பொது செய்தி

தமிழ்நாடு

உரத்த சிந்தனை: "சலவை'யாக்கப்பட்ட சிந்தனைகள்! சாரு நிவேதிதா

Updated : ஜன 13, 2013 | Added : ஜன 12, 2013 | கருத்துகள் (23)
Share
Advertisement
சமீபத்தில் ஒரு "டிவி' சேனலில், "2012 எப்படி இருந்தது?' என்பது பற்றி, எழுத்தாளர்களும், சினிமா இயக்குனர்களும் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றேன்.ஓரிருவரைத் தவிர, எல்லா எழுத்தாளர்களின் முகங்களும் மலர்ச்சியே இல்லாமல் மிகவும் இறுக்கமாக இருந்தது. "எழுத்தாளர் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டுமோ?' என்று வியந்தபடி நிகழ்ச்சியை கவனித்தேன்.முதலில், "2012 - இன்
உரத்த சிந்தனை:"சலவை'யாக்கப்பட்ட சிந்தனைகள்! சாரு நிவேதிதா எழுத்தாளர், விமர்சகர்

சமீபத்தில் ஒரு "டிவி' சேனலில், "2012 எப்படி இருந்தது?' என்பது பற்றி, எழுத்தாளர்களும், சினிமா இயக்குனர்களும் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றேன்.

ஓரிருவரைத் தவிர, எல்லா எழுத்தாளர்களின் முகங்களும் மலர்ச்சியே இல்லாமல் மிகவும் இறுக்கமாக இருந்தது. "எழுத்தாளர் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டுமோ?' என்று வியந்தபடி நிகழ்ச்சியை கவனித்தேன்.முதலில், "2012 - இன் சிறந்த நாவல் எது? என்று கேட்கப்பட்டது. 1,000 பக்கங்கள் கொண்ட ஒரு குறிப்பிட்ட நாவலையே அங்கிருந்த அத்தனை எழுத்தாளர்களும், "சிறந்த நாவல்' என்று சொன்ன போது, நான் அதிர்ச்சி அடைந்தேன். காரணம். அந்த நாவலை என்னால் ஒரு பக்கம் கூடப் படிக்க முடியவில்லை.இது போன்ற நாவலையெல்லாம் படித்துக் களைப்பதால் தான், இவர்கள் இப்படிக் கடுவன் பூனை போல் இறுக்கமாக இருக்கிறார்களோ என்று வியந்தேன்.

ஆனால், அதற்கு அடுத்து அவர்கள் சொன்ன விஷயம், அதை விட அதிர்ச்சியாக இருந்தது. "2012இன் சிறந்த நபர் யார்?' என்ற கேள்விக்கு அவர்கள் அத்தனை பேருமே ஒரே பெயரைத்தான் கூறினர்.அவர், கூடங்குளம் உதயகுமார். அவர் பெயரை உச்சரிக்கும் போது எழுத்தாளர்களின் கண்கள் கலங்கின, உதடுகள் துடித்தன. அந்த அளவுக்கு அவர்கள் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இருந்தனர்.உதயகுமாரைத் தேர்ந்தெடுத்தற்காக அவர்கள் சொன்ன காரணம் என்ன தெரியுமா? காந்திஜிக்குப் பிறகு இந்தியாவில் நடந்த மிகப்பெரிய அறவழிப்போராட்டம், உதயகுமாரின் போராட்டம்தானாம். எப்படி யென்றால், டில்லியில் ஒரு பெண் கற்பழிக்கப்பட்டதற்கு, எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தில், ஐந்தே நாட்களில் ஒரு போலீஸ் கொல்லப்பட்டார் அல்லவா... அது போன்ற வன்முறைச் சம்பவம் எதுவும் கூடங்குளத்தில் நடக்கவில்லையாம். அதற்கு உதயகுமார்தான் காரணமாம்.

இப்படிச் சொல்வதற்கு எழுத்தாளர்கள் வெட்கப்பட வேண்டாமா? கூடங்குளத்தில் வன்முறை நடக்க வேண்டும். போராட்டக்காரர்கள் அதாவது மக்கள் சாகவேண்டும்; அதை வைத்து போராட்டத்தை பெரிய அளவில் கொண்டு போய் விடலாம் என்று எவ்வளவோ திட்டமிட்டார் உதயகுமார். ஆனால், அவர் எதிர்பார்த்ததற்கு மாறாக, ஒரு வன்முறைச் சம்பவம் கூட நடக்கவில்லை. இதற்கு முழு காரணம், தமிழக முதல்வரும், அவருடைய உத்தரவை அப்படியே நிறைவேற்றிய காவல் துறையும் தான். எக்காரணம் கொண்டும் வன்முறை நடக்கக் கூடாது என்பதில் மிகக் கவனமாக இருந்தார் முதல்வர்.

உதாரணமாக, இடிந்த கரையில் பல மாதங்களாக போராட்டம் நடந்தும், போலீஸ் நிர்வாகம், அந்த கிராமத்தின் உள்ளேயே நுழையாமல், மிகுந்த சுய கட்டுப்பாட்டுடன் காத்திருந்தனர். மீண்டும் மீண்டும் போலீசை தூண்டி விடும் வகையில், உதயகுமார் கும்பல் பல தந்திரோபாயங்களை கையாண்டும், எதுவுமே பலிக்கவில்லை. உதயகுமார் நடத்தியது அறவழி போராட்டம் என்றால், பொதுமக்களைத் தூண்டிவிட்டு, அவர்களை போலீசாரே எதிர்பாராத வகையில், கடல்வழியாக வரச் செய்து அணு மின்நிலையத்தையும், அதைக் காவல் காத்துக் கொண்டிருந்த போலீசையும் தாக்கச் சொன்னது யார்? உதயகுமார் கும்பல் தானே? அந்த தாக்குதலில் போலீஸ்காரர்களின் மண்டை உடைந்தது வன்முறை இல்லையா? இது தான் அறவழிப்போராட்டமா? இது போன்ற போராட்டத்தையா காந்திஜி நடத்தினார்? "ஒரு ஆளாவது சாகவேண்டும், அதுதான் வன்முறை' என்கிறார்களா எழுத்தாளர்கள்?

இன்னும் சொல்லப் போனால், மக்களை எந்தக் கடல் வழியே உதயகுமார் வரச் சொன்னாரோ, அந்த இடம் மக்கள் செல்லக் கூடாத இடம். தேசப் பாதுகாப்பு கருதி சில இடங்களில் மக்கள் நடமாட்டம் தடுக்கப்பட்டிருக்கிறது. பயங்கரவாதிகள் ஊடுருவலைத் தடுக்கவே இப்படி உள்ளது; மீறி வருபவர்களை சுடுவதற்கும், மத்திய ரிசர்வ் போலீசுக்கு அதிகாரம் உள்ளது. அப்படிப்பட்ட பகுதியில் தான் மக்களை வரச் சொன்னார் உதயகுமார்.இப்படி வன்முறையைத் தூண்டி விட்ட அவரை, போலீஸ் கைது செய்ய வந்தபோது, கடல்வழியே படகில் தப்பி ஓடிவிட்டார். காந்திஜியின் போராட்டத்தில் இப்படி ஒரு தடவையாவது நடத்திருக்கிறதா? காந்திஜி ஒரு பிரச்னையை முன் வைத்து உண்ணாவிரதம் இருப்பார்.

அரசு அவரைக் கைது செய்ய வரும் போது, எல்லாரையும் அமைதி காக்கும் படி சொல்லிவிட்டு, சிறைக்குச் செல்வார். உதயகுமார் அப்படியா செய்தார்? மக்களைத் தூண்டி விட்டு விட்டு ஓடி ஒளிந்து விட்டாரே? அது பற்றி பத்திரிகைகள் கேட்ட போது, "நான் கைது ஆகவே நினைத்தேன். ஆனால், என் விருப்பத்துக்கு மாறாக மீனவர்கள் என்னை இட்டுச் சென்று விட்டனர் என்று ரீல் விட்டார், ஏதோ, "டிவி' சீரியல் பார்ப்பது போலவே இருந்தது அவர் தப்பியோடிய சம்பவம்.எந்த நேரத்திலாவது காந்திஜி இப்படி ஓடி ஒளிந்திருக்கிறாரா? "நான் கைதாகவே நினைத்தேன்; மக்கள் தடுத்து விட்டனர்' என்று சொல்லும் ஒருவர், தான் நினைத்ததையே நிறைவேற்ற முடியாத ஒருவர், எப்படி ஒரு போராட்டத்துக்குத் தலைமை தாங்க முடியும்?

இதில், கவனிக்க வேண்டிய இன்னொரு மிக முக்கியமான விஷயம். இந்தப் போராட்டத்துக்குப் பின்னால் இருப்பவர்கள், வெளிநாட்டிலிருந்து பெட்டி பெட்டியாகப் பணம் வாங்கிக் கொண்டு இங்கே இந்தியாவில் மதமாற்றத்தில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்கள். ஆகவே, இந்த விஷயத்தில் வேறு ஏதோ உள் நோக்கங்கள் இருக்கின்றன என்று சந்தேகிக்க வேண்டியிருக்கிறது."கூடங்குளம் மின் நிலையத்தினால் ஆபத்து எதுவும் இல்லை' என்று விஞ்ஞானிகள் அடித்துச் சொல்கின்றனர். அப்படி இருக்கும் போது, எழுத்தாளர்கள் மட்டும், "ஆபத்து ஆபத்து' என்று அலறினால், என்ன அர்த்தம்? எழுத்தாளர்கள் எப்போது விஞ்ஞானிகளாயினர்?

மக்களின் நல்வாழ்வுக்காக அரசாங்கம் சில திட்டங்களைத் தீட்டும் போது, அதனால் ஏற்படும் சில பாதகமான அம்சங்களையும், மக்கள் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். உதாரணமாக ஒரு அணை கட்டும் போது, அந்த இடத்தில் உள்ள கிராமங்கள் அழியத்தான் அழியும். அந்த மக்களுக்கு ஒரு மாற்று ஏற்பாடு செய்து கொடுத்துவிட்டு, அணையைக் கட்டினால் தான் எல்லாருக்குமான தண்ணீர்ப் பிரச்னை தீரும்.மலேஷியாவிலிருந்து, சிங்கப்பூர் தனிநாடாகப் பிரிந்த போது, சிங்கப்பூர் இப்போது இருப்பதைப் போல் இல்லை. நம்முடைய கண்ணம்மா பேட்டையைப் போல்தான், பல பேட்டைகள் அங்கே நிரம்பியிருந்தன. அங்குள்ள மக்களுக்கு, அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்டிக் கொடுத்து, நகரை நவீனப்படுத்த எண்ணினார் அப்போதைய பிரதமர், லீ க்வான் யூ. மக்களைக் காலிபண்ணச் சொன்னார்.

அவர்கள், அவருடைய பேச்சைக் கேட்கவில்லை. அப்போது, லீ க்வான் யூ இப்படி அறிவித்தார். "குறிப்பிட்ட தேதிக்குள் நீங்களாக வெளியேறினால், நீங்கள் சொகுசான அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கலாம். இல்லையெனில் கட்டாயமாக வெளியேற்றப்படுவீர்கள். அப்போது உங்களுக்கு அரசு வீடும் கிடைக்காது, நீங்களாகவேதான் கட்டிக் கொள்ள வேண்டும்!'இப்போது சிங்கப்பூர் எப்படி இருக்கிறது என்று, நம் எல்லாருக்கும் தெரியும். 1965ல் சிங்கப்பூர் சுதந்திரம் அடைந்த போது, அதாவது லீ க்வான் யூ அப்படி அறிவித்த போது, அங்கே ஒரு உதயகுமாரும் அவரை, மகாத்மா என்று அழைக்க, சில எழுத்தாளர்களும் இருந்திருந்தால், சிங்கப்பூர் இப்போது எப்படி இருக்கிறதோ அப்படி இருந்திருக்காது.

இந்தப்பிரச்னையில் இன்னொரு பெரிய ஆபத்து என்னவென்றால், உதயகுமாரைப் போல் யார் வேண்டுமானாலும், ஊடகங்களின் ஆதரவால் திடீரென்று பிரபலமாகி, ஆயிரம் பேரை சேர்த்து, அரசின் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடலாம் என்ற நிலைதான்.பொதுமக்கள் அதிலும், ஏழை, எளியவர்களை அன்பான பேச்சின் மூலம் வெகுசீக்கிரத்தில் நெருங்கி விடலாம். அந்த நெருக்கத்தைப் பயன்படுத்தி மூளைச் சலவையும் செய்துவிடலாம். அதைத்தான் உதயகுமார் கும்பல் வெகு சாமர்த்தியமாகச் செய்தது.எழுத்தாளர் என்றால், அரசு எதைச் செய்தாலும் அதை எதிர்த்தே ஆகவேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை. சில நேரங்களில் மக்களின் போராட்டங்களில் கூட நியாயம் இல்லாமல் போகலாம். ஏனென்றால், சமூக விரோதிகளால் தூண்டிவிடப்படும் மக்கள் உணர்ச்சி வசப்பட்டு செய்பவை அவை.

அந்த நேரத்தில் எழுத்தாளர்களும், அறிவு ஜீவிகளும், ஒட்டு மொத்தமான மனித சமூகத்துக்கு நன்மை செய்யும் பக்கமே நிற்கவேண்டும். அதை விட்டு விட்டு, தற்காலிக புகழுக்காக சமூக விரோதிகளின் பக்கம் சென்று விடக்கூடாது. அதிலும் சமூக விரோதிகளை காந்திஜியோடு ஒப்பிடுவது மகா அவமானம்.
இ-மெயில்:charu.nivedita.india @gmail.com

சாரு நிவேதிதா எழுத்தாளர், விமர்சகர்

Advertisement
வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
soundararajan - Udumalaipettai,இந்தியா
15-ஜன-201301:05:55 IST Report Abuse
soundararajan இப்பவும் ஒரு கூட்டம் ஞாயிற்று கிழமைகளில் வீடு வீடாக ஏறி இறங்கி மதமாற்றம் செய்ய முயற்சி செய்து கொண்டுதான் இருக்கிறது... இவர்களை எவ்வளவு தூரம் மூளை சலவை செய்து இருப்பார்கள் ? தானும் கெட்டு, பிறரையும் அதில் இழுக்க முயற்சி செய்வதற்காக, எவ்வளவு பொருளாதார வசதிகளை செய்து கொடுத்து இருப்பார்கள் ? எவ்வளவு பணம் இதில் விளையாடுகிறது ? நம்ப முடியவில்லை...
Rate this:

Microsoft OLE DB Provider for SQL Server error '80040e31'

Query timeout expired

/xtralog_load_full_taboolabc.asp, line 394