பொது செய்தி

தமிழ்நாடு

எட்டு மாதத்தில் 224 பேர் கொலை: கள்ளக்காதலில் தீர்த்துக்கட்டியது அதிகம்

Updated : செப் 10, 2010 | Added : செப் 08, 2010 | கருத்துகள் (28)
Advertisement

கோவை : ""தமிழக மேற்கு மண்டலத்தில் கடந்த எட்டு மாதங்களில் 224 கொலைகள் நிகழ்ந்துள்ளன. இவற்றில், பெரும்பாலான கொலை சம்பவங்கள், சொத்து தகராறு மற்றும் கள்ளக்காதல் உள்ளிட்ட பாலியல் தொடர்பு காரணமாக நிகழ்ந்துள்ளன,'' என்று, ஐ.ஜி., சிவனாண்டி தெரிவித்தார்.


அவர், கோவையில் நேற்று அளித்த பேட்டி:கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை உள்ளடக்கிய தமிழக மேற்கு மண்டலத்தில் குற்றத்தடுப்பு மற்றும் விபத்து தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன்விளைவாக நடப்பு ஆண்டில் திருட்டு, வழிப்பறி, கொள்ளை உள்ளிட்ட குற்றங்களும், சாலை விபத்துகளும் குறைந்துள்ளன. பெருங்குற்றங்கள் தொடர்பாக கடந்த 2007ம் ஆண்டில் 3,523 வழக்குகளும், 2008ல் 4,428 வழக்குளும், 2009ம் ஆண்டில் 3,750 வழக்குகளும் பதிவாகின. நடப்பு ஆண்டில் இதுவரை 2,220 வழக்குகள் பதிவாகியுள்ளன. பெரும்பாலான வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, களவுச் சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன.மேற்கு மண்டலத்தில் பதிவாகும் மொத்த குற்ற வழக்குகளில் 30 சதவீதம், திருப்பூர் மாவட்டத்தில் மட்டுமே பதிவாகின்றன. அங்கு குற்றத்தடுப்பு நடவடிக்கையை வேகப்படுத்தப்பட்டுள்ளது.


திருப்பூருக்குள் நுழையும் மிக முக்கிய சாலைகளில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் வாகன சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் காரணமாக, சமீபகாலமாக பெருங்குற்றங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. பிற மாவட்டங்களிலுள்ள கிரிமினல்களும் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளனர். கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை பதிவான குற்ற வழக்குகளில் 70 சதவீதம் கண்டுபிடிக்கப்பட்டு, குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆறு கோடி ரூபாய் மதிப்பிலான களவுச் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன.அதே போன்று, சாலை விபத்து தடுப்பு நடவடிக்கையும் முடுக்கிவிடப்பட்டுள்ளது.


கடந்த 2007ம் ஆண்டில் 13 ஆயிரத்து 250 சாலை விபத்துகளும், 2008ல் 14 ஆயிரத்து 400 விபத்துகளும், 2009ல் 14 ஆயிரத்து 500 விபத்துகளும், நடப்பு ஆண்டில் இதுவரை 8,589 விபத்துகளும் நிகழ்ந்துள்ளன. நடப்பு ஆண்டில் நடந்த சாலை விபத்துகளில் இதுவரை 2019 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்துகளை தடுக்க சரக்கு வாகன டிரைவர்கள், அரசு மற்றும் தனியார் பஸ் டிரைவர்களை மாவட்டம் வாரியாக அழைத்து ஆலோசனை நடத்தவுள்ளோம். வாகனங்களை பாதுகாப்பான முறையில் இயக்க போதிய அறிவுரைகள், டிரைவர்களுக்கு வழங்கப்படும்.


224 பேர் கொலை: மேற்கு மண்டலத்தில் கடந்த 2007ம் ஆண்டில் 331 கொலைகளும், 2008ல் 335 கொலைகளும், 2009ல் 333 கொலைகளும் நடந்துள்ளன. நடப்பு ஆண்டில் இதுவரை 224 கொலைகளும் நிகழ்ந்துள்ளன. இவற்றில், பெரும்பாலான கொலை சம்பவங்கள், சொத்து தகராறு காரணமாக நிகழ்ந்துள்ளன. அடுத்ததாக காதல், கள்ளக்காதல் உள்ளிட்ட பாலியல் தொடர்பாகவும், கொள்ளையடிக்கும் நோக்கத்துடனும், வாய்த்தகராறு காரணமாகவும் நிகழ்ந்துள்ளன. இவற்றில் பெரும்பாலான வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுவிட்டனர். விசாரணை நிலுவையிலுள்ள மற்ற வழக்குகளிலும் குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு, ஐ.ஜி., சிவனாண்டி தெரிவித்தார்.


மத நல்லிணக்க முயற்சி : ஐ.ஜி., சிவனாண்டி கூறியதாவது:விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு மேற்கு மண்டலத்தில் 3,600 சிலைகளை வைத்து பிரதிஷ்டை நடத்த பல்வேறு அமைப்புகள் அனுமதி கோரியுள்ளன. கோவையில் 815, நீலகிரியில் 460, திருப்பூரில் 810 சிலைகள் முறையே வைத்து வழிபட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் விசர்ஜன ஊர்வலத்தின் போது பாதுகாப்பு பணியில் 10 ஆயிரம் போலீசார் ஈடுபடுவர். இவ்விழாவின் போது அமைதி நிலவ மாற்று மதத்தினரின் ஒத்துழைப்பு கோரப் பட்டுள்ளது. சமீபத்தில், ஒசூரில் நடந்த மத நல்லிணக்க ஆலோசனை கூட்டத்தில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ பிரமுகர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். விநாயகர் சதுர்த்தி விசர்ஜன ஊர்வலத்தின் போது, மாற்று மத தலைவர்கள், பிரமுகர்கள் வழியில் நின்று வாழ்த்து தெரிவித்து நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் முயற்சி மேற்காள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு, சிவனாண்டி தெரிவித்தார்.


Advertisement




வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கே.ஜீவிதன் - villupuram,இந்தியா
10-செப்-201010:45:39 IST Report Abuse
கே.ஜீவிதன் பதிவாகாத வழக்குகள் எவ்வளவோ?
Rate this:
Share this comment
Cancel
krishna - tamilnadu,இந்தியா
09-செப்-201023:25:36 IST Report Abuse
krishna திருமணம் என்பது மூச்சடைக்க வைக்கும் உறவாக இல்லாதிருந்தால், கருத்து சுதந்திரம் அனுமதிக்கும் இடமாக இருந்தால் அங்கே வேறு உறவை நாடி செல்லும் நிலை வராது
Rate this:
Share this comment
Cancel
krishna - tamilnadu,இந்தியா
09-செப்-201023:21:10 IST Report Abuse
krishna ஒருவர் மனத்தைக் கட்டாயபடுத்தி கட்டுக்குள் வைக்க முடியுமா? விரும்பாத திருமண உறவும் ஒரு பாலியல் வன்முறை தானே? வேண்டாத திருமண பந்தத்தை விட்டு விலகும் சுதந்திரம் இருந்தால் கள்ள உறவு என்பதே இருக்காது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X