unpermissionable structure in Dhanuskodi | தனுஷ்கோடியில் அனுமதியின்றி கட்டடம் : விசாரணை | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தனுஷ்கோடியில் அனுமதியின்றி கட்டடம் : விசாரணை

Added : மே 27, 2010 | கருத்துகள் (1)

ராமேஸ்வரம் : தனுஷ்கோடியில் அனுமதியின்றி பிரார்த்தனை மண்டபம் கட்டப்பட்டுள்ளது குறித்து புலனாய்வுத்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். தனுஷ்கோடியில் 1964 புயலுக்குப்பின் நிரந்தர கட்டடம் கட்டுவதற்கு அரசின் தடை இருப்பதால், இங்கு மீன்பிடித் தொழில் செய்து வரும் மீனவர்கள் சிறிய குடிசைகளில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தனுஷ்கோடியில் 20 அடி அகலம், 40 அடி நீளத்தில் குறிப்பிட்ட மதத்தின் பெயரில் பிரார்த்தனை மண்டபம் கட்டப்பட்டுள்ளது. சுற்றிலும் சிமென்ட் சுவர், மேலே சிமென்ட் ஓடும் வேயப்பட்டுள்ளது. எவ்வித அனுமதியுமின்றி கட்டப்பட்ட கட்டடத்தை அகற்றகோரி, இப்பகுதி மீனவர்கள் தனுஷ்கோடி போலீஸ் ஸ்டேஷனில் மூன்று மாதங்களுக்கு முன் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை. இது குறித்து புலனாய்வுத் துறையினர் விசாரித்து வருகின்றனர்.


Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X