பொது செய்தி

தமிழ்நாடு

பாக்குத் தோப்பில் ஊடு பயிராககாஃபி செடி வளர்க்கும் விவசாயி

Added : டிச 17, 2012
Advertisement

ராசிபுரம்: ராசிபுரம் அருகே பாக்குத் தோப்பில், ஊடு பயிராக, காஃபி செடி பயிரிடப்பட்டு வருகிறது.நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் தொ.ஜேடர்பாளையம் அருகே ஒசைக்கரையான் ஊற்று உள்ளது. கொல்லிமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள இப்பகுதியை சேர்ந்தவர் வக்கீல் குமார்.அவருக்கு சொந்தமான மூன்று ஏக்கர் நிலத்தில், பாக்கு மரங்களை நட்டு பராமரித்து வருகிறார். பாக்கு மரத்தின் இடையே, ஊடுபயிராக, காஃபி செடி வளர்க்க முடிவு செய்தார். நாமகிரிப்பேட்டை தோட்டக்கலை துறை மூலம், 3,000 காஃபி செடிகளை பெற்று, அதை, பாக்கு மரத்தின் இடையே ஊடுபயிராக பயிரிட்டுள்ளார். இந்த காஃபி செடிகள், இரண்டரை ஆண்டுகளில் பலன் தரக்கூடியது.இந்த காஃபி செடி வளரும்போது, அதன் இலைகள், நன்கு படர்ந்து, நிழலைத் தருவதுடன், அப்பகுதியில் நல்ல குளிர்ச்சியை தரும் தன்மை கொண்டது. அதனால், பாக்கு மரத்துக்கு தண்ணீர் பாய்ச்சும் போது, தண்ணீர் ஆவியாகாமல், காஃபி செடி பார்த்துக்கொள்கிறது.
மேலும், கூலி ஆட்களை வைத்து களை எடுக்கும் வேலையும் மிகக்குறைவு. பருவ நிலைக்கு ஏற்ப காஃபி செடியின் இலைகள் உதிரும். அவ்வாறு உதிரும் இலைகள், பாக்கு மரத்துக்கு நல்ல தழைச்சத்து உரமாக மாறுகிறது. காஃபி செடிக்கு என்று தனியாக தண்ணீர் பாய்ச்ச வேண்டும் என்ற கவலையும் இல்லை.வக்கீல் குமார் கூறியதாவது:மூன்று ஏக்கர் பரப்பில், பாக்கு மரம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அதில், ஊடுபயிராக காஃபி செடியை வளர்க்க முடிவு செய்தேன். அதை சம்பந்தப்பட்ட தோட்டக்கலை துறையினரிடம் ஆலோசனை பெற்று, 3,000 காஃபி செடியை வாங்கி பயிரிட்டுள்ளேன்.இப்பயிர் இரண்டரை ஆண்டுகளில் பலன் தரக்கூடியது. அதற்காக தனியாக தண்ணீர் பாய்ச்ச வேண்டியதில்லை. ஒரே நேரத்தில் தண்ணீர் பாய்ச்சும்போது, இரண்டு பயிர்களுக்கும் சென்றடைகிறது. வேலை ஆட்களும் அதிகம் தேவையில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X