காஷ்மீரில் பெண்கள் இசை குழுவுக்கு மிரட்டல் விடுத்தவர்கள் மீது வழக்கு

Added : பிப் 06, 2013
Advertisement

ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீரில் செயல்பட்டு வந்த, பெண்கள் இசை குழுவுக்கு, சமூக வலைத் தளங்கள் மூலமாக, மிரட்டல் விடுத்தவர்களுக்கு எதிராக, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். "விரைவில், அவர்கள் கைது செய்யப்படுவர்' என்றும், அறிவித்துள்ளனர். காஷ்மீரில், 10ம் வகுப்பு படிக்கும், பள்ளி மாணவியர் மூன்று பேர், ஒரு இசை குழுவை உருவாக்கி, இசை நிகழ்ச்சியை நடத்தினர். இந்த பெண்கள் இசைகுழு, பிரபலமடைந்தது. இவர்களுக்கு, காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த, சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. சமூக வலைத் தளங்கள் மூலமாகவும், அவர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டது. அத்துடன், காஷ்மீரிலுள்ள, இஸ்லாம் மத குருவான, பஷீருதீன் அகமது என்பவரும், இந்த பெண்கள் இசை குழுவுக்கு எதிராக, தடையுத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து, இசை குழுவில் இடம் பெற்றிருந்த, மூன்று பெண்களுமே, "இனிமேல் இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்க போவது இல்லை' என, அறிவித்தனர். இதற்கிடையே, இவர்களுக்கு, சமூக வலைத் தளமான,"பேஸ்புக்' மூலமாக, மிரட்டல் விடுத்தவர்களுக்கு எதிராக, காஷ்மீர் போலீசார், வழக்கு பதிவு செய்துள்ளனர். "தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ், சம்பந்தபட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து முழு வீச்சில் விசாரணை நடக்கிறது. மிரட்டல் விடுத்தவர்கள், விரைவில் கைது செய்யப்படுவர்' என, காஷ்மீர் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், " மிரட்டல் விடுத்துள்ளவர்களில், ஆறு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மற்றவர்களையும், அடையாளம் காணும் பணி, நடக்கிறது. அடுத்த சில நாட்களில், கைது நடவடிக்கை துவங்கும்' என்றன. இதற்கிடையே, காஷ்மீரில் செயல்பட்டு வரும், பிரிவினைவாத அமைப்புகளுக்கு இடையே, இந்த பெண்கள் இசைக் குழுவை எதிர்ப்பதில், கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. எம்.கே.எம்., என்ற அமைப்பைச் சேர்ந்த, ஜமருதா ஹபீப் கூறுகையில், ""ஆண் பாடகர்களுக்கு எதிராக, தடையுத்தரவு பிறப்பிக்காதது ஏன்? அரசுப் பணிகளிலும், ராணுவ நடவடிக்கைகளிலும், ஏராளமான பெண்கள் பணியாற்றுகின்றனர்; அவர்களுக்கு தடையுத்தரவு பிறப்பிக்காதது ஏன்?,'' என, கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X