பொது செய்தி

தமிழ்நாடு

சென்னை பல்கலை.,க்கு புதிய துணைவேந்தராக தாண்டவன் நியமனம்

Updated : ஜன 08, 2013 | Added : ஜன 08, 2013 | கருத்துகள் (3)
Share
Advertisement
சென்னை: சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பேராசிரியர் தாண்டவன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், பல்கலையின் 43வது துணைவேந்தர் ஆவார். சென்னை பல்கலைக் கழக துணைவேந்தர் திருவாசகம், அக்., 12ம் தேதி ஓய்வு பெற்றார். புதிய துணைவேந்தரை தேர்ந்தெடுக்க, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் பல்கலைக் கழக, முன்னாள் துணைவேந்தர், ஆதிசேஷன் தலைமையில், குழு அமைக்கப்பட்டது. எஸ்.ஆர்.எம்., பல்கலைக்

சென்னை: சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பேராசிரியர் தாண்டவன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், பல்கலையின் 43வது துணைவேந்தர் ஆவார். சென்னை பல்கலைக் கழக துணைவேந்தர் திருவாசகம், அக்., 12ம் தேதி ஓய்வு பெற்றார். புதிய துணைவேந்தரை தேர்ந்தெடுக்க, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் பல்கலைக் கழக, முன்னாள் துணைவேந்தர், ஆதிசேஷன் தலைமையில், குழு அமைக்கப்பட்டது. எஸ்.ஆர்.எம்., பல்கலைக் கழக இயக்குனர் பாலசுப்பிரமணியன், சென்னை பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் சாதிக் ஆகியோர் குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். 80க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். இவர்களில் மூவர் பெயரை, கவர்னருக்கு தேர்வு குழு பரிந்துரைந்தது. இம்மூவரில், புதிய துணைவேந்தராக தாண்டவனை,63, கவர்னர் நியமித்துள்ளார்.இவர், திருவண்ணாமலை மாவட்டம், பனப்பம்பட்டு கிராமத்தில் உள்ள விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். சென்னை, பச்சையப்பன் கல்லூரியில், பி.யூ.சி., மற்றும் வரலாற்றுத் துறையில் இளங்கலை, முதுகலை பட்டங்களைப் பெற்றவர் 'எம்.ஜி.ராமச்சந்திரனும், தமிழக அரசும்' என்ற தலைப்பிலும், "அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஒரு பார்வை' என்ற தலைப்பிலும் டாக்டர் பட்டங்கள் பெற்றவர். சென்னை பச்யைப்பன் கல்லூரி வரலாற்று துறை உதவி பேராசிரியராக, 16 ஆண்டுகள் பணிபுரிந்தவர். சென்னை பல்கலையில் மூன்று முறை சிண்டிகேட் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். பல்கலையின் பல்வேறு குழுக்களிலும் உறுப்பினராக இருந்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Narayanan Gopalan - Chennai,இந்தியா
09-ஜன-201311:09:52 IST Report Abuse
Narayanan Gopalan ஏ.எல் முதலியார் போன்ற சான்றோர் இருந்த இடத்தில் கேவலமாயில்லை ?
Rate this:
Cancel
Periya-Rasu - Baton Rouge,யூ.எஸ்.ஏ
09-ஜன-201302:21:09 IST Report Abuse
Periya-Rasu துணைவேந்தர் பதவில் அரசியல் எவள்ளவு விள்ளயடுகிறது என்பது கன்கூடு. எத்தனயோ பேராசிரியர்கள் பல்கலைகழகத்தில் இருக்கும் பொது எம்.ஜி.ராமச்சந்திரனும், தமிழக அரசும்' என்ற தலைப்பிலும், "அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஒரு பார்வை' என்ற தலைப்பிலும் எனும் பொது தெரிகிறது இவர் ஒரு தெரிந்த அரசியல்வாதி என்பது தமிழ்நாட்டு பல்கலைகழகத்தை இனி அந்த ஆண்டவனே வந்தாலும் காப்பதற முடியாது. இதற்க்கு மாவட்ட செயியாளரயே துணைவேந்தர் ஆக நியமித்து விடலாம் .. இந்தியாவல் எங்கும் இந்த அவலம் கிடையாது
Rate this:

Microsoft OLE DB Provider for SQL Server error '80040e31'

Query timeout expired

/xtralog_load_full_taboolabc.asp, line 394