ஜல்லிக்கட்டு போட்டி தேவையா?பரிசீலிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு

Added : ஆக 13, 2010 | கருத்துகள் (3)
Share
Advertisement
ஜல்லிக்கட்டு  போட்டி தேவையா?பரிசீலிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு

புதுடில்லி :"ஜல்லிக்கட்டு போட்டியை ஜனவரி மற்றும் பிப்ரவரி என, இரண்டு மாதங்கள் மட்டுமே நடத்த வேண்டும். இதுபற்றி பரிசீலித்து ஆறு வாரத்திற்குள் தமிழக அரசு முடிவெடுக்க வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.


தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது. கடந்த ஜூலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, "ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் மே வரை ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுகிறது. இதனால், திருவிழா காலங்களில் மட்டும் நடத்தப்படும் போட்டி என்ற அதன் தன்மை மாறி விடுகிறது. எனவே, ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தெரிவித்தது.


இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் ரவீந்திரன், கோகலே ஆகியோர் அடங்கிய சுப்ரீம் கோர்ட் பெஞ்ச் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.


அப்போது நீதிபதிகள் கூறியதாவது:ஜல்லிக்கட்டு போட்டி தற்போது ஐந்து மாதங்களுக்கு நடத்தப்படுகிறது. அதை ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் மட்டுமே நடத்த வேண்டும். அதற்கேற்ற வகையில் தமிழக அரசு கட்டுப்பாடு விதிக்க வேண்டும். இதுதொடர்பான முடிவை தமிழக அரசு ஆறு வாரங்களுக்குள் எடுக்க வேண்டும். மேலும், ஜல்லிக்கட்டு போட்டிக்கான லைசென்ஸ் கட்டண டிபாசிட்டை இரண்டு லட்சத்தில் இருந்து 20 லட்சம் ரூபாயாக உயர்த்துவது குறித்தும் மாநில அரசு பரிசீலிக்க வேண்டும்.ஜல்லிக்கட்டு என்பது ஒரு தொழிற்சாலை போல உருவாகிக் கொண்டிருக்கிறது. இந்த போட்டியின் போது, விலங்குகளுக்கு மது கொடுப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஜல்லிக் கட்டு போட்டி மற்றும் அதற்கான விதிமுறைகள் தொடர்பாக தமிழக அரசு சட்டம் ஒன்றை இயற்றியுள்ளது. இந்தச் சட்டமானது, ஜல்லிக்கட்டு போட்டியை முறைப்படுத்த மட்டுமின்றி, அதை படிப்படியாக ஒழிக்க வேண்டும் என்பதற்காகவும் உருவாக்கப்பட்டது. எனவே, இந்தப் போட்டிகள் நடக்கும் கால அளவை கட்டுப்படுத்த வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்தனர்.


Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
C Suresh - Charlotte,யூ.எஸ்.ஏ
14-ஆக-201019:11:44 IST Report Abuse
C Suresh One person trying to fight with a bull is a healthy sport. Many joining together to torture the bull is cruelty. Jallikattu should continue with modified rules.
Rate this:
Cancel
Neelamegam - Pudukkottai,இந்தியா
14-ஆக-201012:33:40 IST Report Abuse
Neelamegam Jallikattu is a only one famous festival for us, if we ask stop some festival which was happening since 1000 years pack, It is not possbile. Still most of people, They treating the bull as a God and as a member of their family. Goverment should not ban, Something already mixed in our blood. Jallikattu will happen without any issue. Goverment should conduct a voting survey,if majority of people not interested, then ban it,I am sure 98% people will support Jallikattu.
Rate this:
Cancel
ஹ.Lakshminarayanan - Chennai,இந்தியா
14-ஆக-201007:56:17 IST Report Abuse
ஹ.Lakshminarayanan ITs a particular people interest and no one is forced and it has to be continued and it brings the traditional and it will disturb particular religion activities.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X