சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறுமியிடம் தவறாக நடக்க முயற்சி:மதபோதகர் கைது

Added : மே 26, 2010 | கருத்துகள் (4)
Advertisement

தென்தாமரைகுளம்:தென்தாமரைகுளம் அருகே குழந்தைகள் காப்பக சிறுமியிடம் தவராக நடக்க முயன்ற மதபோதகர் கைது செய்யப்பட்டுள்ளார்.குலசேகரம் பகுதியை சேர்ந்த ராஜ்ஜோஸ் (56). மதபோதகரான இவர் தென்தாமரைகுளம் பகுதியில் கடந்த 2 ஆண்டுகளாக குழந்தைகள் காப்பகம் நடத்தி வருகிறார். இந்த காப்பகத்தில் 6 குழந்தைகள் தங்கி அருகில் உள்ள பள்ளிகளில் படித்து வருகின்றனர். நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பரமார்த்தலிங்கபுரத்தை சேர்ந்த ஒருவரின் 9 வயது மகள் இந்த காப்பகத்தில் தங்கி அருகில் உள்ள பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வருகிறார்.


கடந்த 20ம் தேதி காப்பகத்தில் யாரும் இல்லாத நேரத்தில் உள்ளே சென்ற ராஜ்ஜோஸ் அந்த சிறுமியிடம் பாலியல் தொல்லை கொடுத்து தவறாக நடக்க முயன்றுள்ளார். கடந்த 23ம் தேதி விடுமுறை நாள் என்பதால் சிறுமி அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது தனது தாயிடம் ராஜ்ஜோஸ் நடந்து கொண்டது குறித்து தெரிவித்துள்ளார். இதையடுத்து சிறுமியின் தாய் ஜீவராணி தென்தாமரைகுளம் போலீசில் புகார் செய்தார். புகாரின்படி சப் இன்ஸ்பெக்டர் ராஜப்பன் வழக்கு பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் பால்துரை விசாரணை நடந்தி மதபோதகர் ராஜ்ஜோசை கைது செய்தார். 


Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
செந்தில் kumar - dubai,இந்தியா
26-மே-201014:39:02 IST Report Abuse
 செந்தில் kumar தயவு இந்த செய்தியை முதல் பக்கமாக ஆக்குங்கள், அப்பத்தான் மதபோதகர் விசயம் அம்பலபடும்
Rate this:
Share this comment
Cancel
c - dubai,இந்தியா
26-மே-201014:33:15 IST Report Abuse
 c சுவாமி நித்தியானந்தா வை மட்டும் கிழி கிழி என்று கிழித்தீர்களே சுவாமி நிதியனந்தாவது ஒரு நடிகையை, தன் சம்மதத்துடன் வைத்திருந்தார். இந்த போதகர் ஒரு பட்சிலம் குழந்தயை கொடுமை படுத்திருக்கிறார். எப்படி ?
Rate this:
Share this comment
Cancel
Rajeesh - Dubai,இந்தியா
26-மே-201013:09:20 IST Report Abuse
 Rajeesh கிறிஸ்துவர்கள் மேல் கோபம் இருந்தால் உடனே இது போன்ற செய்திகளுக்கு REVIEW எழுதும் வழக்கத்தை நிறுத்துங்கள். மற்ற மதத்தை சேர்ந்தவர்கள் யாரும் தவறே செய்யாத மாதிரி கூறுகிறீர்களே? ஹிந்து தீவிரவாதி. முஸ்லீம் தீவிரவாதி என்று மட்டும்தான் கேட்டிருக்கிறோம் என்பதை மனதில் கொள்ளவும். எவனோ ஒருத்தன் செய்த தவறுக்காக ஒரு மதத்தை குறை கூறுவது என்ன நியாயம்? ஜாதி மதம் பார்க்காமல் எல்லோருக்கும் கல்வி அறிவு கொடுத்தது கிறிஸ்துவ நிறுவனங்கள் தான் என்பதை மறக்க வேண்டாம் (உடனே மதம் மாற்றத்தான் கல்வி கொடுத்தார்கள் என்ற அடிப்படை இல்லாத குற்றச்சாட்டை கூறவேண்டாம் அப்படி செய்திருந்தால் அவர்கள் மெஜாரிட்டி ஆகியிருப்பார்கள்.) பாவம் செய்யாதவன் முதலில் கல் எரியட்டும் என்று இயேசு கிறிஸ்து கூறியதை நினைத்து பாருங்கள். குறை கூறும் முன் உங்கள் பக்கத்தை பாருங்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X