ராணுவத்தினர் குவிப்பா? சீனா திட்டவட்ட மறுப்பு

Updated : செப் 03, 2010 | Added : செப் 02, 2010 | கருத்துகள் (1)
Share
Advertisement

பீஜிங் : "பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரில் ராணுவத்தினரை குவிக்கவில்லை' என, சீனா திட்டவட்டமாக மறுத்துள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள வடக்கு காஷ்மீர், கில்ஜிட் - பால்டிசன் பகுதியில் 11 ஆயிரம் ராணுவத்தினரை சீனா குவித்துள்ளது; இப்பகுதியில் ரயில் பாதை அமைக்கவும் சீனா திட்டமிட்டுள்ளதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டது. இந்நிலையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், சீன ராணுவத்தினரை குவிக்கவில்லை என, சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜியாங் யூ தெரிவித்துள்ளார்.


அவர் மேலும் கூறியதாவது: இரு நாடுகளுக்கும் அண்டை நாடு மற்றும் நட்பு நாடு என்கிற முறையில், காஷ்மீர் பிரச்னையை இந்தியா - பாகிஸ்தான் நாடுகள் பேச்சு வார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்பதையே சீனா விரும்புகிறது. வரலாற்று ரீதியாகவே இப்பிரச்னை பல ஆண்டுகளாக தொடருகிறது. பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள வடக்கு காஷ்மீரில், சீனா ராணுவத்தைக் குவித்துள்ளது என்பது வெறும் கற்பனை.


இந்தியா, சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே உள்ள நல்லுறவுகளை சிதைக்க வேண்டும் என்கிற நோக்கில், யாரோ வேண்டு மென்றே கதை கட்டிவிட்டுள்ளனர். அவர்களது இந்த உள்நோக்கம் நிறைவேறாது. இந்திய கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் வாசிகளுக்கு வழங்கப்பட்டு வரும் விசா விவகாரத்தில் எந்த மாற்றமும் இல்லை. இவ்வாறு ஜியாங் யூ தெரிவித்துள்ளார்.


இந்திய பகுதியில் உள்ள காஷ்மீர் என, சீன செய்தித் தொடர்பாளர் கூறியிருப்பதன் மூலம், பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டு வரும் சீனா, அப்பகுதி மக்களை விசா விவகாரத்தில் எப்படி பார்க்கிறது என்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pattriot - சென்னை,இந்தியா
03-செப்-201014:21:38 IST Report Abuse
Pattriot இந்தியாவிற்கு என்றைக்குமே நல்ல அண்டை நாடு இருந்ததில்லை இருக்கபோவதும் இல்லை. எல்லா பக்கமும் நமக்கு பிரச்சனை தான். நமது ஆட்சியாளர்கள் இதற்கு ஒருமித்தமாக குரல் கொடுத்தால் தான் ஒரு தீர்வு கிடைக்கும். அதை விடுத்து எல்லாவற்றிற்கும் விட்டுக்கொடுத்துக்கொண்டிருந்தால் மீண்டும் நாம் ஒரு சுதந்திர போராட்டத்திற்கு தயார் ஆக வேண்டியதுதான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X