பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்: பலி 35ஆக அதிகரிப்பு

Updated : செப் 02, 2010 | Added : செப் 02, 2010 | கருத்துகள் (2)
Share
Advertisement

லாகூர்: பாகிஸ்தானின் லாகூர் நகரில் ஷியா பிரிவு முஸ்லிம்களின் ஊர்வலத்தில், தற்கொலைப் படையை சேர்ந்த மூன்று பேர் குண்டுகளை வெடிக்கச் செய்ததில் பலியானோர் எண்ணிக்கை 35ஆக அதிகரித்துள்ளது . 180 பேர் படுகாயமடைந்தனர். பாகிஸ்தானின் ஷியா பிரிவு முஸ்லிம்களால் புனிதராக கருதப்படும் இமாம் அலியின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி லாகூரிலும், கராச்சியிலும் பேரணி நடந்தது. லாகூரில், கர்பாலா கமே ஷா இமாம்பர்கா என்ற இடத்தில் நடந்த ஷியா பிரிவினரின் ஊர்வலத்தில் நுழைந்த மூன்று தற்கொலைப் படையினர் தங்கள் உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்தனர். இந்த தாக்குதலில் 35 பேர் உடல் சிதறி பலியாயினர். சிறுமிகள் மற்றும் போலீசார் உள்பட 180க்கும் அதிகமானவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு லஷ்கர் இ ஜாங்வி அல் அல்மி என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. பேரணிக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யாத போலீசாரை கண்டித்து, ஊர்வலத்தில் கலந்து கொண்ட பலர் போலீஸ் நிலையத்தை அடித்து நொறுக்கினர். போலீஸ் வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. கல்லெறி சம்பவத்தில் போலீசார் பலர் காயமடைந்தனர். இதையடுத்து இந்த பகுதியில் கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன. நிலைமையை சமாளிக்க கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர். கராச்சியில் சதார் மார்க்கெட் அருகே நடந்த ஷியா பிரிவு முஸ்லிம்களின் ஊர்வலத்தை நோக்கி மூன்று பேர் துப்பாக்கியால் சுட்டதில் ஏழு பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து அந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஆசாத்ருமையா வவ்வாலடி - துபாய்,இந்தியா
02-செப்-201012:19:41 IST Report Abuse
ஆசாத்ருமையா வவ்வாலடி அட மானம் கெட்ட பாகிஸ்தான் வாதிகளே இஸ்லாத்தை புரிந்து நடந்து கொள்ளுங்கள். ஒரு இஸ்லாமியனின் வேண்டுகோள்
Rate this:
Cancel
visakha - doha,கத்தார்
02-செப்-201010:15:51 IST Report Abuse
visakha சபாஷ்,சரியான போட்டி.தன் வினை தன்னை சுடும். ஓட்டை அப்பம் வீட்டை சுடும் . இப்படித்தான் அடிச்சுண்டு சாகனும் . எந்த மதமும் வன்முறைய சொல்லல இஸ்லாமைத்தவிர என்பதை இதை விட வேறென்ன வேண்டும் . இது தான் சகோதர யுத்தம் . முஸ்லிமே முஸ்லிமை கொல்றான் பாரு . இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன் . இந்தியா 100 கோடி உதவி கொடுப்பதாக இருப்பதை மீண்டும் பரிசீலிக்கவேண்டும் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X