காஷ்மீரில் 2வது நாளாக தொடருகிறது ஊரடங்கு

Added : பிப் 11, 2013
Share
Advertisement
ஸ்ரீநகர்:அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, காஷ்மீர் முழுவதும், இரண்டாவது நாளாக, நேற்றும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டது.பார்லிமென்ட் தாக்குதல் வழக்கில், சதித் திட்டம் தீட்டியதற்காக, அப்சல் குரு, நேற்று முன்தினம், தூக்கிலிடப்பட்டான். இதையடுத்து, அப்சல் குருவின் சொந்த மாநிலமான, காஷ்மீரில், பதற்றமான சூழல் நிலவுகிறது. இதனால், அங்கு
காஷ்மீரில் 2வது நாளாக தொடருகிறது ஊரடங்கு

ஸ்ரீநகர்:அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, காஷ்மீர் முழுவதும், இரண்டாவது நாளாக, நேற்றும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டது.பார்லிமென்ட் தாக்குதல் வழக்கில், சதித் திட்டம் தீட்டியதற்காக, அப்சல் குரு, நேற்று முன்தினம், தூக்கிலிடப்பட்டான். இதையடுத்து, அப்சல் குருவின் சொந்த மாநிலமான, காஷ்மீரில், பதற்றமான சூழல் நிலவுகிறது.


இதனால், அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில், மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் வகையிலும், வன்முறையை தவிர்க்கும் வகையிலும், விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.ஊரடங்கு உத்தரவையும் மீறி, ஒரு சில இடங்களில், நேற்று முன்தினம், வன்முறை ஏற்பட்டது. இதில், 23 போலீசார் உட்பட, 36 பேர் காயமடைந்தனர். இந்நிலையில், காஷ்மீரில், நேற்றும் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்தது.


பதற்றமான இடங்களில், போலீசாருடன், துணை ராணுவப் படையினரும், பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.நேற்றும், பெரிய அளவிலான, அசம்பாவிதங்கள் எதுவும் நடக்கவில்லை. செய்தி சேனல்கள், மொபைல் போன், இணையதள சேவைகள், இரண்டாவது நாளாக, நேற்றும் முடக்கி வைக்கப்பட்டிருந்தன; பத்திரிகைகளும், வெளிவரவில்லை.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X