பாகிஸ்தானில் அமெரிக்க தூதரகம் அருகே சண்டை

Added : ஆக 28, 2010
Share
Advertisement

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் அமெரிக்க தூதரகம் அருகே செயல்பட்டு வரும் ராணுவ முகாமிற்குள் அத்துமீறி நுழைந்த பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினருடன் கடும் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டனர். பாதுகாப்பு படையினர் இருவரை அவர்கள் பிணைக் கைதியாக பிடித்து வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் பாதுகாப்பு நிறைந்த இடத்தில் அமெரிக்க துணை தூதரக அலுவலகம் உள்ளது. இதற்கு அருகிலேயே பாகிஸ்தான் ராணுவத்துக்கு சொந்தமான முகாம் ஒன்றும் உள்ளது. அதிகபட்ச பாதுகாப்பு வளையத்துக்குள் இந்த முகாம் செயல்பட்டு வருகிறது. இன்று இந்த முகாமுக்குள் பயங்கரவாதிகள் சிலர் அத்துமீறி நுழைந்தனர். இதை அறிந்த பாதுகாப்பு படையினர் அவர்களை நோக்கி சுட்டனர். பயங்கரவாதிகளும் திருப்பி சுட்டனர். நீண்ட நேரமாக இந்த சண்டை நீடித்தது. இதையடுத்து, ஏராளமான ராணுவ வீரர்கள் அந்த இடத்தில் குவிக்கப்பட்டனர். வெளி நபர்கள் அந்த பகுதிக்குள் நுழையமுடியாதபடி, போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. ஹெலிகாப்டர் மூலமாகவும் கண்காணிப்பு பணி நடந்தது. சண்டையின் முடிவில் 3 பயங்கரவாதிகள் சரணடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X