பொது செய்தி

இந்தியா

உ.பி., அரசுக்கு ஆஷாராம் பாபு வேண்டுகோள்

Updated : ஜன 17, 2013 | Added : ஜன 17, 2013
Advertisement

அலகாபாத்: பிப்ரவரி 14ம் தேதியை, பெற்றோர்களை மதிக்கும் மத்ரி புத்ரி பூஜன் திவஸ் ஆக கொண்டாட வேண்டும் என உ.பி., அரசுக்கு சர்ச்சை சாமியார் ஆஷாராம் பாபு வேண்டுகோள் விடுத்துள்ளார். டில்லி பாலியல் பலாத்கார சம்பவத்தில், பாதிக்கப்பட்ட பெண்ணின் மீது குற்றம் சாட்டி சர்ச்சையை ஏற்படுத்தியவர் ஆஷாராம் பாபு. இந்நிலையில், நிருபர்களிடம் பேசிய ஆஷாராம், மேற்கத்திய கலாச்சாரத்தின் காரணமாக பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கு பதிலாக, அந்த நாளை பெற்றோர்களை மதிக்கவும், அவர்களுக்கு சேவை செய்யும் தினமாக (மத்ரி புத்ரி பூஜன் திவஸ்) அறிவிக்க வேண்டும் என உ.பி., முதல்வர் அகிலேஷை கேட்டுக்கொண்டுள்ளார். கடந்த 2012ம் ஆண்டு முதல் பிப்ரவரி 14ம் தேதி மத்ரி புத்ரி பூஜன் திவஸ் ஆக கொண்டாடப்படும் என சட்டீஸ்கர் அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X