சிலை திருடர்கள் கைது: நான்கு சிலைகள் மீட்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிலை திருடர்கள் கைது: நான்கு சிலைகள் மீட்பு

Added : ஆக 20, 2010 | கருத்துகள் (1)

சென்னை : ""சிலைகளை திருடுவது பொருளாதார குற்றம் மட்டுமல்ல; கலாசாரத்தின் மீதான தாக்குதல். சிலை திருட்டை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்று பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி., டோக்ரா தெரிவித்தார். தமிழகத்தில், கோவில் சிலைகளை திருடுபவர்களை தடுக்கும் விதமாக சிலை திருட்டு தடுப்புப் பிரிவு இன்ஸ்பெக்டர் காதர்பாட்சா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில் சென்னை மெரீனா கடற்கரையில் உழைப்பாளர் சிலை அருகில் சந்தேகத்திற்கிடமான நிலையில் சிலர் நிற்பதாக தகவல் கிடைத்தது. அவர்களை தனிப்படையினர் பிடித்து விசாரித்த போது, அவர்களிடம் ஒரு அடி உயரமுள்ள பிரதோஷ அம்மன் உலோக சிலை இருந்தது. அவர்கள் திருச்சி, லால்குடியைச் சேர்ந்த ஜஸ்டின் (37) மற்றும் அரியலூரைச் சேர்ந்த ஆல்ரின் பிரபு (23) என்பது தெரிந்தது. நடராஜர் சிலை உள்ளிட்ட ஏழு சாமி சிலைகள், வெள்ளி கிரீடம் ஆகியவற்றை தஞ்சை மாவட்டம், திருவையாறு அருகில் தில்லை தலத்தில் உள்ள கிரிதபுரீஸ்வரர் கோவிலில் இருந்து திருடியுள்ளனர். அவர்களிடம் இருந்து நான்கு சிலைகள் மீட்கப்பட்டன. இருவரையும் போலீசார் கைது செய்தனர். மீட்கப்பட்ட சிலைகளின் மதிப்பு 23 லட்ச ரூபாய். இதில் தொடர்புடைய மேலும் இருவரை போலீசார் தேடுகின்றனர்.


Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X