சென்னை: சங்கர நேத்ராலயா மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம், மருத்துவமனை மேலாண்மை சான்றிதழ் படிப்பிற்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது. சங்கர நேத்ராலயா மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில், மருத்துவமனை மேலாண்மை சான்றிதழ் படிப்பிற்கான வகுப்புகள், பிப்., 9 ல் துவங்குகிறது. இப்படிப்பில் சேர்வதற்கான கல்வி தகுதி, வயது வரம்பு, கல்வி கட்டணம் உள்ளிட்ட விவரங்களை, www.thesnacademy.ac.in என்ற இணையதளத்தில் பெறலாம். தகுதியானோர், தங்கள் விண்ணப்பத்தை, "ஆன்-லைனில்' பதிவு செய்யலாம். சங்கர நேத்ராலயா மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது.