சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாழைப்பழ "சைசில்' தேங்காய் : "தானே' புயலால் தொடரும் சோகம்

Added : பிப் 01, 2013 | கருத்துகள் (2)
Advertisement
வாழைப்பழ "சைசில்' தேங்காய் : "தானே' புயலால் தொடரும் சோகம்

பரங்கிப்பேட்டை: "தானே' புயல் பாதிப்பால் தேங்காய், மெலிந்து வாழைப்பழம், "சைசில்' நீண்டு உள்ளதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த பல ஆண்டு பலன் தரக்கூடிய தென்னை, மா, பலா, முந்திரி உள்ளிட்ட மரங்கள், "தானே' புயல் கோரத்தாண்டவத்தில் சின்னாபின்னாமானது. வாழ்வாதாரத்தை இழந்த விவசாயிகள், அரசு வழங்கிய நிவாரணத்தை கொண்டு, புயலில் தப்பிய மரங்களை பராமரிக்க துவங்கியுள்ளனர். இருப்பினும், புயலில் தப்பிய தென்னை மரங்களில், தேங்காய் காய்ப்பு குறைவாகவே உள்ளது. பரங்கிப்பேட்டை அடுத்த பெரியகுமட்டி கிராமத்தில், தானே புயலில் தப்பிய தென்னை மரங்களில், காய்க்கும் தேங்காய்கள் ,திறட்சி இல்லாமல், மெலிந்து வாழைப்பழம் அளவில் உள்ளது. மட்டைகள் எப்போதும்போல் பெரியளவில் உள்ளது. ஆனால் இளநீரில் ஒரளவு தண்ணீர் இருந்தாலும் முன்பு போல இல்லை. அவை முற்றிய பின் பருப்பின் அடர்த்தி குன்றி, தண்ணீரின்றி, மெலிந்து கொப்பரையாக மாறி விடுகிறது. இதனால், தென்னை மரங்களை தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் பார்வையிட்டு, தரமான தேங்காய் விளைச்சலுக்கு ஆலோசனை வழங்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramadurai Azhagirisamy - Al-Khor,கத்தார்
02-பிப்-201311:58:46 IST Report Abuse
Ramadurai Azhagirisamy அரசு வழங்கிய நிவாரணம்?????? அதை கொண்டு இரண்டு நாள் சாப்பிட கூட முடியாதப்பா நீங்கள் அடிக்கும் ஜால்ராவில் எங்கள் செவிகள் செவிடாகிவிடும் போல் உள்ளதே
Rate this:
Share this comment
Cancel
Muthukarthi - sathyamangalam,இந்தியா
02-பிப்-201307:02:46 IST Report Abuse
Muthukarthi அனைத்து விவசாய்களுக்குமாக தான் குரல் கொடுக்கவேண்டும், ஓரு பானை சோற்றுக்கு ஓரு சோறு பதம் போல ஒரு சிறு உதா(ரனம்) நாங்கள் ஒரு தேங்காய் ரூ4க்கு விக்கிறோம்,அதற்கு உற்பத்தி செலவு இல்லாமலேயே கூலியை மட்டுமே கணக்கிடுவோம்,தேங்காய் போட0.50பைசா,குட்டு அடிக்க0.40பைசா,உரிக்க0.50பைசா,எனில் எங்கலுக்கு நிற்பது எவ்வளவு என கணக்கிட்டுக்கொள்ளுங்கள், மத்திய மானில அரசுகள் உணவுக்கே இலாயக்கற்ற பாமாயிலை ஒவ்வோரு ரேசன் கார்டு மூலமாக ஒவ்வொரு வீட்டுக்கும் அனுப்பும் பொழுது,உடலுக்கு தீங்கற்ற தேங்காய்எண்ணையை ரேசன் கடைகளிள் வினியோகிக்காதது ஏன் என குரல் கொடுக்கவேண்டும், இது போல நிறைய உண்டுங்க சாமி...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X