"மப்பு' ஏற்றிய போலீசை பத்திரமாக மீட்ட கைதிகள்

Updated : செப் 10, 2010 | Added : செப் 09, 2010 | கருத்துகள் (13) | |
Advertisement
லக்னோ: பணி நேரத்தில் மது குடித்துவிட்டு,  போதையில்  மயங்கிக்கிடந்த போலீஸ் கான்ஸ்டபிளை இரண்டு கைதிகள் பத்திரமாக ஸ்டேஷனுக்கு அழைத்து வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப் பிரதேச மாநிலம், பிஜ்னூர் டவுனில்,  கைவிலங்கிடப்பட்ட நிலையில் இருந்த கைதிகள்  இரண்டு பேர்  போதையில் தள்ளாடிய  போலீஸ் கான்ஸ்டபிளை  கைத்தாங்கலாக அழைத்து வந்த அரிய காட்சியை

லக்னோ: பணி நேரத்தில் மது குடித்துவிட்டு,  போதையில்  மயங்கிக்கிடந்த போலீஸ் கான்ஸ்டபிளை இரண்டு கைதிகள் பத்திரமாக ஸ்டேஷனுக்கு அழைத்து வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


உத்திரப் பிரதேச மாநிலம், பிஜ்னூர் டவுனில்,  கைவிலங்கிடப்பட்ட நிலையில் இருந்த கைதிகள்  இரண்டு பேர்  போதையில் தள்ளாடிய  போலீஸ் கான்ஸ்டபிளை  கைத்தாங்கலாக அழைத்து வந்த அரிய காட்சியை பொதுமக்கள் மட்டுமல்லாமல், போலீசாரும் பார்த்து  வாயடைத்து போயினர். சஞ்சீவ், அருண் பால் ஆகிய இரண்டு பேரும், கொலை  மற்றும் கொள்ளை வழக்கில் மொராதாபாத் மாவட்ட  சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்களை  விசாரணைக்காக, பிஜ்னூர் கோர்ட்டுக்கு இரண்டு போலீஸ் கான்ஸ்டபிள்கள்  அழைத்து வந்தனர். அன்றைய தினம் ஜென்மாஷ்டமி என்பதால், கோர்ட்டுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. உடனே, உற்சாகமான கான்ஸ்டபிள்கள் இரண்டு பேரும், கைதிகள் இரண்டு பேரையும் பஸ்ஸ்டாண்டில் காத்திருக்கச் சொல்லிவிட்டு, அருகில் இருந்த, "பாரு'க்கு தண்ணியடிக்கச் சென்றுவிட்டனர்.


நெடுநேரம், பஸ் ஸ்டாண்டில் காத்திருந்த கைதிகள் இரண்டு பேரும்,  போலீஸ்காரர்களை தேடத் தொடங்கினர். வலை வீசி தேடியதில், ஒரு கான்ஸ்டபிள் மட்டுமே  அகப்பட்டார். அதுவும் நிற்கக் கூடிய நிலையில் அவர் இல்லை.  மற்றவர் என்ன ஆனார் என்று தெரியவில்லை. சரி, இவராவது கிடைத்தாரே என்று, அவரை  ஆளுக்கொரு பக்கமாக கைத்தாங்கலாக,  அருகில் இருந்த போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர். அந்த அரிய காட்சியைத்தான் பிஜ்னூர் மக்களும், போலீசாரும்  கண்டுகளித்தனர்.


இதுகுறித்து, போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: அன்றைக்கு, போதை கான்ஸ்டபிளை அழைத்து வந்த கைதிகள், தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு, விவரங்களை கூறினர். எங்களுக்கு பயங்கர  அதிர்ச்சி.  இரண்டுபேரும் கொலை உள்ளிட்ட குற்றங்களில் தொடர்புடையவர்கள். அவர்கள் கைவிலங்கிடப்பட்டிருந்தாலும், எளிதாக தப்பிச் சென்றிருக்க முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sabeer - India,இந்தியா
11-செப்-201022:54:10 IST Report Abuse
Sabeer Hi to all viewers, Its my sincere obligation as a citizen of India. We need to change the law that gives ownership to those who rent a property for long period. I do not know who made this irresponsible law. Indian Think.... we want politicians who controls corruption not those who use people money to give free gifts to our benevolent population
Rate this:
Cancel
திரு - chennai,இந்தியா
11-செப்-201012:21:10 IST Report Abuse
திரு  இது வேதனையான விஷயம். காவல் நிற்க வேண்டிய ஆட்களே காணாம போனாலும் தேடி பிடிச்சு கொண்டு வந்த கைதிகள் கிட்ட இருக்கின்ற நேர்மை போலீஸ் கிட்ட இல்லை. இதை விமர்சிக்கரத விட கேவலம் ஏதும் இல்லை.
Rate this:
Cancel
ஜஹ்பர் சாதிக் - திருவாரூர்பொதக்குடி,இந்தியா
11-செப்-201011:41:46 IST Report Abuse
ஜஹ்பர் சாதிக் விக்ர விலை வாசிக்கு உள்ள இருப்பது மேல்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X