இந்தியாவில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதி : அமெரிக்கா எச்சரிக்கை

Updated : ஆக 13, 2010 | Added : ஆக 13, 2010 | கருத்துகள் (36)
Share
Advertisement

வாஷிங்டன் : இந்தியா மற்றும் பாகிஸ்தானில் பெரிய அளவில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டியிருப்ப‌தாகவும், அதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. பயங்கரவாத அச்சுறுத்தல் குறித்த சர்வதேச எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அமெரிக்கா : அமெரிக்கர்கள் அதிகம் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இந்தியா, பாகிஸ்தான், மத்திய கிழக்கு நாடுகளை குறி வைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும், அமெரிக்க சுற்றுலாப் பயணிகள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அறிவுறுத்தியுள்ளது. மேலும் இந்த நாடுகளில் பணி நிமித்தமாக தங்கியிருக்கும் அமெரிக்க அரசு அதிகாரிகளுக்கும் அச்சுறுத்தல் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.


இந்தியாவை பொறுத்த வரை நட்சத்திர ஓட்டல்கள், ரயில்கள், ரயில் நிலையங்கள், மார்க்கெட்டுகள், சினிமா தியே‌ட்டர்கள். ரெஸ்டாரன்டுகள் ஆகியவற்றை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்கக் கூடும் என அந்த எச்சரிக்கையில் கூறப்பட்டுள்ளது.


ராக்கெட் தாக்குதல் ! பயங்கரவாதிகள் வாகனத்தில் வெடி குண்டு வைத்தோ, ராக்கெட் ஏவியோ தாக்குதல் நடத்தலாம் என்றும், அமெரிக்கர்கள் கடத்தப்படலாம் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Advertisement




வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜலீல் சவுதி - அல்ஹஸ்ஸா,இந்தியா
14-ஆக-201014:03:47 IST Report Abuse
ஜலீல் சவுதி வரப்போகும் ஆபத்தை உணர முடியாத அளவுக்கு இந்திய உளவு துறை ஒன்றும் திறமை அற்றதல்ல..முன்கூட்டியே ஜோசியம் சொல்லும் இவர்களால்தான் இக்காரியம் நடக்கிறதோ என்று சந்தேகம் ஏற்படுகிறது .. உளவு துறை கவனமாக இருக்கவேண்டும் ...
Rate this:
Cancel
ராஜ் - singapre,இந்தியா
14-ஆக-201009:41:43 IST Report Abuse
ராஜ் ,இந்தியா உலகின் எதிரி அமெரிக்கா இந்தியாவின் எதிரி காங்கரஸ்... ரியல் hit
Rate this:
Cancel
raj - singapore,இந்தியா
14-ஆக-201009:39:58 IST Report Abuse
raj waste government in our country
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X