முதல்வருக்கு இஸ்லாமியர்கள் பக்கபலமாக இருக்க வேண்டும்: ஸ்டாலின் வேண்டுகோள்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

முதல்வருக்கு இஸ்லாமியர்கள் பக்கபலமாக இருக்க வேண்டும்: ஸ்டாலின் வேண்டுகோள்

Added : ஆக 30, 2010 | கருத்துகள் (88)
Advertisement
முதல்வருக்கு இஸ்லாமியர்கள் பக்கபலமாக இருக்க வேண்டும்: ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை : ""சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு அரணாக முதல்வர் கருணாநிதி விளங்குகிறார்,'' என, துணை முதல்வர் ஸ்டாலின் பேசினார். தமிழ் மாநில தேசிய லீக் சார்பில், இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சென்னை எழும்பூரில் நேற்று நடந்தது.


நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: கடந்த 1969ம் ஆண்டு தி.மு.க., ஆட்சியில் தான் முதல் முதலாக மிலாடிநபிக்கு அரசு விடுமுறை அளிக்கப்பட்டது. அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா, தி.மு.க., அரசை மைனாரிட்டி அரசு என்கிறார். இஸ்லாமியர் போன்ற மைனாரிட்டி மக்களுக்கான ஆட்சியாக இருப்பதால், இது மைனாரிட்டி ஆட்சி தான். தற்போதைய தமிழக அமைச்சரவையில் இரு இஸ்லாமியர்கள் இடம் பெற்றுள்ளனர். சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு அரணாக விளங்கும் முதல்வர் கருணாநிதிக்கு இஸ்லாமிய மக்கள் பக்கபலமாக இருக்க வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் பேசினார். நிகழ்ச்சியில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், தமிழ் மாநில தேசிய லீக் பொதுச் செயலர் திருப்பூர் அல்தாப், அமைச்சர்கள் பரிதி இளம்வழுதி, மைதீன்கான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.




வாசகர் கருத்து (88)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சீ.முருகன் - கும்பகோணம்,இந்தியா
01-செப்-201003:19:14 IST Report Abuse
சீ.முருகன் டேய் டுபாக்கூர் உன் அப்பன் என்ன சொல்றான்னா, கடவுள் இல்லை, நான் நாத்திகன் அப்படிங்கிறான். ஆனால் நோன்பு திறக்க மட்டும் போவானாம். இந்துக்களை மட்டும் திருடன் என்று கூறுவானாம். ஏன்டா இப்படி நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கூற வேண்டியதுதான. இதில் இருந்து என்ன தெரியுதுனா இந்துக்களை நீங்கள் எது சொன்னாலும் கேள்வி கேட்க மாட்டார்கள் என்ற நினைப்புதான். வருகிற தேர்தலில் இந்துக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.
Rate this:
Share this comment
Cancel
RAJAMOHMED - RIYADH,சவுதி அரேபியா
01-செப்-201002:36:30 IST Report Abuse
RAJAMOHMED திரு இந்த்ரஜித் அவர்களே...உங்கள் கேள்வி சரியாக இருந்தாலும்,தவறாக புரிந்து கொண்டிருக்கிறீர்கள்.என்னை பொறுத்தவரை, இந்தியாவில், இந்துவோ,முஸ்லிமோ,கிறிஸ்டினோ..அனைவரும் ஒரு குட்டையில் ஊறிய மட்டைகள். கடவுள் பயமும் கிடையாது, கடவுளுக்கு இலக்கணமும் கிடையாது!. இருந்திருந்தால், கொலை,கொள்ளை,கற்பழிப்பு என தவறுகள் நீண்டு கொண்டே போகுமா?.இந்த இந்திய மக்களின் ஈகோ முறைதான், இன்றைய அரசியல்வாதிகளுக்கு பலமாக உள்ளது.எனக்கு இஸ்லாம் பிடித்து இருக்கிறது,முஸ்லிமாக இருக்கிறேன்,உங்களுக்கு இந்துமதம் பிடித்து இருக்கிறது இந்துவாக இருக்கிறீர்கள்,அவ்வளவுதான்.இதனால், ஆக்ஜிசன் ,பூமியில் ஏதும் மாற்றமாகி விட்டதா?. அரசியல் வாதிகளின் நடவடிக்கைகளை வைத்து,மக்கள் குணங்களை தீர்மானிக்காதீர்கள்.நாளைக்கே அரசியல்வாதிகள் சீனாதான் சரி என்று,பாம்பு சூப்பு சாப்பிடக்கூட போவார்கள்.எனவே இந்தியனாக இருக்க இந்திய குடியுரிமை பெற்றவர்களா என்று மட்டும் பாருங்கள். ஒற்றுமைக்கு வித்திடுங்கள்.இல்லைஎன்றால், மதம்தான் பெரிது என்று அடித்துக்கொள்வீர்கள் என்றால்,இந்தியா புத்தமதத்திற்கு (சீனா) போய்விடும், கவனம் தேவை.அன்புடன் பாரததாயின் மகன்.
Rate this:
Share this comment
Cancel
ஆக்கூர் நஜுமுதீன் - அபுதாபி,ஐக்கிய அரபு நாடுகள்
01-செப்-201000:10:22 IST Report Abuse
ஆக்கூர் நஜுமுதீன் இனியும் நாங்கள் ஏமாற மாட்டோம், குல்லா போட்ட காலம் மலை ஏறிபோச்சி,எல்லோருக்கும் சமுக நீதி தந்திட வேண்டும் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X