குரும்பா இனத்துக்கு பெருமை சேர்க்கும் கவிஞர் கனகதாசர்

Added : ஆக 29, 2010 | |
Advertisement
நாமக்கல்: கண்ணபிரானை முழுமுதற் கடவுளாக கொண்டு, தமிழகத்தில் பன்னிரண்டு ஆழ்வார்கள் பாடி பாதி மலர் போற்றி பரவசமடைந்துள்ளனர். அதுபோல் சிவபிரானையும் போற்றி, புகழ்ந்து வழிபட வழிகாட்டிய மகான்கள் அறுபத்து மூன்று நாயன்மார்கள். அதுபோல் குரும்பர் குலகோமான் கனகதாசரும் தலைசிறந்த இறையடியவராக இன்றளவும் போற்றப்படுகிறார். இவர்,  400 ஆண்டுகளுக்கு முன் துங்கபத்திர நதிக்கரையும்

நாமக்கல்: கண்ணபிரானை முழுமுதற் கடவுளாக கொண்டு, தமிழகத்தில் பன்னிரண்டு ஆழ்வார்கள் பாடி பாதி மலர் போற்றி பரவசமடைந்துள்ளனர். அதுபோல் சிவபிரானையும் போற்றி, புகழ்ந்து வழிபட வழிகாட்டிய மகான்கள் அறுபத்து மூன்று நாயன்மார்கள். அதுபோல் குரும்பர் குலகோமான் கனகதாசரும் தலைசிறந்த இறையடியவராக இன்றளவும் போற்றப்படுகிறார். இவர்,  400 ஆண்டுகளுக்கு முன் துங்கபத்திர நதிக்கரையும் ஆணைகெந்தி சமஸ்தானத்தை சார்ந்த சிற்றரசர் பீரேகவுடா- பத்தியம்மையார் தம்பதிக்கு திருப்பதி வெங்கடேசப்பெருமாள் அருளால் காகிநிலை எனும் ஊரில் அவதரித்தார். அவருக்கு பெற்றோர் இட்ட பெயர் திம்மப்பன். அவர் பிறந்த பின் பொன், பொருள், தனம், தான்யம் பெருமளவில் சேர்ந்தபடியால் அவர் கனகன் (தங்கம்) என்று செல்லப்பெயரில் அழைக்கப்பட்டார். அவர் ஐந்து வயதில் தந்தையை இழந்தார். 16ம் வயதில் ஆணைகெந்தி அரசருடைய பிரபுவாய் பங்காபுரத்து அரசரானார். கனகன் தெய்வாம்சமாக பிறந்தவராதலால் தர்மம் செய்து மக்களை தன் பிள்ளைகளை போல் பாவித்தார். அவருக்கு கனகப்பதுரை, கனகப்பநாயக்கர் என்ற பெயரும் வழங்கப்பட்டது.


அவர் நெடுங்காலம் அரசராக இருந்து கைபோகங்களிலும் மூழ்கியும் இருந்தார். ஒருநாள் இரவில் வெங்கடேச பெருமாள் அடியவர் உருவில் வந்து நிலையற்ற போங்களை தவிர்த்து நிலையான பக்தி மேலிட ஆணையிட்டார். அதனால், அரசபோகத்தை தொடர்ந்து பல்வேறு கோவில்களுக்கும் சென்று வழிபட்டு துறவு நிலையில் உடுப்பியில் உள்ள கிருஷ்ணன் கோவிலுக்குள் வழிபட நுழைந்தார். அவரை கோவிலுக்குள் செல்லவிடாமல் தவிர்த்து வெளியே தள்ளப்பட்டார்.  அப்போது கோவில் பிரகாரத்தின் பின்புறமாக வந்து ஒரு பாடலை பாடினார்.கோவில் சுற்றுச்சுவர் இடிந்து இறைவன் ஒரு பக்கம் திரும்பி காட்சி அளித்தார். அதனை கண்ட அனைவரும், இவரை போற்றிப் புகழ்ந்தனர். அதுமுதல் இவரது புகழ் நாடெங்கும் பரவியது. சுவர் இடிந்த இன்றளவும் கனகன் திட்டிவாசல், கனக கிண்டி என அழைக்கப்படுகிறது. இக்கோவிலில் இவருக்கு 16 அடி உயரத்தில் சிலை வைக்கப்பட்டிருந்தது.


கடந்த மூன்றாண்டுக்கு முன் திருப்பணியின் போது,  சிலையை அகற்றிவிட்டனர். அதை எதிர்த்து கர்நாடகத்தில் குரும்பா இனத்தவர்கள் கண்டன ஆர்பாட்டம் செய்தனர். அவரது பெயரில் கனக யுவசேனா என்ற அமைப்பும் அங்கு செயல்பட்டு வருகிறது. அவர் தமிழகத்தில் வாழ்ந்த பட்டிணத்தாரை போல் ஞானியாகவும், பக்தி பாடல்கள் பலவும் பாடியுள்ளார். பள்ளி பாடங்களிலும் ஆன்மீக துறையிலும் இப்பாடல்கள இடம் பெற்றுள்ளன. அவர் பாடல்களை அறிஞர்கள் பலர் ஆய்வு செய்து, ஆய்வுக் கட்டுரைகள் வெளியிட்டுள்ளனர். ஆய்வறிக்கைகள் அமெரிக்காவிலும், லண்டனிலும் விற்பனை செய்யப்படுகிறது. அவர் பாடலிலேயே, தான் ஒரு சாரணமான குரும்பா எனக்கூறும் பாடல்களும் சில உண்டு. காளிதாசர் போன்று குரும்பா இனத்துக்கு பெருமையளிக்கும் இச்சான்றோர் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X