பொது செய்தி

இந்தியா

அரபு ஷேக்குகளின் "ஷோக்'கிற்கு பலியாகும் இந்திய பெண்கள்

Added : டிச 29, 2012 | கருத்துகள் (48)
Share
Advertisement
மும்பை:அரபு நாடுகளில் இருந்து இந்தியா வரும் ஷேக்குகளில் சிலர், தங்கள் உடல் வெறியை தணித்து கொள்ள, இந்திய பெண்களை, திருமணம் செய்து கொள்வதும், நாடு திரும்பும் முன், அந்த பெண்களை விவாகரத்து செய்வதும் கண்டுபிடிக்கப்பட்டுள் ளது. பணத்திற்கு ஆசைப்பட்டு, ஏராளமான பெண்கள், மாயவலையில் வீழ்கின்றனர். வெறிபிடித்த கும்பலுக்கு, இந்தியாவில் உள்ள சில, மத தலைவர்களும், குருமார்களும்

மும்பை:அரபு நாடுகளில் இருந்து இந்தியா வரும் ஷேக்குகளில் சிலர், தங்கள் உடல் வெறியை தணித்து கொள்ள, இந்திய பெண்களை, திருமணம் செய்து கொள்வதும், நாடு திரும்பும் முன், அந்த பெண்களை விவாகரத்து செய்வதும் கண்டுபிடிக்கப்பட்டுள் ளது. பணத்திற்கு ஆசைப்பட்டு, ஏராளமான பெண்கள், மாயவலையில் வீழ்கின்றனர்.


வெறிபிடித்த கும்பலுக்கு, இந்தியாவில் உள்ள சில, மத தலைவர்களும், குருமார்களும் உதவி செய்வது தான் வேதனையானது.மும்பை, புனே, டில்லி நகரங்களில், "மிட் - டே' என்ற ஆங்கில மாலை நாளிதழ் வெளிவருகிறது. அந்த நாளிதழின் பெண் நிருபர், கிராந்தி விபுதேயும், ஆண் நிருபர், பூபன் படேலும், ஒரு மாதத்திற்கும் மேலாக, ரகசிய நடவடிக்கை மேற்கொண்டு, அரபு ஷேக்குகளின் காம லீலைகளை அம்பலப்படுத்தியுள்ளனர்.


அந்த பத்திரிகையில் வெளியாகியுள்ள செய்தி விவரம்:இந்தியாவிற்கு சுற்றுலா, "விசா'வில் வரும் அரபு நாட்டு ஆண்கள் சிலர், மும்பை அல்லது வட மாநில நகரங்களில் தரையிறங்கியதும், பெண் தேடும் படலத்தை துவக்கி விடுகின்றனர். அதற்காகவே உள்ள ஏஜண்டுகள், அரபு ஷேக்குகள் தங்கியிருக்கும் இடங்களுக்கு, பெண்களை கூட்டி செல்கின்றனர். பிடித்தமான பெண்களை, ஷேக்குகள் தேர்ந்தெடுக்கின்றனர்.


"எல்லாம் மத முறைப்படியே செய்ய வேண்டும்' என, விரும்பும் ஷேக், அந்த பெண்ணுடன், திருமணம் செய்து கொள்கின்றனர். திருமணத்தை, முஸ்லிம் மதகுரு நடத்தி வைக்கிறார். அதற்கு முன், 15 ஆயிரம், முதல் ஒரு லட்ச ரூபாய் வரை, பணம் பேசப் பட்டு, பெண்ணுக்கு கைமாறி விடுகிறது.


மேலும், எத்தனை நாட்களுக்கு, ஷேக்கிற்கு மனைவியாக இருக்க வேண்டும் என்பதும் முடிவு செய்யப்பட்ட பிறகு, ஷேக்கின் மனைவியாக, இந்திய பெண் மாறுகிறாள்.
அந்த அப்பாவி பெண்ணுடன், இந்தியாவில் உள்ள மத வழிபாட்டு தலங்கள், முக்கிய சுற்றுலா இடங்களுக்கு செல்லும் ஷேக், அந்த பெண்ணை, தன் காம இச்சைக்கு, விருப்பம் போல பயன்படுத்துகிறார்.


சடீவிசா காலம், ஒரு வாரத்திலோ அல்லது 10 நாட்களிலோ முடியும் போது, திருமணம் செய்து வைத்த மதகுருவிடம் வந்து, விவாகரத்தும் செய்து விடுகிறார். விவாகரத்தும், சில வினாடிகளில் முடிந்து விடுகிறது. குறிப்பிட்ட காலம் மட்டும், அரபு ஷேக்கின் மனைவியாக வாழ்ந்த அந்த பெண், கசக்கி வீசப்படுகிறாள்.இதில் கொடுமை என்னவென்றால், அரபு ஷேக்கிடம் சிக்கும் பெண்ணுக்கு, அவள் பெறும் பணத்தில், கொஞ்சமே கிடைக்கிறது.


50 சதவீத பணத்தை, திருமணம் மற்றும் விவாகரத்தை செய்து வைக்கும் மதகுரு எடுத்து கொள்கிறார். மீதம் உள்ளதை, பெண்ணும் அவளை, ஏற்பாடு செய்யும் ஏஜண்டுகளும் பகிர்ந்து கொள்கின்றனர்.இந்த கொடுமை, மும்பை, ஐதராபாத் நகரங்களில் வெகுசாதாரணமாக நடக்கிறது. இதை கண்டுகொள்வார் யாருமில்லை.


Advertisement


வாசகர் கருத்து (48)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
halid - thanjai,இந்தியா
18-மார்-201309:16:09 IST Report Abuse
halid அய்யா நாட்டுல,பெரிய பெரிய தப்பு இதெல்லாம் கண்டு புடிச்சு எழுதுங்க,அத விட்டுட்டு,விபச்சாரமெல்லாம் ஒரு மேட்டர்னு எழுதுறிங்க...............
Rate this:
Cancel
venkat Iyer - nagai,இந்தியா
16-மார்-201306:57:35 IST Report Abuse
venkat Iyer தமிழ் நாட்டில் உள்ள முன்னாள் முதல் அமைச்சரே மூணு பொண்டாட்டி வச்சுருக்கார்.மக்கள் அவரை ஆட்சிக்கு கொண்டு வந்தது .நாட்டின் அரசனே முன் உதாரணமாக இல்லாத பட்சத்தில் மக்களிடம் எதிர் பார்க்க முடியுமா?
Rate this:
Cancel
GUNAVENDHAN - RAMAPURAM , CHENNAI,இந்தியா
16-மார்-201300:24:21 IST Report Abuse
GUNAVENDHAN இத்தகைய கொடுமையான செயல் தொடர்ந்து நடந்துகொண்டு தான் உள்ளது. 4 , 5 மாதம் முன் கூட இதேபோன்ற செய்தி வந்தது அப்போதும் பலர் ஆவேசப்பட்டு இங்கு கருத்து சொல்லியிருந்தனர், ஆனாலும் இந்த அட்டுழியம் தொடர்ந்துகொண்டே உள்ளது, அதை தடுக்க மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. இன்றைக்கு மத்தியில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் அரசில் உள்ள அமைச்சர்களில் பெரும்பாலோர் எந்தஒரு காரியத்தில் தங்களை ஈடுபடுத்திகொள்ளவேண்டுமானாலும் , தங்களுக்கு அதில் என்ன கிடைக்கும் என்றே கணக்கு போட்டு , தங்களுக்கு பெரிய அளவில் ஏதாவது கிடைக்கும் என்றால் தான் அந்த செயலில் தங்களை ஈடுபடுத்திகொள்கின்றனர் , சும்மா மக்கள் சேவை செய்வதில் , சமுதாயத்தில் நடக்கும் அநியாயங்களை தட்டி கேட்க , அதை சரி செய்ய அவர்களுக்கு விருப்பமில்லை , அதற்க்கு நேரமும் இல்லை. மக்கள் பணத்தை கொள்ளையடிக்க, சுருட்டியதை பாதுகாக்கவே நேரம் போதவில்லை, அவர்கள் எங்கே சமூக சீர்கேடுகளை ,சமுதாயத்தை கெடுத்து கொண்டுள்ள புல்லுருவிகளை ஒழிக்க போகிறார்கள் , முடிந்தால் அந்த ஷேக்குகளிடமிருந்தே பணத்தை வாங்கி கொள்வார்கள். மத குருமார்கள் என்று சொல்லிக்கொண்டு , இத்தகைய இழிவான பணத்திலும் சரிபாதியை அபகரித்துகொள்ளும் இவர்களை சமூகம் மதிக்கவேண்டுமா?. இப்படிப்பட்ட ஈனத்தனமான காரியங்களுக்கு துணைபோகும் இந்த குருமார்களையும் சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை கொடுக்கவேண்டும்?. அவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்கும் விதத்தில் முதலில் சட்டத்தை திருத்தவேண்டும் . வெளிநாட்டில் இருந்து வந்து யார் இந்தியாவில் உள்ள பெண்களை திருமணம் செய்யவேண்டுமென்றாலும் முதலில் இந்திய அரசுக்கு விண்ணப்பிக்கவேண்டும் , இந்திய அரசு அந்த மனுவினை தீவிரமாக பரிசீலனை செய்து அனுமதி அளித்தால் மட்டுமே திருமணம் செய்யமுடியும் என்கிற விதத்தில் சட்டத்தை திருத்தவேண்டும். வெளிநாட்டில் இருந்து சுற்றுலா விசாவில் வருகின்றவர்களுக்கு எல்லாம் திருமணம் செய்ய அனுமதி கொடுக்க கூடாது. அப்படி அரசுக்கு விண்ணப்பிக்காமல் வெளிநாட்டில் இருந்து வந்த யாராவது திருமணம் செய்ததாக தகவல் கிடைத்தால் உடனே அந்த நபரையும், அவருக்கு மணப்பெண்ணை தேடிக்கொடுத்த அந்த புரோக்கரையும் , அந்த திருமணத்தை நடத்திய குருமாரையும் பிடித்து உள்ளே போடவேண்டும் , குண்டாஸ் சட்டத்தை இதற்க்கு பயன்படுத்தினாலும் தவறில்லை . இத்தகைய திருட்டு கல்யாணத்தில் கைது செய்யபடுபவர்களை ஜாமீனிலும் விடக்கூடாது என சட்டத்திலேயே தெளிவு படுத்திவிடவேண்டும். இப்படியெல்லாம் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவந்து, அதன்பிறகு தவறு செய்பவர்களை தயவுதாட்சன்யமில்லாமல் தண்டித்தால் தான் இத்தகைய இழிவான செயல்களை பணத்துக்காக செய்பவர்கள் திருந்துவார்கள். அரசு இந்த விஷயத்தில் இன்னமும் ஏனோ தானோ என்று இருக்காமல், இந்திய பெண்களை அயல்நாட்டு காமுகன்களிடமிருந்து மீட்க வேண்டும் . பாராளுமன்றத்தில் வெட்டி பேச்சையெல்லாம் பேசி காலத்தை கழிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உடனடியாக இத்தகைய பிரச்சினைகளை எழுப்பி இதற்க்கு உடன் தீர்வு கண்டாகவேண்டும் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X