வன்கொடுமைக்கு ஆளான மாணவி உடல் தகனம்; துவாரகாவில் ரகசிய இறுதிச்சடங்கு| Gang-rape victim cremated in Delhi | Dinamalar

வன்கொடுமைக்கு ஆளான மாணவி உடல் தகனம்; துவாரகாவில் ரகசிய இறுதிச்சடங்கு

Updated : டிச 30, 2012 | Added : டிச 30, 2012 | கருத்துகள் (66)
Share
சிங்கப்பூர்: டில்லியில் கற்பழிக்கப்பட்ட 23 வயது மருத்துவ மாணவி உடல் துவாரகாவில் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக அவர் வசித்த மகாவீர் என்க்ளேவ் பகுதியில் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. மாணவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர் மன்மோகன்சிங், சோனியா ஆகிய‌ோர் மாணவியின் பெற்றோரைச் சந்தித்து ஆறுதல் கூறினர். சிகி்ச்சை பலனின்றி பரிதாபமாக நேற்று அதிகாலையில் இறந்தார். அவரது
Gang-rape victim cremated in Delhi,வன்கொடுமைக்கு ஆளான மாணவி உடல் துவாரகாவில் தகனம்; வழக்கில் சிறப்பு வக்கீல் நியமனம்

சிங்கப்பூர்: டில்லியில் கற்பழிக்கப்பட்ட 23 வயது மருத்துவ மாணவி உடல் துவாரகாவில் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக அவர் வசித்த மகாவீர் என்க்ளேவ் பகுதியில் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. மாணவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர் மன்மோகன்சிங், சோனியா ஆகிய‌ோர் மாணவியின் பெற்றோரைச் சந்தித்து ஆறுதல் கூறினர்.

சிகி்ச்சை பலனின்றி பரிதாபமாக நேற்று அதிகாலையில் இறந்தார். அவரது உடல் சிறப்பு விமானம் மூலம் இன்று அதிகாலை 3.30 மணிக்கு புதுடில்லி விமான நிலையத்திற்குவந்தது. புதுடில்லி இந்திராகாந்தி விமான நிலையத்தில் வந்த போது மாணவியின் உடலை பார்க்க பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் ‌காங்.,. தலைவர் சோனியா மட்டும் வந்தனர். உடல் எத்தனை மணிக்கு வருகிறது எங்கு கொண்டு செல்லப்படுகிறது என்பதை ரகசியமாகவே வைத்திருந்தனர்.உள்ளூர் எம்.பி., மற்றும டில்லி பா.ஜ., தலைவர் விஜேந்தர்குப்தா ஆகியோருக்கு மட்டும் தகவல் தெரிவிக்கப்பட்டது. பத்திரிகையாளர்கள் இறுதிச்சடங்கில் பங்கேற்க அனுமதி வழங்கப்படவில்லை. துவாராகா மயானத்திற்கு உடல் பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது. இங்கு போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டிருந்தனர். கடும் பனிப்பொழிவு இருந்த நேரம் என்பதால் மக்கள் நடமாட்டம் குறைவாகவே இருந்தது. இந்நேரத்தில் ரகசியமாக தகனம் முடிக்கப்பட்டது. உடல் மக்கள் பார்வைக்கு வைக்கும்போது கூடுதல் பதட்டம் ஏற்படும் என்பதால் மத்திய உளவுத்துறை அறிவுரையின்படி டில்லி போலீசார் தகனத்தை ரகசியமாக முடித்து விட்டதாக ‌டில்லி வட்டாரம் தெரிவிக்கிறது.


சிறப்பு வக்கீல் நியமனம்:

இதற்கிடையில் மாணவிக்கு வ்னகொடுமை செய்த குற்றவாளிகள் மீது 3ம்தேதி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உள்ளனர். இந்த வழக்கில் மாணவி சார்பில் ஆஜராக சிறப்பு வக்கீலை அரசு நியமித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக நாடு முழுவதும் கொந்தளி்ப்பான நிலை நிலவுவதால், இந்த வழக்கை விரைவில் விசாரித்து குற்றவாளிகளுக்கு தண்டனையை நிறைவேற்றுவதில் அரசு முனைப்பு காட்டி வருகிறது.


பாதுகாப்பு அதிகரிப்பு:

டில்லியில் மாணவ, மாணவிகளின் போராட்டம் மீண்டும் வெடிக்குமோ என்ற காரணத்தினால் நகர் முழுவதும் சிறப்பு அதிரடி போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். முக்கிய ரயில்வே ஸ்டேஷன்கள் மூடப்பட்டுள்ளன. அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கையாக 10 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டன.போலீசார் குவிக்கப்பட்டு்ள்ளனர். இதனால் டில்லியில் பரபரப்பு காணப்படுகிறது. இந்தியா கேட், ரைசினா ஹில்ஸ் பகுதிகள் மூடப்பட்டுள்ளன. மேலும் இந்த பகுதிக்கு செல்லும் சாலைகளும் மூடப்பட்டுள்ளன. ராஜ்பத், விஜய் சவுக், போன்ற பகுதிகளுக்கு செல்லும் பாதைகள்மூடப்பட்டதுடன.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X