நக்சல் தலைவருடன் ராகுல் இருந்தாரா?

Updated : ஆக 29, 2010 | Added : ஆக 27, 2010 | கருத்துகள் (7)
Share
Advertisement

புதுடில்லி : "ஒரிசாவுக்கு சென்ற ராகுல், அங்கு நக்சலைட் அமைப்பைச் சேர்ந்தவருடன் மேடையில் இருந்ததாக வெளியான தகவல் குறித்து, மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும்' என, பா.ஜ., தெரிவித்துள்ளது.


பா.ஜ., செய்தி தொடர்பாளர் பிரகாஷ் ஜாவேத்கர் கூறியதாவது: ஒரிசா மாநிலம் லான்ஜிகார் பகுதிக்கு சுற்றுப்பயணம் செய்த காங்., பொதுச் செயலர் ராகுல், அங்கு நக்சலைட் அமைப்பைச் சேர்ந்தவர் என, சந்தேகிக்கப்படும் ஒருவருடன் மேடையில் இருந்ததாக மீடியாக்களில் தகவல் வெளியாகியுள்ளது. இது, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னை. நக்சலைட் விஷயத்தில் அரசு எப்படி செயல்படுகிறது என்பதை காட்டும் வகையில் இது உள்ளது. மத்திய அரசில் அங்கம் வகிக்கும் ஒரு அமைச்சர், பொதுக் கூட்டத்தில் நக்சலைட்களுக்கு ஆதரவாக பேசுகிறார். மற்றொரு புறம், காங்கிரஸ் கட்சியின் பட்டத்து இளவரசர், நக்சலைட் என சந்தேகப்படும் ஒருவருடன் மேடையை பகிர்ந்து கொண்டுள்ளார். இதுபோன்ற நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது. இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும். இவ்வாறு பிரகாஷ் ஜாவேத்கர் கூறினார். பா.ஜ.,வின் குற்றச்சாட்டை காங்., மறுத்துள்ளது.


Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s.raman - mumbai,இந்தியா
30-ஆக-201009:30:36 IST Report Abuse
s.raman WHAT IS WRONG ? DIDI MISS MAMTHA CAN SHARE WHY MR.RAHUL CAN NOT? HOWEVER WHEN RAHUL CAN REACH ORISSA AND WHY NOT TO REACH MAHARASHTRA? FOR THE NEW AIRPORT IN MUMBAI THEY NEED LAND AND THAT TOO FROM THE VILLAGE PEOPLE BY GIVING HUGE MONEY. THE PEOPLE WHO DOES NOT WISH TO GIVE ARE IN TROUBLE. WHY NOT THESE PEOPLE ARE LEFT BY RAHUL.
Rate this:
Cancel
Guru - Penang,மலேஷியா
29-ஆக-201012:47:39 IST Report Abuse
Guru என்ன தப்பு? என்னே விந்தையான நினைப்பு !!! காங்கிரஸ் கட்சி இந்தியாவை ஆளும் வரை இது போன்ற விசித்திர செயல்களுக்கு பஞ்சமிருக்காது. 60 ஆண்டுகள் இந்தியாவை ஆண்டு உலகத்திலேயே ஏழைகள் மிகுந்த நாடாக ஆக்கி சாதனை படைத்த காங்கிரஸ் கட்சி வாழ்க வளர்க.
Rate this:
Cancel
EV ஸ்ரீனிவாசன் - மஸ்கட்ஓமன்,ஓமன்
28-ஆக-201018:08:07 IST Report Abuse
EV ஸ்ரீனிவாசன் நக்சல் அமைப்பின் உறுப்பினர் / ஒரு தலைவர் ராகுல் அதன் வேறு ஒரு உறுபினருடன் இருந்தார். காங்கரஸ் உண்மையில் நக்சல் அமைப்பின் ஒரு பங்குதான். என்ன, நக்சல் வாதிகள் தடை செய்யப்பட்டுள்ள ஒரு அமைப்பு. காங்கரஸ் அப்படி அல்ல. மற்றபடி, நக்சல் வேண்டுமானால் பொது மக்களுக்கு நல்லது செய்யலாம். காங்கரஸ் ஒரு போதும் செய்ய போவதில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X