போலீசை கொன்று பிணம் வீச்சு : பீகாரில் நக்சல் வெறி ; முதல்வர் அவசர ஆலோசனை

Updated : செப் 04, 2010 | Added : செப் 02, 2010 | கருத்துகள் (74)
Share
Advertisement
Bihar Cop murdered brutally by maoist,போலீசை கொன்று பிணம் வீச்சு :  பீகாரில் நக்சல் வெறி ; முதல்வர் அவசர ஆலோசனை

பாட்னா : கடத்தப்பட்ட போலீசில் ஒருவரை நக்சல்கள் சுட்டுக்கொன்று பிணத்தை காட்டு பகுதியில் வீசியுள்ளனர். கொடூரமாக கொல்லப்பட்ட போலீஸ் லூகாஸ் டெட்டே உடலுக்கு போலீசார் துப்பாக்கி முழங்கிட மரியாதை செலுத்தினர். பீகாரில், நக்சலைட்கள் நடத்தி வரும் வெறியாட்டத்திற்கு முடிவு கட்ட முடியாமல் ‌மாநில அரசு திணறி வருகிறது. லக்கிசராய் மாவட்டத்தில் இருந்து கடத்திய நான்கு போலீசாரில் ஒருவரை, கொடூரமாக கொன்றனர். தங்களின் நிபந்தனைகளை நிறைவேற்ற பீகார் அரசுக்கு கெடு விதித்தும் கண்டுகொள்ளாததால், அரசுக்கு சவால் விடும் வகையில் இதை செய்துள்ளனர்.


பீகார் மாநிலம் லக்கிசராய் மாவட்டத்தில் உள்ள கஜ்ரா போலீஸ் நிலைய பகுதியில் கடந்த ஞாயிறன்று நக்சலைட்கள் தாக்குதல் நடத்தினர். அப்போது போலீசாருக்கும், நக்சலைட்களுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இந்தச் சண்டையில் எட்டு போலீசார் பலியாயினர். சப்-இன்ஸ்பெக்டர்கள் ரூபேஷ் குமார், அபய் பிரசாத் யாதவ், போலீஸ்காரர்கள் ஈதேஷம்கான், லூகாஸ் தெதி ஆகிய நான்கு பேரை கடத்திச் சென்றனர். "பிணைக்கைதியாக வைத்திருக்கும் அவர்களை விடுவிக்க வேண்டும் எனில், சிறையில் உள்ள நக்சலைட்கள் எட்டு பேரை கடந்த புதன்கிழமை(நேற்று முன்தினம்) மாலை 4.00 மணிக்குள் விடுவிக்க வேண்டும். நக்சலைட்களுக்கு எதிராக பாதுகாப்புப் படையினர் மேற்கொண்டுள்ள, "பசுமை வேட்டை' நடவடிக்கையை நிறுத்த வேண்டும்' என, நிபந்தனை விதித்தனர். ஆனால், இந்த நிபந்தனைகளை நிறைவேற்ற பீகார் மாநில அரசு முன்வரவில்லை.


அதே நேரத்தில், "பிணைக்கைதிகளாக உள்ள போலீசாரை எந்தவிதமான நிபந்தனையும் இன்றி விடுவிக்க வேண்டும்' என, நக்சலைட்களுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும், கடத்தப்பட்ட போலீசாரின் உறவினர்களும் வேண்டுகோள் விடுத்தனர். இருந்தாலும், நக்சலைட்கள் அதற்கு செவிசாய்க்கவில்லை. தங்களின் நிபந்தனைகளை அரசு நிறைவேற்றுவதற்கான காலக்கெடுவை நேற்று காலை 10 மணியாக மாற்றினர். அதன் பின்னும், பீகார் மாநில அரசு பணியவில்லை. மாநில அரசின் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பீகார் முதல்வர் நிதிஷ்குமார், நக்சலைட்களால் கடத்தப் பட்ட போலீசாரை மீட்க விரைவாக நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொண்டார்.


தேடுதல் வேட்டை: அதன்படி, லக்கிசராய், ஜமூய் மற்றும் முங்கர் மாவட்டங்களில் உள்ள மலைப்பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ராணுவ ஹெலிகாப்டர்களும் தேடும் பணியில் ஈடுபட்டன. இந்நிலையில், கடத்தப்பட்ட போலீசார் நான்கு பேரில், சப்-இன்ஸ் பெக்டர் அபய் பிரசாத் யாதவ் என்பவரை நக்சலைட்கள் நேற்று கொன்றதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில்


நக்சலைட்களின் தகவல் தொடர்பாளர் அவினாஷ் என்பவரும் செய்தி நிறுவனம் ஒன்றை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர், ""சிறையில் உள்ள நக்சலைட்கள் எட்டு பேரை விடுவிக்க நாங்கள் நிர்ணயித்த காலக்கெடு முடிவடைந்து விட்டதால், பிணைக்கைதியாக பிடித்து வைத்திருந்த நான்கு போலீசாரில் ஒருவரை கொன்று விட்டோம். கொல்லப்பட்ட உடல்  அரசு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும். எங்களின் கோரிக்கைகளை மாநில அரசு நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில், மீதமுள்ள போலீசாரையும் கொன்று விடுவோம்,'' என தெரிவித்தார்.


லூகாஸ் டெட்ரே உடல் கண்டெடுப்பு : இன்று வனப்பகுதியில் ‌போலீசார் லூகாஸ் டெட்ரே என்பவரது உடல் வீசப்பட்டு கிடந்தது. இதனை போலீசார் கைப்பற்றினர். இவரது உடல் அருகே ஒரு துண்டு பிரசுரம் வைக்கப்பட்டிருந்தது. இதில் இன்னும் கோரிக்கை நிறைவேற்றப்பட வில்லையெனில் எஞ்சிய 3 போலீசாரை சுட்டுக்கொல்வோம் என எழுதி வைத்துள்ளனர். ஆனால் நக்சல்கள் எங்கு பதுங்கி இருக்கி்ன்றார்கள் என போலீசாரால் கண்டு பிடிக்க முடியவில்லை.


இந்நிலையில் இது தொடர்பாக முதல்வர் நிதீஷ்குமார் உயர் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார். நாளை அனைத்துக்கட்சி கூட்டத்தினரை அழைத்து பேசுகிறார். முதல்வர் கூறுகையில் ; பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளோம். நக்சலைட்கள் பேச்சுவார்த்தைக்கு வந்தால், போலீஸ் நடவடிக்கை நிறுத்தப்படும். மனித உரிமைகள் விஷயத்தில் நாங்கள் எப்போதும் அக்கறை காட்டுகிறோம்.


ஜனநாயகத்தின் மீது மக்கள் நம்பிக்கை வைக்க வேண்டும். நக்சலைட்கள் தேர்தலில் போட்டியிட தயங்குவது ஏன்? இதுபோன்ற சம்பவங்களைப் பார்த்து நாங்கள் பயந்துவிட மாட்டோம்,'' என்றார்.


பிணைக்கைதியாக உள்ள மற்ற மூன்று பேரில், ரூபேஷ் குமார், அபய்குமார் யாதவ், கான் உள்ளிட்ட 3 பேரை மீட்க மாநில அரசு உரிய நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இந்த பிரச்னை மாநிலும் முழுவதும் பெரும் பரபரப்பாக பேசப்படுகிறது.


Advertisement
வாசகர் கருத்து (74)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
FSD - INDIA,இந்தியா
06-செப்-201017:16:10 IST Report Abuse
FSD இவையனைத்தும் நிதீசும் லாலுவும் இணைந்து நடத்தியா நாடகமும் கொலைவேரிசெயலும் தான்.
Rate this:
Cancel
Rajan - coimbatore,இந்தியா
03-செப்-201023:50:06 IST Report Abuse
Rajan good news for naxals.... bad news for india....
Rate this:
Cancel
Deva - Aalen,ஜெர்மனி
03-செப்-201022:58:09 IST Report Abuse
Deva Mr. Chidambararm What you are going to say? If it happens in your family will you be like this? The Cong Govt. has no guts to finish the MaVos. After this also the Home minister will say we will not send army to eradicate the MaVos. Terrorism does not mean those who are coming from outside but this MaVos also. After Chidambaram´s taking over charge as Home Minister there are lot of incidents in the Name of religion, caste and Mavos, but I don´t know why Mrs. Soniya keeps mum ? Remove this backboneless minister and appoint some other able hand.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X