பொது செய்தி

தமிழ்நாடு

சி.ஏ., இறுதி தேர்வு: தமிழ் மாணவி முதலிடம்

Added : ஜன 23, 2013 | கருத்துகள் (55)
Advertisement
Autorickshaw driver's daughter tops CA examination

மும்பை: சார்ட்டர்டு அக்கவுன்டன்ட் (சி.ஏ.,) படிப்பில், தமிழகத்தை சேர்ந்த, பிரேமா ஜெயகுமார் என்ற மாணவி, நாட்டிலேயே முதலாவது இடத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

தமிழகத்தை சேர்ந்த ஜெயகுமார் பெருமாளின் மகள், பிரேமா. குடும்பத்தினருடன் சிறு வயது முதல் மும்பையில் வசித்து வருகிறார். இவர் தந்தை, மும்பையில், ஆட்டோ ஓட்டுகிறார். கடந்த ஆண்டு, நவம்பரில் நடந்த, சி.ஏ., இறுதி தேர்வை பிரேமா எழுதினார். தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாகின.

மொத்தமுள்ள, 800 மதிப்பெண்களில், 607 மதிப்பெண் பெற்று, நாட்டிலேயே, முதலாவது மாணவியாக பிரேமா தேர்ச்சி பெற்றுள்ளார். இவர் தம்பியும், சி.ஏ., படிப்பில் இப்போது வெற்றி பெற்று உள்ளார்.


மும்பை, மாலாடு பகுதியில், ஒரு அறை வீட்டில் தாய், தந்தை, தம்பியுடன் வசிக்கும் பிரேமா, ""கடின உழைப்பு தான் வெற்றிக்கு காரணம்,'' என, தெரிவித்துள்ளார். பி.காம்., படிப்பிலும், மும்பை பல்கலைக்கழகத்தில், 90 சதவீத மதிப்பெண் பெற்று, இரண்டாவது இடத்தில் வெற்றி பெற்றவர் பிரேமா.Advertisement
வாசகர் கருத்து (55)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NARAYANAN . 1958. - TIRUCHY.,இந்தியா
25-ஜன-201309:30:02 IST Report Abuse
NARAYANAN . 1958. "உழைப்பின் வாரா உறுதிகளும் உளவோ" நிருபித்த சகோதரிக்கு வாழ்த்துக்கள். மன நெகிழ்ச்சியுடன் பெருமைபடுகிறேன் ஒரு தமிழனாக
Rate this:
Share this comment
Cancel
lpmuthukumar - Jakartha,இந்தோனேசியா
24-ஜன-201317:54:34 IST Report Abuse
lpmuthukumar வாழ்த்துக்கள் சகோதரி பிரேமா.
Rate this:
Share this comment
Cancel
Kotee Iswaran - chennai,இந்தியா
24-ஜன-201314:15:57 IST Report Abuse
Kotee Iswaran congrats Auto Drivers in Mumbai are very straight forward. Luckily you father (though Tamilian) was in Mumbai doing great job without any curse from public. With your hardwork added he has been blessed with good news
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X