பொது செய்தி

தமிழ்நாடு

காமன்வெல்த் போட்டி மையநோக்க பாடல் : டில்லியில் அறிமுக விழா

Updated : ஆக 16, 2010 | Added : ஆக 16, 2010
Advertisement

புதுடில்லி : காமன்வெல்த் போட்டிக்கு ரஹ்மான் இசையமைத்து கொடுத்த பாட்டுக்கு மத்திய அமைச்சர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதனையடுத்து ஸ்வாகதம் என்ற அந்த பாடலை இசையமைப்பாளர் ரஹ்மான் இன்று டில்லியில் அறிமுகப்படுத்தினார். இந்த விழாவில் இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவரும், காமன்வெல்த் போட்டி ஒருங்கிணைப்புக் குழு தலைவர் சுரேஷ் கல்மாடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் ரஹ்மானை இந்திய இசை அரங்கின் மொசார்ட் என கல்மாடி புகழ்ந்தார்.


ரஹ்மான் வேண்டுகோள் : காமன்வெல்‌த் போட்டிகள் குறித்த நல்ல விஷயங்களை தெரிவிக்குமாறு ஊடகங்களுக்கு ரஹ்மான் வேண்டுகோள் விடுத்தார். சமீப காலமாக காமன்வெல்த் போட்டிகள் பற்றிய சர்ச்சைக்குரிய செய்திகள் மட்டும‌ே வருவதாகவும். ஆனால் காமன்வெல்த் போட்டியில் வேறு பல நல்ல விஷயங்களும் இருக்கின்றன. அவற்றை பற்றியும் ஊடகங்கள் செய்தி வெளியிட வேண்டும் என்றார். பாடல் இந்தி மொழியில் இருக்கும் என தெரிவித்த ரஹ்மான்  2 வரிகள் பாடியும் காட்டினார். மேலும் பாட‌லை தேசத்தந்தை மகாத்மா காந்திக்கு அர்ப்பணிப்பதாகவும் கூறினார்.


Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X