எம்.பி.,க்களுக்கு 3 மடங்கு சம்பள உயர்வு : "இது போதாது' என ஆவேசம்

Added : ஆக 20, 2010 | கருத்துகள் (94)
Share
Advertisement
எம்.பி.,க்களுக்கு 3 மடங்கு சம்பள உயர்வு : "இது போதாது' என ஆவேசம்

புதுடில்லி : எம்.பி.,க்களின் தற்போதுள்ள சம்பளத்தை விட மூன்று மடங்கு அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது போதாதுஎன, எம்.பி.,க்கள் பலர் குரல் கொடுத்துள்ளனர்.


எம்.பி.,க்கள், தற்போது மாதம் 16 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெறுகின்றனர். அதுபோக, பார்லிமென்ட் நடக்கும் நேரங்களிலும், சபை கமிட்டியின் அமர்வுகள் நடக்கும் போதும், தினமும் ஆயிரம் ரூபாய் அலவன்ஸ் பெறுவர். இதுதவிர, மாதம் ஒன்றுக்கு ஒவ்வொரு எம்.பி.,க்கும் தொகுதி அலவன்சாக 20 ஆயிரம் ரூபாயும், அலுவலக அலவன்சாக 20 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படுகிறது. குறிப்பிட்ட அளவுக்கு இலவச விமான பயணங்கள் மற்றும் ரயில் பயணங்கள், வாடகை இல்லாத வீடு போன்ற சலுகைகளும் உண்டு. ஆறாவது சம்பளக் கமிஷன் அடிப்படையில் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்பட்டதை அடுத்து, எம்.பி.,க்களும் தங்களின் சம்பளத்தை உயர்த்த வேண்டும் என, கோரினர். இது தொடர்பாக பார்லி.,கூட்டுக் குழு ஒன்றும்அமைக்கப் பட்டது.


அந்தக் குழு, எம்.பி.,க்களின் சம்பளத்தை 80 ஆயிரத்து ஒரு ரூபாயாக நிர்ணயிக்க வேண்டும் என, பரிந்துரை செய்தது. இந்த அளவுக்கு சம்பளத்தை நிர்ணயித்தால், மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்படும் என, பார்லிமென்ட் விவகார அமைச்சகம் தெரிவித்ததால், எம்.பி.,க்களின் சம்பளத்தை மாதம் 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்த மத்திய அரசு தீர்மானித்தது. இதுபற்றி இந்த வார முற்பகுதியில் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அப்போது, மத்திய அமைச்சர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், முடிவு எடுப்பது தள்ளிவைக்கப்பட்டது.


இந்நிலையில், "தங்களின் சம்பளத்தை உயர்த்த வேண்டும்'என, வலியுறுத்தி நேற்று பார்லிமென்டில் எம்.பி.,க்கள் பலர்அமளியில் ஈடுபட்டனர். தர்ணா போராட்டமும் நடத்தினர். நேற்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில், எம்.பி.,க்களின் சம்பளத்தை மூன்று மடங்கு அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பான மசோதாவுக்கும் ஒப்புதல் அளிக்கப் பட்டது. தற்போது 16 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெறும் எம்.பி.,க்கள், இனி மாதம் 50 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெறுவர். ஆனால் இது போதாது என எம்.பி.,க்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.


Advertisement


வாசகர் கருத்து (94)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bala - MADURAI,இந்தியா
25-ஆக-201019:18:33 IST Report Abuse
Bala இதுல்லாம் சரி, இந்த மக்கள பிரிதிநிதிகளின் ஆசைக்கு அளவே இல்லையா?
Rate this:
Cancel
குமாரா - சிவகாசிதமிழ்நாடு,இந்தியா
24-ஆக-201002:09:30 IST Report Abuse
குமாரா சுய லாப அரசியல் வாதிகள் தன சம்பள பிரச்சனையல் மட்டும் evvalavu ஒற்றுமை. மக்கள் பிரச்னை என்றால் கூச்சல் குழப்பம் செய்து மக்கள் வரி பணத்தை veen செய்கின்றனர். இவர்களை அடையாளம் கண்டு அடுத்த எலக்சனில் வோட்டுக்கு pathil செருப்படி கொடுக்கணும்
Rate this:
Cancel
சதியஷீலா பொன்மணி - ariyalur,இந்தியா
23-ஆக-201020:48:49 IST Report Abuse
சதியஷீலா பொன்மணி மக்கள் ரத்தத்தை உறிஞ்சுபவர்களுக்கு இன்னும் அதிக கூலி தேவையா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X