ஓட்டுப்பதிவு இயந்திர திருட்டு விவகாரத்தில் திருப்பம்

Updated : ஆக 27, 2010 | Added : ஆக 26, 2010 | கருத்துகள் (67)
Share
Advertisement

மும்பை : ஓட்டுப் பதிவு இயந்திர திருட்டு விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இயந்திரத்தில் தில்லுமுல்லு செய்ய முடியும் என நிரூபித்த கம்ப்யூட்டர் நிபுணர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கம்ப்யூட்டர் நிபுணருக்கு ஜாமீனும் மறுக்கப்பட்டுள்ளது.

"தேர்தலில் பயன்படுத்தப்படும் மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்ய முடியும்' என, "வீடா' என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் பிரசாரம் செய்து வருகிறது. ஐதராபாத்தைச் சேர்ந்த ஹரிபிரசாத் என்ற கம்ப்யூட்டர் நிபுணரும் இந்த அமைப்பில் உள்ளார். அந்த தொண்டு நிறுவனத்தின் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளராக அவர் பணியாற்றி வருகிறார். கடந்த ஏப்ரல் 28ல் ஐதராபாத்தில், மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரத்தை வைத்து, அதில் முறைகேடு செய்ய முடியும் என்பதை விளக்கிக் காட்டினார். தனியார் "டிவி' சேனலில் இது ஒளிபரப்பானது. இதையடுத்து, இதுகுறித்து விரிவாக விளக்கிக் கூற வேண்டும் என, கடந்த 10ம் தேதி தலைமை தேர்தல் கமிஷனிடம் இருந்து ஹரிபிரசாத்துக்கு அழைப்பு வந்தது.

திருப்பம்: கடந்த 21ம் தேதி மும்பை சென்ற ஹரிபிரசாத், மகாராஷ்டிர போலீசாரால் கைது செய்யப்பட்டார். மும்பை கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப் பட்டிருந்த ஓட்டுப் பதிவு இயந்திரத்தில் ஒன்று திருடப் பட்டுள்ளதாகவும், இதில் ஹரிபிரசாத்துக்கு தொடர்பு உள்ளதாகவும் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. "டிவி' நிகழ்ச்சியில் ஹரிபிரசாத் பயன்படுத்திய இயந்திரத்தின்எண்ணும், மும்பையில் திருடப்பட்ட இயந்திரத்தின் எண்ணும் ஒன்றாக இருப்பதாக தெரிவிக்கப் பட்டது. ஹரிபிரசாத்தின் போலீஸ் காவல் முடிவடைந்ததையொட்டி, மும்பை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் அவர் நேற்று ஆஜர் படுத்தப்பட்டார். அவரின் போலீஸ் காவலை மேலும் நீட்டித்து கோர்ட் உத்தரவிட்டது. இந்த வழக்கில் ஹரிபிரசாத் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவையும் கோர்ட் நிராகரித்து விட்டது.

நீதிபதி ஸ்ரீஹண்டே உத்தரவில், "இதில் ஹரிபிரசாத்திடம் விரிவான விசாரணை நடத்த போலீசாருக்கு மேலும் அவகாசம் அளிக்கப்பட வேண்டும்' என்றார். முன்னதாக, ஹரிபிரசாத் சார்பில் ஆஜரான வக்கீல் மகேஷ் ஜெத்மலானி தனது வாதத்தில், "ஹரிபிரசாத் ஒரு அப்பாவி. ஓட்டுப் பதிவு இயந்திரத்தை அவர் திருடவில்லை. மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு அமைப்பினர் தான், அவருக்கு ஓட்டுப்பதிவு இயந்திரத்தை கொடுத்துள்ளனர். இரண்டு நாட்களில், அந்த இயந்திரத்தை திரும்பவும் அவர்கள் எடுத்துச் சென்று விட்டனர்' என்றனர்.

சர்ச்சை: ஓட்டுப் பதிவு இயந்திரத்தில் தில்லுமுல்லு செய்ய முடியும் என நிரூபித்த தையடுத்து பல்வேறு சர்ச்சைகள் கிளம்பியுள்ளது. ஓட்டுப் பதிவு இயந்திரத்தில் தில்லுமுல்லு செய்ய முடியும் என நிரூபித்த கம்ப்யூட்டர் நிபுணர் ஹரிபிரசாத் கைது செய்யப்பட்ட விவகாரம், அவரது சொந்த மாநிலமான ஆந்திராவில் மட்டுமல்லாமல், தேசிய அளவிலும் பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை கையில் எடுதுத்துள்ளன. தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு கூறுகையில், "இந்த விவகாரத்தை தேசிய அளவில் எடுத்துச் செல்வோம். ஹரிபிரசாத் கைதால், ஓட்டுப் பதிவு இயந்திரத்தின் நம்பகத் தன்மை குறித்து பல்வேறு சந்தேகம் எழுந்துள்ளது. இதை தேர்தல் கமிஷன் தீர்த்து வைக்க வேண்டும்' என்றார்.

பா.ஜ., எம்.பி., மேனகா கூறுகையில், "அமெரிக்காவில் ஓட்டுப் பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்யப்படும் என, நிரூபிக்கப்பட்டுள் ளது. இதில் சிறிய அளவில் மாற்றம் செய்தால், தொடர்ந்து எங்களைப் போன்றவர்கள் எதிர்க்கட்சியில் இருக்க வேண்டியதுதான். சந்தேகத்தை போக்க, அனைத்து கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்' என்றார். மத்திய அமைச்சர் பரூக் அப்துல்லா உள்ளிட்டோரும் இந்த சர்ச்சைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என, வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (67)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
- ffbfghbfg,இந்தியா
27-ஆக-201016:02:56 IST Report Abuse
அ என்னத்தைச் சொல்ல எப்படியோ போங்க எல்லாரும் நல்ல இருங்க
Rate this:
Cancel
27-ஆக-201015:01:37 IST Report Abuse
தஞ்சாவூர். உ . கதிரவன் அப்பாடா! ஜெயாவுக்கு ஒரு வேலை வந்துவிட்டது. நான் முன்பே சொன்னது தான் என ஆரம்பித்து விடுவார்
Rate this:
Cancel
ராம் - chennai,இந்தியா
27-ஆக-201012:47:17 IST Report Abuse
ராம் இவர மாறி தில்லு முல்லு கண்டு புடிச்சி சொல்றவங்கள உள்ள தூக்கி போடனும், அப்போ தான் நம் நாட்டுக்கு நல்லது. நம்ம தலைவர்களுக்கும் நல்லது. இல்லனா இவங்க கட்சி நடத்த முடியாது , மக்களுக்கு நல்லது பண்ண முடியாது , இவரு தில்லு முல்ல கண்டுபுடிக்கலாம். மக்களுக்கு எனன பன்ன முடியும் , ராமர் பிள்ளை எனன ஆனார் , அவர் எதோ கண்டு கண்டு புடிச்சார் , கண்டிப்பாக அவர் கண்டு புடிச்ச பெட்ரோல் இப்போ கிடைக்கிற பெட்ரோல் தரத்தை விட நல்லாத்தான் இருந்து இருக்கும். சுவிஸ் பேங்க் வேர வாடிக்கை தாரர்கள் லிஸ்ட ரிலீஸ் பன்ன போறாங்கலாம் , கண்டிப்பாக நம்ம நாட்டு ஹீரோ எல்லாம் இருப்பாங்க , அதுக்குள்ள அத தடுத்து நிறுத்தனும் , வாழ்க வளமுடன்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X