காஷ்மீரில் துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி

Added : ஆக 14, 2010 | கருத்துகள் (1)
Share
Advertisement
காஷ்மீரில் துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி

ஸ்ரீநகர் :காஷ்மீரில் நேற்று மீண்டும் கலவரம் வெடித்ததையடுத்து, பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலியாயினர். இதனால், அங்கு மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


ரம்ஜான் மாதம் தொடங்கியதையொட்டி,  நேற்று முன்தினம் காஷ்மீரின் அனைத்து பகுதிகளிலும் ஊரடங்கு உத்தரவு விலக்கிக்கொள்ளப்பட்டது. இந்நிலையில், ஜம்மு - காஷ்மீர் விடுதலை முன்னணியின் நிறுவனர் மறைந்த முகமது மக்பூல் பாட்டின் சொந்த ஊரான திரேகாமில்  பிரிவினைவாதிகள் திரண்டு, பிரிவினைவாத கோஷங்களை எழுப்பியபடி ஊர்வலமாக செல்ல முயன்றனர். அவர்களை கலைந்து செல்லுமாறு பாதுகாப்புப் படையினர் எச்சரித்தனர். இதனால், பிரிவினைவாதிகள், அவர்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து, பாதுகாப்புப் படையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் கூட்டத்தினரை கலைத்தனர்.


பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், முடாசீர் அகமது  என்பவர் உட்பட 2 பேர்  உயிரிழந்தனர். ஏராளமானோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்  மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இரண்டு பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.இதே போன்று, ஸ்ரீநகரில் பாதுகாப்புப் படையினர் மீது வன்முறை கும்பல் கல்வீசி தாக்குதல் நடத்தியது. இதனிடையே, வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த ஹூரியத் அமைப்பின் தலைவர்கள் சயித் அலி ஷா கிலானி, மிர்வாஸ் மவுல்வி ஓமர் பரூக் உள்ளிட்டோர் நேற்று காலை விடுவிக்கப்பட்டனர்.இதையடுத்து, மிர்வாஸ் மவுல்வி தலைமையில் ஏராளமானோர்  கூட்டமாக, ஜமியா மசூதிக்கு நேற்று சென்றனர். இதனால், பாதுகாப்புப் படையினர் வானத்தை நோக்கி சில ரவுண்டுகள் சுட்டு கூட்டத்தை கலைத்தனர்.


இதனால், அந்த பகுதியில் பதட்டம் ஏற்பட்டது.இதையடுத்து, அங்கு மேலும் வன்முறைச் சம்பவங்கள் நடப்பதை தவிர்ப்பதற்காக, வடக்கு காஷ்மீரில் உள்ள குப்வாரா, பாரமுல்லா மற்றும் மத்திய காஷ்மீரில் உள்ள பட்காம், கந்தர்பால் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மீண்டும் ஊரடங்கு உத்தரவும், 144 தடை உத்தரவும்  பிறப்பிக்கப்பட்டது. ஸ்ரீநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பெரும்பாலான கடைகளும், வணிக நிறுவனங்களும் அடைக்கப்பட்டிருந்தன. அரசு அலுவலகங்கள், வங்கிகள், கல்வி நிறுவனங்களும் இயங்கவில்லை. போக்குவரத்தும் முற்றிலும் முடங்கியது.இதனிடையே, பொதுபாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள காஷ்மீர் பார் அசோசியேஷன் தலைவர் மியான் அப்துல் கயூம், பொதுச்செயலர் சலீம் ஆகியோரை விடுதலை செய்யக்கோரி வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
C Suresh - Charlotte,யூ.எஸ்.ஏ
14-ஆக-201019:15:18 IST Report Abuse
C Suresh Learn from China how to control this mobs. They are misguided and internal bombings similar to what is done in Pakistan should be carried out to control this. That will also avoid our soldiers and policemen getting killed.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X