அரசியல் செய்தி

தமிழ்நாடு

இந்தியாவை நாம் ஆளும் போது தான் நமக்குரிய உரிமைகள் கிடைக்கும்: த.மு.மு.க., மாநில துணை செயலர்

Updated : ஆக 23, 2010 | Added : ஆக 23, 2010 | கருத்துகள் (77)
Share
Advertisement
கோவை:"இந்தியாவை நாம் ஆளும் போது தான், உரிமைகள் நமக்கு கிடைக்கும்' என மதானி கைது செய்யப்பட்டதை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில், த.மு.மு.க., மாநில துணை செயலர் பேசினார்.பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கில், கேரள மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மதானி சில நாட்களுக்கு முன் கைது செய்யப்பட்டார். கர்நாடக போலீசாரின் இந்நடவடிக்கையை கண்டித்து, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்

கோவை:"இந்தியாவை நாம் ஆளும் போது தான், உரிமைகள் நமக்கு கிடைக்கும்' என மதானி கைது செய்யப்பட்டதை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில், த.மு.மு.க., மாநில துணை செயலர் பேசினார்.பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கில், கேரள மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மதானி சில நாட்களுக்கு முன் கைது செய்யப்பட்டார். கர்நாடக போலீசாரின் இந்நடவடிக்கையை கண்டித்து, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில், நேற்று காந்திபுரம் தமிழ்நாடு ஓட்டல் முன், ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்ட தலைவர் பர்கத் அலி தலைமை வகித்தார். மாவட்ட செயலர் ரபீக், பொருளாளர் அகமது கபீர் முன்னிலை வகித்தனர்.


ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைச் செயலர் செய்யது பேசியதாவது:கடந்த 2008ல் பெங்களூருவில் நடந்த குண்டு வெடிப்பு வழக்கில் பிடிபட்ட கேரளாவை சேர்ந்த நசீர் கொடுத்த வாக்குமூலத்தில், மதானி 31வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். கோவை குண்டு வெடிப்பு வழக்கில் விடுதலையானவர், கேரள சிறப்பு போலீஸ் படை பாதுகாப்பில் இருந்தார். அவர் எங்கெல்லாம் சென்றார் என கேரள போலீசாருக்கு தெரியும்.இப்படி இருக்கும் போது, 31வது குற்றவாளியாக இருக்க முடியுமா? மதானி கைது மூலம் வேறு யாரையோ சிக்க வைக்க கர்நாடக அரசு முயற்சிக்கிறது. மதானியை கைது செய்ய தீவிரம் காட்டிய போலீசார், மலேகான், சம்ஜவ்தா, அஜ்மீர் குண்டு வெடிப்பு சம்பவங்களில் குற்றம் சாட்டப்பட்ட இந்துத்துவா பெரும்புள்ளிகளை கைது செய்யாதது ஏன்?கேரள போலீஸ் பாதுகாப்பில் இருக்கும் ஒருவர் எப்படி குண்டு வைத்திருக்க முடியும். எனவே கேரள போலீசாரையும் இவ்வழக்கில் முக்கிய சாட்சியாக விசாரிக்க வேண்டும்.


தவிர கர்நாடக அரசையும் மத்திய போலீசார் விசாரிக்க வேண்டும். ஒவ்வொரு குண்டு வெடிப்பின் போதும், முஸ்லிம்களை கைது செய்து, தீவிர விசாரணைக்கு பின் விடுவிக்கின்றனர்.மத்திய உளவுத் துறையில் ஆர்.எஸ்.எஸ்., பற்றுள்ளவர்கள் தான் அதிகாரிகளாக உள்ளனர். இவர்கள் தான் முஸ்லிம்களுக்கு எதிராக செயல்படுகின்றனர். முஸ்லிம்களாகிய நமக்குரிய உரிமைகள் கிடைக்க, நாம் இந்தியாவை ஆள வேண்டுமென்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பொய் வழக்கில் கைது செய்யப்பட்ட மதானியை விடுதலை செய்யும் வரை போராட்டம் தொடரும்.இவ்வாறு செய்யது பேசினார்.கோவை மாநகர் மாவட்ட தலைவர் மொய்தீன் சேட் நன்றி கூறினார்.


Advertisement




வாசகர் கருத்து (77)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சிவன் என்கிற  ஏசு என்கிற அல்லா என் அருமை முட்டாள் மக்களே நான் தான் உங்களை படைத்த இயற்கை . என்னை சிவம் என அழைத்தீர்கள் ( 5000 வருடம் முன்பிலிருந்து ) . பின் ஏசு என அழைத்தீர்கள்(2000 ம் வருடத்தில் இருந்து). அல்லா (என அழைத்தீர்கள் (1600 வருடத்தில் இருந்து ) நான் சிவம் அல்ல நான் ஏசு அல்ல நான் அல்லா அல்ல நான் தான் இயற்கை. இன்னும் பல பெயர்களில் படைக்க படுவேன் . தி.க - வில் இருந்து தி.மு.க பிரிந்தது தி.மு.க வில் இருந்து அ.தி.மு.க பிரிந்தது தி.மு.க வில் இருந்து ம.தி.மு.க பிரிந்தது இது தொடரும் ... இதற்கு காரணம் தனி மனிதனின் சுய லாபம் தான். மதம் உருவனதற்கும் இதுவே காரணம் . முட்டாள் மக்களே இயற்கை யாகிய என்னை படியுங்கள்.
Rate this:
Cancel
kannathasan - singapore,இந்தியா
24-ஆக-201021:07:02 IST Report Abuse
kannathasan தயவுசெய்து அனைவரும் மனிதர்களாக இருக்க பாருங்கள் . நாம் பேசுவதற்கும் சிந்திப்பதிருக்கும் நிறைய விஷயங்கள் இருக்கிறது ,நம்முடைய வேற்றுமையில் அரசியல்வாதிகள் நன்றக குளிர் காய்ந்து கொண்டிருக்கிரர்கள். நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் அவர்களுக்கு வேலை இருக்காது . நாம் இந்தியன் en
Rate this:
Cancel
விஷ்ணு - மதுரை,இந்தியா
24-ஆக-201020:31:37 IST Report Abuse
விஷ்ணு இந்தியாவில் இருக்கும் 15 கோடி முஸ்லிம் மக்களில் இவர் மட்டும் ஏன் இப்படி பேசுகிறார். அனைவரும் ஒற்றுமையாய் இருப்பது இவருக்கு பிடிக்கவில்லையோ
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X