலைமை அலுவலகம் இருக்கும் டெல்லிக்கு வா என்றால், அது எவ்வளவு கேலிக் கூத்தான விஷயம்? யோசிக்கவே மாட்டீர்களோ. தினமலர் கூட நடுநிலையான் ஐதழ் என்று ஏற்கலாம், ஆனால் இங்கே கருத்து சொல்லும் பலரும் நடு நிலையாய் செயல்படுகிறோமா என்று யோசிக்கவும்.
Rate this:
Share this comment
Cancel
govind - Muscat,இந்தியா
15-டிச-201210:19:46 IST Report Abuse
govind தனக்கோ தன உறவினருக்கோ வேலை கிடைக்கவில்லை என்கிற விரக்தியில் புலம்ப வேண்டாம். தமிழ் நாட்டில் ஓர் சாதனை. இதை நான் பாராட்டுகிறேன்... இவ்வளவு விரைவில் மிக பெரிய வேலையே இந்த அரசு செய்துள்ளது... அதுவும் மிக முக்கியமான வேலை... 24 மணி நேரம் கடையை திறந்து வைத்து ஊர் வம்பு பேசும் ஊடகங்கள் எதை பேச வேண்டும் என்று எண்ணம் இல்லாமல் எதையும் விமரிசனம் செய்வது தவறு... நாடகம் ஆடும் அரசியல் வாதிகளில் இது மிகவும் வியப்பான விழயம். இனி சொட்டை சொள்ளை சொல்லாமல் தன் நிர்வாகத்திற்கும் மாணவர்களுக்கும் நாட்டுக்கும் ஏதாவது நல்லது செய்ய வேண்டும் இந்த ஆசிரியர்கள்.. இங்கே தூங்கியது போல் பள்ளியிலும் தூங்குதல் கூடாது... பொறுப்பான ஆசிரியர்களாக இருக்க வேண்டும்... வேலை என்பது தனியார் பள்ளிகளில் மட்டும் செய்வதற்கு அல்ல. அரசு பள்ளிகளில் தான் தீவிரமான கல்வி போதிப்பை ஆசிரியர்கள் காட்ட வேண்டும். செட்டில் ஆகியாச்சு.... தானாக சம்பளம் உயரும்... இல்லையேல் போராட்டம்... வோட்டு போட மாட்டோம் என்று கொடி தூக்கினால்... கல்வி பணி தூங்கும்... அப்புறம் உங்கள் நியமனம் தவறே... இதற்க்கு நீங்களும் ஒத்து உழைக்க வேண்டும். இந்த அல்லல் ஏற்கனவே தெரிந்தது தானே... பஸ்ஸில் பிரயாணம் செய்யும் பொது ரெஸ்ட் எடுக்க வேண்டியது தானே... ஊடகங்களில் பாராட்டு வெறும் உதட்டு அளவில் தான் காண முடிந்தது...
Rate this:
Share this comment
Cancel
Raja Ramesh - chennai,இந்தியா
15-டிச-201206:49:09 IST Report Abuse
Raja Ramesh இப்பவே தமிழ்நாட்டில் அடுந்தவனை எப்படி காத்துகிடக்க வைக்கவேண்டும் என்று ட்ரைனிங் கொடுத்துவிட்டிர்கள் . வாழ்க தமிழ்நாடு
Rate this:
Share this comment
Cancel
தமிழன் - Melanikuzhi(Ariyalur-DT),இந்தியா
14-டிச-201215:26:04 IST Report Abuse
தமிழன் அரசு ஊழியர்கள் தான் தேர்தல் பணியில் முழவதுமாக ஈடுபடுவதால் 22000 ஆசிரியர்களை நமது மாண்புமிகு அம்மா அவர்கள் லோக்சபா தேர்தலுக்காக இபோதே தேர்ந்தெடுத்து பணியில் அமர்த்தினால் தான் தன்னுடைய ஆட்சிக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் அதனால் தான் ? ? ?
Rate this:
Share this comment
Cancel
Anand - Tirunelveli,இந்தியா
14-டிச-201210:53:23 IST Report Abuse
Anand பனி மூப்பு அடிப்படையில் வேலை வழங்கியிருந்தால் பாராட்டலாம் வருடகனக்காக காத்திருந்தார்கள் என்ற காரணத்திற்காக .... இங்கு வந்திருந்தவர்கள் அனைவரும் கஷ்ட்டப்பட்டு பரீட்சை எழுதி தேர்வானவர்கள் ...
Rate this:
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
14-டிச-201207:50:07 IST Report Abuse
villupuram jeevithan இவர்கள் பணியாற்றப்போகும் பள்ளிகளிலும் இதே நிலை தான் இருக்கப் போகிறது. அதற்கு பயிற்சி எடுத்துக் கொள்கிறார்கள் இங்கே. அவ்வளவு தான்.
Rate this:
Share this comment
Cancel
naagai jagathratchagan - mayiladuthurai ,இந்தியா
14-டிச-201207:45:33 IST Report Abuse
naagai jagathratchagan வேலைன்ன சும்மாவா ....அதுவும் அம்மா மூலமா கிடைக்குதுன்ன ...லேசா ...இதெல்லாம் பொறுத்துதான் ஆகவேண்டும் புலம்பி என்ன செய்ய ...வேலை கிடைக்காதவனை நினைச்சு பாருங்க ..".நல்ல வேளை நான் பிழைத்துக்கொண்டேன்",.. என்று பாடிக்கொண்டிருப்பானா ....எந்த சங்கடமானாலும் நான் தாங்கிக்கொளுவேனே...எனக்கு கிடைக்காமல் போச்சே ..என்று அழுது கொண்டிருப்பானே ...விதி வலியது அதை யாரும் வெல்ல முடியாது ... போனால் போகட்டும் உங்க கடமையை செய்யுங்க ..பலன் தன்னாலே வரும்
Rate this:
Share this comment
dharma - nagpur,இந்தியா
14-டிச-201216:40:06 IST Report Abuse
dharmaரொம்ப பேசுற கொஞ்சம் அடங்கு ...
Rate this:
Share this comment
Cancel
NavaMayam - New Delhi,இந்தியா
14-டிச-201207:42:40 IST Report Abuse
NavaMayam தென் மாவட்டங்களில் மின்வெட்டும் அதிகம் , கொசுவும் அதிகம் ... அங்கு தூங்க முடியாததை , சென்னையில் வந்து தூங்குகிறார்கள் ...
Rate this:
Share this comment
Cancel
ஜெயாவின் குருட்டு ஆதரவாளன் - சீரழிந்த தமிழகம்,இந்தியா
14-டிச-201207:33:27 IST Report Abuse
ஜெயாவின் குருட்டு ஆதரவாளன் எது எதற்குத்தான் விழா... விவஸ்தையே இல்லையா? 'ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக 20 ஆயிரத்து 920 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு, சென்னையில் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் வரும் 13-ம் தேதி நடைபெறும் விழாவில் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட உள்ளன. ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் நடக்கின்றன. பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர், இயக்குநர் மேற்பார்வையில்... வரவேற்பு குழு, இருக்கை வசதிகளை ஏற்படுத்தும் குழு, உணவு மற்றும் தங்கும் வசதிகளை செய்யும் குழு என பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.20 ஆயிரம் ஆசிரியர்களும் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு அழைத்து வரப்பட்டு... சமுதாயக் கூடங்கள், திருமணக் கூடங்களில் தங்க வைக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது. இந்த விழாவையொட்டி, பள்ளிக் கல்வித் துறையே இப்போது பரபரப்புடன் இயங்கி வருகிறது -இப்படி ஒரு செய்தியைப் படித்ததும்... எதைக் கொண்டு என்னை அடித்துக் கொள்வது என்று யோசிக்க ஆரம்பித்துவிட்டேன். பின்னே... இப்படியெல்லாம் ரூம் போடாமலே விதம்விதமாக யோசிக்கும் புத்திசாலிகள் இருக்கும் நாட்டில், இப்படியொரு முட்டாளாக நாம் இருக்கிறோமே என்ற வெட்கத்தில்தான் அடப்பாவிகளா... எது எதற்குத்தான் விழா எடுப்பது என்கிற விவஸ்தையே இல்லையா...? 18 ஆயிரத்து சொச்சம் பேருக்கும் பணி நியமன ஆணைகளை தபாலில் அனுப்பினால்... முடிந்தது விஷயம். அதைவிடுத்து, எதற்காக இப்படி ஊரைக்கூட்டி அரசாங்க பணத்தை சூறைத்தேங்காய் விடுகிறீர்கள் ஏற்கெனவே நாட்டில் பொருளாதார பிரச்னை என்கிறீர்கள். பிறகு எதற்காக இப்படி ஊரைக் கூட்டி கும்மியடிக்கிறீர்கள்? ஊரிலிருந்து அழைத்து வரும் பஸ் செலவு, தங்க வைக்கும் செலவு, உணவு ஏற்பாடுகள், பந்தல் ஏற்பாடுகள், பாதுகாப்பு ஏற்பாடுகள்.... என அரசு இயந்திரத்தின் ஒட்டுமொத்த திசை திருப்பல்கள் என்று கணக்கிட்டால்... இந்த தடபுடல் ஏற்பாடுகளுக்கான செலவுகள், ஒரு தலைக்கு... குறைந்தது 5,000 ஆயிரம் ரூபாய் என்று வந்து நிற்கும். சத்தியமாக இதைவிட அதிகமாகத்தான் கணக்குக் காட்டுவார்கள். இங்கே மிகக் குறைவாக 2,500 ரூபாய் என்று வைத்தாலே... அஞ்சேகால் கோடி ரூபாய்க்கு மேலே போகிறது (இவர்கள், அஞ்சேகால் கோடியில் இந்த விழாவை முடித்துவிடுவார்கள்?). இதுவே... 5 ரூபாய் ஸ்டாம்ப் ஒட்டினால், ஒரு லட்சம் ரூபாயில் முடிந்துவிடும் ஊரிலிருக்கும் பள்ளிக்கூடங்களுக்கு கட்டடங்கள் இல்லை.. கூரைகள் இல்லை.. குழந்தைகள் உட்கார பெஞ்சகள் இல்லை... ஏன், இவர்களிடம் பணிநியமன ஆணையைப் பெறப்போகிறவர்களில் பலர் உட்காருவதற்கு நாற்காலிகளே கூட இல்லை. இவ்வளவு ஏன், பல ஊர்களில் வகுப்பறைகளே இல்லை... மரத்தடிதான் இதைப் பற்றியெல்லாம் யோசித்து, தீர்வு காண யாருக்கும் யோக்கியதை இல்லை. ஆனால், வாத்தியார் வேலைக்கு ஆர்டர் கொடுக்க... விழாவாம் அடச் சே
Rate this:
Share this comment
Nagarajan Raja - Jurong West,சிங்கப்பூர்
14-டிச-201214:25:04 IST Report Abuse
Nagarajan Rajaசூப்பர்...
Rate this:
Share this comment
LAX - Trichy,இந்தியா
14-டிச-201218:15:57 IST Report Abuse
LAXஒரு திட்டத்தை அதுவும் மக்களுக்கு பெரிதும் பயன்படும் வேலைவாய்ப்பு திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றிவிட்டு அதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுடன் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ளவும் அவர்களைக் கவுரவிக்கும் வகையிலும் ஏற்ப்பாடு செய்ததில் ஒன்றும் தவறில்லையே. அவர்களையும் கவுரவித்து மகிழ்விக்க வேண்டும் அதே சமயம் சென்னையில் உள்ள மக்களின் அன்றாட போக்குவரத்தும் பாதிக்காமல் இருக்க வேண்டும் என்ற நோக்கத்திலேதான் போக்குவரத்து காவல் துறைக்கும் ஒத்துழைத்து இவர்களெல்லோரும் சீக்கிரமாக விழா நடத்தும் இடத்திற்கு அழைத்துவரப்பட்டிருக்கிரார்கள். மேலும் அவரவர் தனித்தனியாக போக்குவரத்து ஏற்ப்பாடு செய்துகொண்டு விழாவில் கலந்து கொள்ளவேண்டும் என்று ஆணை பிறப்பித்திருந்தால் யோசியுங்கள் சென்னை மாநகரின் (அதுவும் போக்குவரத்து நிறைந்த அண்ணா சாலையின்) கதியை. ஆமாம், ஒரு வெற்றிக்களிப்பான இந்த விழா கொண்டாடியதற்கே இவ்வளவு எரிச்சல் படுகிறீறே, ஆட்சியில் இருக்கும்போது தமிழர்களை ஏமாற்றி கபட நாடகம் ஆடிவிட்டு, ஆட்சி மாற்றத்திற்கு பிறகு வெளிநாட்டுக்கு சென்று தபால்காரர் வேலை பார்த்துவிட்டு வந்ததற்காகவே சில நாட்கள் முன்பு அவருக்கு பார்ட்டி வெச்சாங்களே அப்போது எதைக்கொண்டு அடித்துக்கொண்டீரய்யா....? கொஞ்சம் விளக்குங்கள் எல்லோரும் தெரிந்துகொள்வோம்....
Rate this:
Share this comment
Cancel
Jayaraman Duraisamy - Trichy,இந்தியா
14-டிச-201207:25:35 IST Report Abuse
Jayaraman Duraisamy ஜெயலலிதா விளம்பரம் தேடிக் கொள்ள ஆசிரியர்கள் வேலைக்கு தேர்ந்து எடுக்கபட்டவர்களை வதைக்கலாமா?. தபாலில் அனுப்பினால் வேலைக்கு வரமாட்டார்களா?. ஒட்டு போட்டு தேர்ந்தெடுத்து விட்டாலே இவர்கள் ராஜபரம்பரை சேர்ந்தவர்கள் நடந்து கொள்கிறார்கள்.
Rate this:
Share this comment
LAX - Trichy,இந்தியா
14-டிச-201218:03:18 IST Report Abuse
LAXஒரு பயனுள்ள திட்டத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு அதற்காக இவ்வாறு விழா நடத்தி தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரிய பெருமக்களை கவுரவிப்பது அவர்களுக்கும் மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். அவர்களும் "ஏய், நான் சென்னைக்கு போறேன், சென்னைக்கு வேலைக்கான ஆர்டர் வாங்கப்போறேன்" என்று உறவினர்களிடமும், அக்கம்பக்கத்தாரிடமும் மகிழ்ச்சியுடன் தெரிவிக்க ஒரு சந்தர்ப்பம் அமைந்துள்ளது. இதொன்றும் சாதாரண 100 நாள் வேலைத்திட்டம் இல்லை அல்லது எப்போதோ எங்கேயோ ஒன்றிரண்டு நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது போலல்ல. இது ஒரு மாஸ். சும்மா வேண்டுமென்றே ரொம்ப குற்றம் கூறக்கூடாது....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X