பொது செய்தி

இந்தியா

பாகிஸ்தான் வந்துடுங்க!நடிகர் ஷாருக் கானுக்கு பயங்கரவாதி அழைப்பு

Added : ஜன 28, 2013 | கருத்துகள் (2)
Share
Advertisement

மும்பை:பாலிவுட் முன்னணி நடிகர் ஷாருக் கானுக்கு, பாக்., பயங்கரவாத இயக்கமான, ஜமாயத் - உத் - தவா தலைவன், ஹபீஸ் முகமது சயீத் அழைப்பு விடுத்துள்ளான். ""இந்தியா வில் உங்களுக்கு மதிப்பு இல்லை என்றால், பாக்., வந்து விடுங்கள்; உங்களை நாங்கள் பார்த்து கொள்கிறோம்'' என, தெரிவித்துள்ளான்.

இந்தி சினிமா உலகின் முன்னணி நடிகர், ஷாருக் கான். "டிவி' தொடர்களில் அறிமுகமான அவர், படங் களில் சின்னச்சின்ன வேடங்களில் தலைகாட்டி, இப்போது, முன்னணி நடிகராக வலம் வருகிறார். கவுரி என்ற பெண்ணை மணந்து, மும்பையில் வாழ்ந்து வருகிறார்.சமீபத்தில், பத்திரிகை ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருந்ததாவது:நான் முஸ்லிம் என்பதால், அரசியல்வாதிகளால் அவ்வப்போது மிரட்டப்படுகிறேன். எனக்கு, தேசபக்தி இல்லை என்ற ரீதியில் தனிமைபடுத்தப்படுகிறேன். முஸ்லிம் என்பதால், அண்டை நாடான பாகிஸ்தானுடன் அடிக்கடி தொடர்பு படுத்தப்படுகிறேன்.

நான் இந்தியனாக இருந்த போதிலும், என் தந்தை, சுதந்திர போராட்டங்களில் கலந்து கொண்ட போதிலும், முஸ்லிம் என்பதால், வேறுபடுத்தப்படுகிறேன். என்னை மும்பையை விட்டு வெளியேற்றவும், பாகிஸ்தானுக்கு செல்லும் படியும், நான் விரட்டப்படுகிறேன். இதற்காக, பல முறை ஊர்வலங்கள், பேரணிகள் கூட நடத்தப்பட்டுள்ளன.இவ்வாறு, ஷாருக் கான் கூறியிருந்தார்.

இதை அறிந்த, பாக்., பயங்கரவாத அமைப்புகளின் தலைவன், ஹபீஸ் முகமது சயீத், ஷாருக்கானுக்கு வெளிப்படையாக அழைப்பு விடுத்துள்ளான்.""இந்தியாவில் உங்களுக்கு பாதுகாப்பு இல்லை என நீங்கள் உணர்ந்தால், பாகிஸ்தான் வரலாம்; உங்களை வரவேற்க காத்திருக்கிறோம். பாகிஸ்தானில் நிரந்தரமாக தங்க ஏற்பாடு செய்கிறோம். உங்களுக்கு போதிய மரியாதை அளிக்கப்படும். ஷாருக்கிற்கு, பாகிஸ்தான் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கிறது,'' என்றான்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
villupuram jeevithan - villupuram,இந்தியா
28-ஜன-201310:22:53 IST Report Abuse
villupuram jeevithan பாதுகாப்பு கொடுப்பீர்கள், வருமானம் கிடைக்குமா? அதை உறுதி படுத்துங்கள்.
Rate this:
Cancel
Sri Ranga - Kovai,இந்தியா
28-ஜன-201307:22:31 IST Report Abuse
Sri Ranga அப்பிடியே எல்லோருக்கும் அழைப்பு விடு. மற்றவர்கள் இங்கு நிம்மதியாக வாழட்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X