சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிவகாசி பட்டாசு விபத்தில் நடந்தது என்ன?: "பகீர்' மரண வாக்குமூலம்

Updated : ஆக 15, 2010 | Added : ஆக 13, 2010 | கருத்துகள் (21)
Share
Advertisement

மதுரை : சிவகாசி பட்டாசு விபத்தில் காயமடைந்தவர்களில் நேற்று இன்ஸ் பெக்டர், எஸ்.ஐ., உட்பட 4 பேர் பேர் இறந்ததை தொடர்ந்து, பலி எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது. சம்பவத்தன்று நடந்தது என்ன என்பது குறித்து, மாஜிஸ்திரேட்டிடம் அளித்த மரண வாக்குமூலத்தின்மூலம் பல்வேறு அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகிஉள்ளன.


சிவகாசி வீ.மீனாட்சிபுரம் கிராமத்தில், ராமசுப்பு என்பவர் தோட்டத் தில், மோட்டார் பம்பு செட் அறையில் பதுக்கி வைத்திருந்த கருந்திரிகளை ஆக.,10ல் போலீசார், வருவாய் துறையினர் அகற்றும்போது வெடி விபத்து ஏற்பட்டது. இதில் சாத்தூர் நகர் இன்ஸ் பெக்டர் அப்துல்லத்தீப், எஸ்.ஐ., ரமேஷ் மற்றும் போலீசார் கணேசன், ஆசைக்கனி, வருவாய் ஆய்வாளர்கள் ராஜேஷ் கண்ணா, ராஜ்மோகன், சந்திரசேகரன், கணஞ்சாம் பட்டி வி.ஏ.ஓ., குமாரசாமி காயமடைந்தனர். இவர்கள் மதுரை தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சேர்க்கப் பட்டனர். இதில் வி.ஏ.ஓ. குமாரசாமி(50), சந்திரசேகரன் அடுத்தடுத்து பலியாயினர். நேற்று இன்ஸ் பெக்டர் அப்துல்லத்தீப் (57) ஆயுதப்படை எஸ்.ஐ., ரமேஷ்(31), போலீஸ்காரர் கணேசன்(27), வருவாய் ஆய்வாளர் ராஜேஷ் கண்ணா(34) பலியாயினர். பிரேத பரிசோதனைக்கு பின், உறவினர் களிடம் உடல் ஒப்படைக்கப் பட்டது. இதில், அப்துல் லத்தீப் நேற்று மாலை இறந்ததால், அவரது உடல் இன்று பிரேத பரிசோதனைக்கு பின் ஒப்படைக்க படும்.


நேற்று காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய பின், நிருபர்களிடம் விருதுநகர் வருவாய்த்துறை அலுவலர் சங்கத் தலைவர் பிச்சையா கூறுகையில், ""வெடிவிபத்து சம்பவத் திற்கு அரசு எவ்வித அனுதாபமும், இரங்கலும் தெரிவிக்கவில்லை. இது வருத்தப்படக்கூடியது. இச்சம்பவம் குறித்து முதல்வர் கருணாநிதியின் கவனத்திற்கு கொண்டு செல்வோம்,'' என்றார். இறந்தவர்களில் சிலர் ஆக., 11ல் மாஜிஸ்திரேட் டிடம் மரண வாக்குமூலம் அளித்துள்ளனர். அவர்கள் கூறியதாவது: சம்பவத்தன்று, கருத்திரிகளை "கோடவுனில்' இருந்து வெளியே கொண்டு வந்து வைத் தோம். அதை அகற்றுமாறு ஆர்.டி.ஓ., கொம்பையன் உத்தரவிட்டார். அதற்குள் அவருக்கு மொபைல் போனில் அழைப்பு வந்ததால், பேசியவாறே 20 அடி தூரம் தள்ளி சென்றார். சில நொடிகளில் இன்ஸ் பெக்டர் அப்துல்லத்தீப் பிற்கு வீட்டில் இருந்து மொபைல் போன் அழைப்பு வந்தது. அவரும் பேசியவாறே 10 அடி தூரம் தள்ளி சென்றார்.


இந்நிலையில் வி.ஏ.ஓ., குமாரசாமி, திரிகளை அகற்றும்போது திடீரென்று வெடிவிபத்து ஏற்பட்டத்தில் காயமடைந்தோம். வெடி மருந்துகளை எப்படி அகற்றவேண்டும் என்ற நுட்பத் தை வருவாய் ஆய்வாளர் ராஜ்மோகன் அறிந்திருந்தார். முறைப்படி அகற்றுவதற்குள் வி.ஏ.ஓ., அவசரப்பட்டதால், விபத்து ஏற்பட்டது என தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்களில் குமாரசாமி, விபத்தின் போது ஏற்பட்ட கரும்புகையை சுவாசித்ததால், நுரையீரலில் பாதித்து முதலில் இறந்தார்.


உரிமையாளர் கோர்ட்டில் சரண்: தீ விபத்து காரணமாக, பட்டாசு குடோன் உரிமையாளர் சாத்தூர் ஜே.எம்., 2 கோர்ட்டில் சரண் அடைந்தார். தீவிபத்தில் பலியான ஆர்.ஐ., ராஜேஷ்கண்ணா உடல், அவரது சொந்த ஊரான பனையடிப்பட்டி அடுத்த கண்டியாபுரத்தில் அடக்கம் செய்யப்பட்டது. ஆர்.டி.ஓ., அலுவலகம், தாலுகா அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர். போலீஸ்காரர் கணேசன் உடல் கோவிந்தநல்லூரிலும், எஸ்.ஐ., ரமேஷ் உடல் மம்சாபுரத்திலும் போலீஸ் மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது.


சரண்: அனுமதியின்றி பட்டாசு திரி தயாரித்து குடோனில் பதுக்கிய வீ.மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராமசுப்பு, சாத்தூர் ஜே.எம்., 2 கோர்ட்டில் சரணடைந்தார். இவரை 15 நாள் காவலில் வைக்க, மாஜிஸ்திரேட் சுபத்திரா உத்தரவிட்டார்.


ஆர்.டி.ஓ., வை கைது செய்ய கோஷம்: பட்டாசு திரி ஆலை தீவிபத்தில் சிக்கி, இறந்த சிவகாசி ஆயுதப்படை எஸ்.ஐ., ரமேஷின் உடல் மம்சாபுரத்திற்கு நேற்று மதியம் கொண்டு வரப் பட்டது. அங்கு டி.ஐ.ஜி., சந்திப் மிட்டல், உட்பட போலீஸ் அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். டி.ஐ.ஜி., மரியாதை செலுத்த வந்தபோது, ரமேஷின் உறவினர்கள் ஆர்.டி.ஓ., கொம்பையனை கைது செய்ய வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். அவர்களை போலீசார் சமாதானப்படுத்தினர்.


அலுவலகங்கள் சோகம்: ஆக.,12 ல் இருவர் பலியாகினர். நேற்று 13 ம்தேதி அதிகாலை 4 முதல் காலை 8 மணிக்குள் ஆர்.ஐ., ராஜேஷ் கண்ணா, சிவகாசி ஆயுதப்படை எஸ்.ஐ., ரமேஷ், விருதுநகர் ஆயுதப்படை போலீஸ் காரர் கணேசன் இறந்தனர். மாலை 4.40 க்கு இன்ஸ் பெக்டர் அப்துல் லத்தீப் இறந்தார். நான்கு பேரும் அடுத்தடுத்து இறந்ததால், சிவகாசி தாலுகா அலுவலகம், ஆர்.டி.ஓ., அலுவலகங்கள் சோகத்தில் முழ்கின.


Advertisement
வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ffsf - madurai,இந்தியா
16-ஆக-201021:46:14 IST Report Abuse
ffsf தமிழகத்தில் போலீஸ் துறையும் வருவாய் துறையும் எவ்வளவு சீர்கெட்டு உள்ளது நன்கு புரிகிறது.
Rate this:
Cancel
ஹசன் பசரி - கூத்தாநல்லூர்,இந்தியா
14-ஆக-201023:17:16 IST Report Abuse
ஹசன் பசரி நம்ம இதையெல்லாம் சீக்கிரம் மறந்துட்டு அடுத்து பரபரப்பான செய்தி என்னவென்று பார்க்க வேண்டும்.டெய்லி நாலஞ்சு உசுரு போகத்தான் செய்யும் அதுக்காக 'தீ'வாளி கொண்டாட வெடி பட்டாசு வேண்டாமா ?தெய்வ குத்தமாயிடுமே ! கூடு கந்துரி லே வான வேடிக்கை இல்லைனா நல்லவா இருக்கும் சந்தனம் பூச சொன்ன என் ''பாய்'' பிரான்ட் டாட பாவா கோவிச்சுக்க மாட்டாரா ? 10 15 பேரு செத்துபோனதுக்கெல்லாம் ரொம்பதான் அலட்டிகிறீங்க.
Rate this:
Cancel
கண்ணன் - chennai,இந்தியா
14-ஆக-201018:05:52 IST Report Abuse
கண்ணன் பட்டாசு தயாரிப்பவர்கள் என்ன பண்ண முடியும்? இந்த விபத்து அதிகாரிகளின் கவன குறைவு தான். பட்டாசு தயாரிப்பவர்கள் பற்றி ஒரு நல்லவர் விமர்சனம் பண்ணி இருந்தார் தங்க சுரங்கம் என்று எல்லாம். அப்படி தங்க சுரங்கம் என்றால் நீங்களும் அந்த தொழில் பண்ண வேண்டி தானே. மேலும் ஒரு நல்லவர் விமர்சனம் பண்ணி இருந்தார் பட்டாசே தயாரிக்க கூடாதுன்னு அப்படி நா நாங்கலாம் பிளைக்க எங்க போக. மேலும் ஒரு நல்லவர் விமர்சனம் பண்ணி இருந்தார் பட்டாசு தொழிலால் மாசு கெடுவதாக அப்படி என்ன மாசு கெடுதுன்னு கொஞ்சம் இங்க விளக்கினா கொஞ்சம் நல்லா இருக்கும். யாரால் universal globalisation problem வருது. யாரும் புரியாம யார் செய்யும் தொழிலையும் விமர்சனம் செய்யாதிர்கள். பட்டாசு தொழில் செய்பவர்களுக்கு தான் அதில் உள்ள பிரச்சனை தெரியும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X