பொது செய்தி

தமிழ்நாடு

ராஜபாளையம் அ.தி.மு.க., எம்.எல்.ஏ., சந்திரா வெற்றி செல்லும் : சுப்ரீம் கோர்ட்

Added : செப் 07, 2010 | கருத்துகள் (3)
Advertisement

ராஜபாளையம் : ராஜபாளையம் தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., சந்திரா வெற்றி பெற்றது செல்லும் என சுப்ரீம் கோர்ட் அறிவித்துள்ளது. கடந்த 2006ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில், ராஜபாளையம் தனி தொகுதியில் அ.தி.மு.க., சார்பில், சந்திரா, தி.மு.க., சார்பில் வி.பி.ராஜன் உள்ளிட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில், சந்திரா 58 ஆயிரத்து 320 ஓட்டுகளும், ராஜன் 57 ஆயிரத்து 827 ஓட்டுகளும் பெற்றனர். தேர்தலில் சந்திரா வெற்றி பெற்றார். இவரது தேர்தலை எதிர்த்து, சுயேச்சை வேட்பாளர் தங்கமுத்து, என்பவர் ஐகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார். அதில், "ராஜபாளையம் தொகுதி ஆதி திராவிடர்களுக்காக ஒதுக்கப்பட்ட தொகுதி. இந்தத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற சந்திரா, கிறிஸ்தவ தந்தைக்கும், இந்துத் தாய்க்கும் பிறந்தவர். அவரின் தந்தை கிறிஸ்தவர் என்பதால், சந்திராவை தாழ்த்தப்பட்டவராக கருத முடியாது. ராஜபாளையம் தொகுதியில், சந்திரா போட்டியிட முடியாது. ஆதிதிராவிடர் என பொய்யாகக் கூறி, சந்திரா வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். சந்திராவின் உண்மையான பெயர் குளோரி சந்திரா. சந்திராவின் பள்ளிச் சான்றிதழிலும் அவர் கிறிஸ்தவர் எனக் கூறப்பட்டுள்ளது' என தெரிவித்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட் நீதிபதி நாகப்பன், "சந்திரா வெற்றி பெற்றது செல்லாது. மனுதாரருக்கு 5,000 ரூபாய் வழக்குச் செலவுத் தொகையை அவர் அளிக்க வேண்டும்' என, உத்தரவிட்டார். இதை எதிர்த்து அப்பீல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் இன்று சந்திராவின் வெற்றி செல்லுபடியாகும் என தீர்ப்பு வழங்கியது.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெயப்ரகாஷ் - SIVAKASI,இந்தியா
07-செப்-201023:21:17 IST Report Abuse
ஜெயப்ரகாஷ் வீண் வழக்கு. வெட்டி வேலை. சுப்ரீம் கோர்ட் நடுநிலையாக தீர்ப்பு சொல்லியுள்ளது. கோர்ட்டின் மீது பொது மக்களுக்கு நம்பிக்கை மேலும் மேலும் கூடும். நன்றி.
Rate this:
Share this comment
Cancel
திருப்பதி. - madurai,இந்தியா
07-செப்-201017:58:28 IST Report Abuse
திருப்பதி. வழக்கு கொடுத்தவரை கைது பன்னுக்கள்
Rate this:
Share this comment
Cancel
ரவிக்குமார்.பி.கே - chennai,இந்தியா
07-செப்-201016:56:55 IST Report Abuse
ரவிக்குமார்.பி.கே வாழ்த்துக்கள் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X