தமிழகத்தின் புதிய தலைநகரம் "திருச்சி': எம்.ஜி.ஆர்., கனவை நிறைவேற்றுவரா ஜெ.,

Updated : ஆக 13, 2010 | Added : ஆக 13, 2010 | கருத்துகள் (149) | |
Advertisement
திருச்சி: "தமிழகத்தின் புதிய தலைநகர் திருச்சி என்ற எம்.ஜி.ஆரின் கனவை அ.தி.மு.க., பொதுச் செயலாளர் ஜெயலலிதா நிறைவேற்றவேண்டும்' என, திருச்சி மாவட்ட அ.தி.மு.க.,வினர் விரும்புகின்றனர். நிகழ்காலத்துக்கு மட்டுமல்லாது எதிர்காலத்துக்கும் நன்மை தரக்கூடிய பல அரிய திட்டங்களை செயல்படுத்தியவர் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். அவரின் மனதில் உதித்த திட்டம், தலைநகராக திருச்சியை

திருச்சி: "தமிழகத்தின் புதிய தலைநகர் திருச்சி என்ற எம்.ஜி.ஆரின் கனவை அ.தி.மு.க., பொதுச் செயலாளர் ஜெயலலிதா நிறைவேற்றவேண்டும்' என, திருச்சி மாவட்ட அ.தி.மு.க.,வினர் விரும்புகின்றனர்.


நிகழ்காலத்துக்கு மட்டுமல்லாது எதிர்காலத்துக்கும் நன்மை தரக்கூடிய பல அரிய திட்டங்களை செயல்படுத்தியவர் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். அவரின் மனதில் உதித்த திட்டம், தலைநகராக திருச்சியை மாற்றுவது. தமிழக தலைநகர் சென்னையின் அசுர வளர்ச்சியைக் கண்டு அசந்து நின்றவர்களில் அவரும் ஒருவர். அதன் விளைவாக ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல், நீர், நிலம், காற்று மாசுக்கு நிரந்தர தீர்வு காணவேண்டும் என்று விரும்பினார்.அதைவிட முக்கியமாக, தமிழகத்தின் ஒரு முனையில் இருக்கும் சென்னையின் தலைமைச் செயலகத்துக்கு, தென்முனையாம் கன்னியாகுமரியில் இருந்து மக்கள் வருவது மிகவும் சிரமமானதாக இருப்பதை மாற்ற நினைத்தார்.


சென்னையின் நெரிசலுக்கு நிரந்தர தீர்வு மற்றும் தலைமைச் செயலகத்துக்கு எளிதாக மக்கள் வர, தமிழகத்தின் நடு மையத்தில் இருக்கக்கூடிய திருச்சியை தலைநகரமாக வைத்துக் கொள்ள திட்டமிட்டார். பராம்பரிய பெருமைமிக்கதும், பழமையான நகரமாக போற்றக்கூடியதாகவும் உள்ள திருச்சி, அதற்கு தகுதியான நகரம் என்று அவர் கருதினார். 1983ல் திருச்சியை தலைநகரமாக்கும் திட்டத்தை அறிவித்தார். தற்போதைய முதல்வர் கருணாநிதி உட்பட எதிர்க்கட்சியினர் எவ்வித காரணமும் இன்றி அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதையும் மீறி, திருச்சியை தலைநகராக்குவதில் எம்.ஜி.ஆர்., உறுதியாக நின்றார். அண்ணாநகர் நவல்பட்டில், தலைமைச் செயலகத்தின் ஒரு பகுதி அமைக்க தீவிர முயற்சி எடுத்தார். திருச்சி வந்தால் தான் தங்குவதுக்கு, உறையூர் கோணக்கரையில் பங்களா கட்டினர்.திடீரென அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. அப்போதைய அரசியல் சூழ்நிலை, இந்திராகாந்தி இறப்பு, தேர்தல் போன்ற காரணங்களினால் திருச்சியை தலைநகரமாக்கும் திட்டத்தை அவரால் நிறைவேற்ற முடியாமல் போனது.


"எம்.ஜி.ஆர்., ஒன்றை நினைத்து, அது நிறைவேறாத மாபெரும் திட்டம் இதுவாக மட்டும் தான் இருக்கும்' என்று அவரின் இறப்பை நினைவு கூறுகின்றனர் திருச்சி மாவட்ட அ.தி.மு.க., மூத்த நிர்வாகிகள். "சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இருந்து, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில், புதிதாக 780 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட புதிய சட்டசபையில், நான் முதல்வராக பொறுப்பேற்றால் செல்லமாட்டேன். என் ஆட்சியில் செயின்ட்ஜார்ஜ் கோட்டையில் தான் சட்டசபை தொடரும்' என, ஜெயலலிதா அறிவித்திருக்கிறார். பழைய தலைமைச் செயலகத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் ஜெயலலிதா, புதிய தலைநகர் திட்டத்துக்கு ஆதரவளிப்பார் என்று கட்சியினர் நம்புகின்றனர்.


எம்.ஜி.ஆரின் கனவை நிறைவேற்றும் வகையில், ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பேற்றால், திருச்சியை தமிழகத்தின் தலைநகரமாக்க வேண்டும் என்று அக்கட்சியினர் விரும்புகின்றனர். தென்மாவட்ட மக்களின் விருப்பத்தை நன்கு அறிந்து வைத்திருக்கும் ஜெயலலிதா, குறைந்தது தென்மாவட்டங்களின் தலைநகராகவாவது திருச்சியை அறிவிக்க வேண்டும் என்பது அனைத்துத் தரப்பு மக்களின் விருப்பம். இன்று திருச்சியில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் இது பற்றிய அறிவிப்பை ஜெயலலிதா வெளியிடுவார் என அ.தி.மு.க., தொண்டர்கள் எதிர்பார்க்கின்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (149)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
amal - chennai,இந்தியா
14-ஆக-201020:19:32 IST Report Abuse
amal So when are you the dumb uneducated jobless idiots going to change the capital from Delhi to Gwalior in MP, because you want it in the centre of a circle. you stupid people will never change. இதை தமிழுலும் எழுதறேன். அட வேலையில்லாத மக்களே, எப்பொழுது நீங்கள் இந்திய தலைநகரத்தை டெல்லியிலிருந்து குவாலியர், மத்தியப்பிரதேசத்திர்க்கு மாற்றுவீர்கள். எல்லாம் மத்தியில் இருக்கவேண்டும் என்பதிற்க்கு அவசியம் இல்லை. இது கம்ப்யூட்டர் கணிபொறி காலம், முட்டாள் மக்களே. உங்களை எல்லாம் மாற்றவே முடியாது.
Rate this:
Cancel
amal - chennai,இந்தியா
14-ஆக-201019:58:25 IST Report Abuse
amal Stupid politicians have nothing else to do but change capitals, change the name of cities. Idiots, do something useful instead of being Muhammad bin Tukhlaq. What else my high school educated politicians....Oh wait... Let's make Jaffna the capital of TN. போங்கடா
Rate this:
Cancel
கதிரவன் - மும்பை,இந்தியா
14-ஆக-201019:12:40 IST Report Abuse
கதிரவன் அல்லோ பிரபா, MGR நிர்மலாவை MLC ஆக்க முயற்சித்ததை நான் குறை சொல்லவில்லை. அது முடியாமல் போன அற்ப காரணத்துக்காக வழி வழியாக வந்த ஒரு அரசியல் ஸ்தாபனத்தை (மேல்சபையை) கலைத்ததைத்தான் நான் குறை கூறினேன். மனதில் வெறியை ஏற்றிக்கொண்டால் விஷயம் எப்படி விவரமாய் புரியும்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X