ஆன்டர்சன் விடுவிப்பில் ராஜிவுக்கு தொடர்பே இல்லை: சிதம்பரம்

Updated : ஆக 14, 2010 | Added : ஆக 12, 2010 | கருத்துகள் (31)
Share
Advertisement

புதுடில்லி : ""போபால் விஷவாயு கசிவு தொடர்பான வழக்கில், யூனியன் கார்பைடு நிறுவனத்தின் முன்னாள் தலைவர் வாரன் ஆன்டர்சனை விடுவித்ததில் அப்போதைய பிரதமர் ராஜிவுக்கு எந்தத் தொடர்பும் இல்லை,'' என மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.


போபால் விஷவாயு கசிவு வழக்கின் முக்கிய குற்றவாளியான, யூனியன் கார்பைடு நிறுவனத்தின் அப்போதைய தலைவர் வாரன் ஆன்டர்சனை, மத்திய உள்துறை அமைச்சகத்தின் நெருக்கடியின் பேரிலேயே விடுவித்தோம் என, மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான அர்ஜுன் சிங் நேற்று முன்தினம் ராஜ்யசபாவில் தெரிவித்தார்.  இது தொடர்பான விவாதம், ராஜ்யசபாவில் நேற்றும் நடைபெற்றது. அப்போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜெட்லி, போபால் விஷவாயு சம்பவம் நடந்த அன்றிரவு என்ன நடந்தது, வாரன் ஆன்டர்சன் எப்படி தப்பினார் என கேள்வி எழுப்பினார்.


இதற்கு பதிலளித்து சிதம்பரம் பேசியதாவது: கடந்த 2001ல் சட்ட அமைச்சராக இருந்த அருண் ஜெட்லி அப்போதே இந்த கேள்வியை கேட்டிருந்தால், அதிகாரத்தில் இருக்கும் பட்சத்தில் எளிதாக விடை கிடைத்திருக்கும். ஆனால், அவரது நோக்கம் அதுவல்ல; மாறாக, ராஜிவுக்கு களங்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது தான். ஆன்டர்சனை கைது செய்ய வேண்டும் என முடிவு எடுத்தது அப்போதைய மாநில முதல்வராக இருந்த அர்ஜுன் சிங் தான். இது தொடர்பாக அவர், ராஜிவ் உட்பட யாருடனும் கலந்தாலோசிக்கவில்லை. ஆன்டர்சனை, ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என, மத்திய உள்துறை அமைச்சகத்திலிருந்து தொடர்ந்து தொலைபேசி அழைப்புகள் வந்ததாக அர்ஜுன் சிங் தெரிவித்திருந்தார். ஆனால், அவ்வாறு செய்யப்பட்ட தொலைபேசி அழைப்புகளுக்கான எந்தவொரு ஆதாரமும் இல்லை. பத்திரிகைகளிலும் ஒவ்வொரு விதமாக செய்திகள் வெளியாகின. இதில், ஆன்டர்சனை தப்பவிட்டதில் ராஜிவுக்கு எந்தவிதமான பங்கும் இருப்பதாக தெரியவில்லை என, ஒரு பத்திரிகை தெரிவித்திருந்தது. ஆன்டர்சனை விசாரணைக்காக இந்தியாவிடம் ஒப்படைக்க முடியாது என்பது தொடர்பாக அமெரிக்கா தெரிவித்த கருத்தை, இதற்கு முன் அதிகாரத்தில் இருந்த தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையிலான அரசு ஏற்றுக்கொண்டது. விஷவாயு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்ந்து இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும். வாரன் ஆன்டர்சனை விசாரணைக்காக ஒப்படைக்கும்படி அமெரிக்காவிடம் இந்தியா தரப்பில் கேட்டுக் கொள்ளப்படும். இவ்வாறு சிதம்பரம் பேசினார்.


அருண் ஜெட்லி (பா.ஜ.,) பேசுகையில், "யூனியன் கார்பைடு நிறுவனத்தின் முன்னாள் தலைவர் வாரன் ஆன்டர்சனை விடுவிக்க வேறு கிரகத்திலிருந்து அழைப்பு வந்ததா? ஆன்டர்சனை விசாரணைக்காக இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டுமென, தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பல முயற்சிகளை எடுத்தது. ஆனால், கடந்த 84 முதல் 98 வரை ஆட்சியில் இருந்த காங்கிரஸ், இது தொடர்பாக எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை' என்றார்.


சீதாராம் யெச்சூரி (மார்க்.,) பேசுகையில், "கடந்த 84ம் ஆண்டு நடந்த விவகாரம் தொடர்பான எந்தவொரு ஆவணங்களும் அரசிடம் இல்லை; மாறாக, ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் என்ன நடந்தது என்பது தொடர்பான விவரங்கள் மட்டும் கிடைக்கின்றன' என்றார். இதற்கிடையே, மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் அர்ஜுன் சிங், யாரையோ காப்பாற்ற முயலுகிறார் என, அம்மாநிலத்தின் தற்போதைய முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.


பா.ஜ., கேள்வி: மத்தியப் பிரதேச பாரதிய ஜனதா தலைவர் பிரபாத் ஜா குறிப்பிடுகையில், "அர்ஜுன் சிங் கூறும் நபர்கள் தற்போது யாரும் உயிருடன் இல்லை. அப்போதைய உள்துறை அமைச்சர் நரசிம்மராவோ, மாநில தலைமைச் செயலர் பிரம்ம ஸ்வரூப்போ தற்போது இல்லை. எனவே, ராஜிவுக்கு பதிலாக அவர்கள் மீது அர்ஜுன் குறை கூறுகிறார். வாரன் ஆன்டர்சனை விடுவிக்க விருப்பமில்லை என கூறும் அர்ஜுன் சிங், மாநில அரசின் விமானத்தில் ஆன்டர்சன் செல்ல எப்படி அனுமதியளித்தார். அர்ஜுன் சிங் இந்த கருத்தின் மூலம் தனது முட்டாள்தனத்தை வெளிப்படுத்தியுள்ளார்' என தெரிவித்துள்ளார்.


Advertisement
வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bala - chennai,இந்தியா
17-ஆக-201012:47:11 IST Report Abuse
bala all the congress man say that rajiv gandhi is not aware the release of anderson, and arjun singh said that beacuse the pressue from the home ministry mr anderson was released we want to know that homeminister is powefull than prime minister
Rate this:
Cancel
Ramesh - Alkhobar,இந்தியா
13-ஆக-201023:06:39 IST Report Abuse
Ramesh மிஸ்டர்.கத்திரவன் அப்படியென்றால் நரசிமராவ் உன்னத மனிதர் இல்லையா ,உள் துறை செயலர் நல்லவர் இல்லையா ஏன் அவர்களை மட்டும் அர்ஜுன் சிங்க் குற்றம் சாட்ட வேண்டும் ,இறந்துவிட்டால் அவர் செய்து விட்ட செயல்கள் எல்லாம் மன்னிக்கபட வேண்டுமா?அவரது அரசியல் வாரிசுகளும் அந்த அடியை யோற்றிதானே பயணிக்கிறார்கள்? நாளை இன்னொரு ஆன்தர்சன் தப்பிக்க கூடாது என்பதால் தன் இவ்வளவு குட்ட்ரச்சட்டுகலு.எனது நண்பன் ஒருவன் ஒரே ஒரு கொலை செய்துவிட்டு அதுவும் தர்காப்புகாக ஜெயிலுக்கு சென்றுல்ளான். தயவு செய்து அவனை விடுவிக்க உங்களை மாதிரி அறிவுஜீவிகள் நிறைய எழுதுங்கள்.
Rate this:
Cancel
ச. subramanyan - mumbai,இந்தியா
13-ஆக-201021:17:04 IST Report Abuse
ச. subramanyan PC's efforts are more for getting a rosy opicture in our history for Rajiv Gandhi than getting Diow-Union Carbide to foot the buill in full for damages caused. Not many know that the Finance Minsitry of which Mr. Chidamabram was the ocupant until recently, not only missed using their good officers to force Dow to foott the bill in full but also gifted to Dow a project in PUne for -of all the gings- to researdch in poiso nous gases and chemicalds. Thanks to the agitation of farmers at PUne this was stop[ped. Even now Dow is making all its attemepts to reevaluate this dirty project. People will not be foooled by this overzealous pro-American policies of our UPA Government.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X