பொது செய்தி

தமிழ்நாடு

கொய்யா மரங்கள் வெட்டி சாய்ப்புமாவுப்பூச்சி தாக்குதலால் விரக்தி

Added : ஆக 12, 2010 | கருத்துகள் (1)
Advertisement

பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி பகுதியில் மாவுப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த முடியாததால், விரக்தி அடைந்த விவசாயிகள் கொய்யா மரத்தை அடியோடு வெட்டி சாய்த்து வருகின்றனர். சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி யூனியன் பகுதிக்கு உட்பட்ட மல்லூர், மேட்டூர், பள்ளித்தெருப்பட்டி,பெரமனூர், காளியாகோவில் புதூர், திப்பம்பட்டி, நல்லியாம்புதூர், அடிக்கரை உள்ளிட்ட இடங்களில் 1,000 ஏக்கர் பரப்பளவில் கொய்யா பயிரிட்டப்பட்டுள்ளது. நாள்தோறும் அறுவடை செய்யப்படும் கொய்யாவை மல்லூரில் செயல்பட்டுவரும் தினசரி கொய்யா மார்க்கெட்டில் விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர். மல்லூரில் கொள்முதல் செய்யப்படும் கொய்யா  கேரளா, கோவை, நாமக்கல், ஈரோடு, திருச்சி, தர்மபுரி, பெங்களுரூ உள்ளிட்ட வெளி இடங்களுக்கு விற்பனைக்கு செல்கிறது. சீஸன் நாட்களில் நாள்தோறும் 10 டன்னுக்கும் மேற்பட்ட கொய்யா வெளி இடங்களுக்கு விற்பனைக்கு செல்வது வழக்கம்.


ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதத்தில் கொய்யா அறுவடை துவங்கி தொடர்ந்து மூன்று மாதம் வரையில் வரத்து இருக்கும். தற்போது, கொய்யாவில் மாவுப்பூச்சி தாக்குதல் தீவிரம் அடைந்துள்ளதால், கொய்யா விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. கொய்யா மரத்தின் இலைகள் சுருண்டும், கறுப்பாகவும் மாறி, மொக்குகள் தோன்றும் கொழுந்து பகுதியில் மாவுப்பூச்சிகள் கும்பலாக ஒட்டி கொள்கின்றன. பூக்களில் இருந்து தோன்றும் பிஞ்சுகளில் மாவுப்பூச்சிகள் அமர்ந்து பிஞ்சுகளில் இருக்கும் சத்துகளை உறிஞ்சி எடுத்து விடுகின்றன. பிஞ்சுகள் பெரிதாகும்போது கொய்யா காய்கள் முழுவதிலும் கரும்புள்ளிகள், வெடிப்புகள் தோன்றி சாப்பிட முடியாத அளவிற்கு சேதம் அடைந்துவிடுகின்றன. மாவுப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த முடியாததால், விரக்தி அடைந்த விவசாயிகள் கொய்யா மரத்தை அடியோடு வெட்டி சாய்த்து வருகின்றனர். உலகரைமேடு, பெரமனூர், பள்ளித்தெருப்பட்டி, மல்லூர் உள்ளிட்ட பகுதியில் கொய்யா மரத்தை டன்  1,500 ரூபாய் என விலை பேசி செங்கல் சூளைக்கு வெட்டி விற்கின்றனர்.


விவசாயிகள் கூறுகையில், ""பத்து ஆண்டுகளாக பலன் கொடுத்து வந்த கொய்யா மரங்களை மாவுப்பூச்சி தாக்கி சேதப்படுத்திவிட்டன. எந்த பூச்சிகொல்லி மருந்துக்கும் கட்டுப்படாமல், தொடர்ந்து நோய் தாக்குதல் அதிகரித்து வருகிறது. மாவுப்பூச்சி தாக்குதலில் இருந்து  ஒரு கொய்யா  பிஞ்சுகள் கூட  தப்பவில்லை. அதனால் ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் வரையில் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மரத்தில் காய்களுக்கு பதிலாக மாவுப்பூச்சி கொத்து கொத்தாக பரவி உள்ளதால், கொய்யா மரத்தை அடியோடு வெட்டி, செங்கல் சூளைக்கு விற்பனை செய்கிறோம்,'' என்றனர். ஊராட்சி ஒன்றிய பகுதிக்கு உட்பட்ட மக்கள் முகாமில் பங்கேற்று பயன்பெறலாம்.


Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சுந்தர ராஜன் - சலாலா,ஓமன்
12-ஆக-201014:02:29 IST Report Abuse
சுந்தர ராஜன் கொய்யா மரங்களை வெட்டியது தவறு.நீங்கள் அரசு வேளாண் அலுவலரை அணுகினால் அவர் உங்களுக்கு ஆலோசனை வழங்கி இருப்பார்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X