பொது செய்தி

தமிழ்நாடு

பா.ஜ., வுடன் ரகசிய கூட்டு இல்லை : அரசு விளக்கம்

Added : ஆக 19, 2010
Share
Advertisement

புதுடில்லி : சர்ச்சைக்குரிய அணு உலை விபத்து நஷ்டஈடு மசோதா நேற்று பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா விவகாரத்தில் காங்கிரஸ் - பாரதிய ஜனதா இடையே சில ரகசிய உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக இதர கட்சிகள் குற்றம் சுமத்தியதால், பார்லிமென்டில் அமளி நிலவியது. இதனால், லோக்சபாவும், ராஜ்யசபாவும் நாள் முழுவதற்கும் ஒத்திவைக்கப்பட்டன. சொராபுதீன் போலி என்கவுன்டர் வழக்கில் குஜராத் முதல்வர் மோடியை மத்திய அரசு எதுவும் செய்யக் கூடாது என்பதற்காகவே அணு உலை விபத்து நஷ்டஈடு மசோதாவை, பாரதிய ஜனதா கட்சி ஆதரிக்கிறது. இந்த விவகாரத்தில் இரு கட்சிகள் இடையே ரகசிய உடன்பாடு ஏற்பட்டுள்ளது' என்றும் எதிர்கட்சிகள் குற்றம் சாட்டின. இந்நிலையில் இந்தக் குற்றச்சாட்டை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. லோக்சபாவில் விளக்கமளித்த பார்லிமென்ட் விவகாரத் துறை அமைச்சர் பவன் குமார் பன்சால் :  சொரபுதீன் வழக்கை சி.பி.ஐ., சப்ரீம் கோர்ட் வழிகாட்டதலின்படி விசாரித்து வருகிறது. இதில் மத்திய அரசு தலையீடு ஏதும் இல்லை என்றார்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X