விமானத்தில் பயணம் செய்த 10அடி நீள மலை பாம்பு! பயணிகள் பரபரப்பு!

Updated : ஜன 11, 2013 | Added : ஜன 11, 2013 | கருத்துகள் (5)
Advertisement

சிட்னி: ஆஸ்திரேலியாவின்விமானத்தில் மலை பாம்பு ஒன்று 1:45 மணி நேரம் பயணித்து விமான பயணிகளை பரபரப்புக்கு உள்ளாக்கியது. ஆஸ்திரேலியாவில் உள்ள குவாண்டாஸ் விமானம் ஒன்று கைரேன்ஸ் என்னும் இடத்தில் இருந்து போர்ட் மொரேஸ்பை க்கு காலை 6:15 க்கு புறப்பட்டது. விமானம் பரந்த சிறிது நேரத்தில் விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர் விமானத்தின் ரெக்கையில் எதோ அசைவதை கண்டார். உன்னிப்பாக கவனித்ததில் அது ஒரு 10 அடி நீளம் கொண்ட மலை பாம்பு என தெரிய வந்தது. விமானத்தில் மலைப்பாம்பு பயணிக்கும் தகவல் விமான பணி பெண்களிடம் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவல் விமானத்தில் பயணம் செய்த மற்ற பயணிகளும் பரபரப்புக்கு உள்ளாகியது. விமானம் பல ஆயரம் அடி உயரம், அதுவும் 400கி.மீ வேகத்தில் பறக்கிறது. மேலும் வெளி வெப்பம் -12 டிகிரி செல்சியஸ் யாக உள்ளது, எனவே இந்த பாம்பு இனியும் உயுருடன் இருக்க வாய்ப்பு எல்லை என விமானி தெரிவித்தார். விமானத்தில் பாம்பு பயணிக்கும் தகவல் விமான கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கப்பட்டது. விமானம் தரை இறங்கியதும் பாம்பு உயுருடன் இருப்பதை கண்டு அனைவரும் ஆச்சரியப்பட்டனர். விமானத்தில் பாம்பு எவ்வாறு ஏறியது ? விமானம் கிளம்பும் முன்பு விமானத்தின் இறக்கைகள் சரிபர்க்கபடும். அப்பொழுதும் கூட பாம்பு இருப்பதை ஏன் கவனிக்க வில்லை போன்ற கேள்விகளுக்கு பதில் அளித்த நிறுவனம், விமானம் அதிக வேகத்தில் பறக்கும் பொழுது பாம்பு தனது கட்டுப்பாட்டை இழந்து வெளியில் தெரிந்ததாக கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Guru - Batam,இந்தோனேசியா
12-ஜன-201305:41:22 IST Report Abuse
Guru பாம்புடன் ஒரு பயணம் அப்படி தலைப்பை போட்டுயிருக்கலாம்
Rate this:
Share this comment
Cancel
ganapathy - khartoum,சூடான்
12-ஜன-201301:06:32 IST Report Abuse
ganapathy பாம்பு இறக்கையில் சிக்கி விமானம் விபத்து இல்லாமல் தப்பி விட்டார்கள். பாம்புக்கு ஆண்டவன் ஆயுளை கொடுத்து விட்டான்
Rate this:
Share this comment
Cancel
Indian from Mumbai - Mumbai,இந்தியா
12-ஜன-201300:54:25 IST Report Abuse
Indian from Mumbai விசித்திர செய்தி. தினமலருக்கு பாராட்டுக்கள். திமுகவின் உட்கட்சி பூசல் செய்திகளை காட்டிலும் இப்படி செய்திகள் ரொம்ப நல்லா இருக்கு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X