பொது செய்தி

தமிழ்நாடு

ரசாயன உரங்களுக்கு "குட்பை' சொல்லும் தென்னை விவசாயிகள்

Added : செப் 10, 2010
Advertisement

சுல்தான்பேட்டை : சுல்தான்பேட்டை வட்டாரத் தில் தென்னை விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகள், ரசாயன உரங்களை கைவிட்டு, இயற்கை உரத்துக்கு மாறி வருகின்றனர். இயற்கை உரம் பயன் படுத்துவதால், 15 சதவீதம் மகசூல் அதிகரித்து வருகிறது.

சுல்தான்பேட்டை வட்டாரத் தில் தென்னை விவசாயம் பிரதான தொழிலாக விளங்கி வருகிறது. இப்பகுதியில் 10 லட்சத்துக்கும் மேலாக தென்னை மரங்கள் உள்ளன. தென்னையில் நல்ல மகசூல் கிடைப்பதற்காக, இப்பகுதி விவசாயிகள் பெரும் பாலானோர், யூரியா, பொட் டாஷ், காம்ப்ளக்ஸ் போன்ற ரசாயன உரங்களையும், சிறிது இயற்கை உரங்களையுமே சேர்த்து உரமாக இட்டனர்.

சில விவசாயிகளோ, காயர் வேஸ்ட், காளான் விதை, மாட்டுச் சாணம், கோழிஎரு, கற்றாழை, சப்பாத்திக்கள்ளி, எருக்கு இலை, சணப்பை, வேப்பம் புண்ணாக்கு, கடலை புண்ணாக்கு, பூண்டு, மஞ்சள் தூள், கோமியம், பசுந்தழையை பயன்படுத்தி இயற்கை உரங்கள் தயாரித்து தென்னைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர். ரசாயன உரம் பயன்படுத்துவ தால் கிடைக்கும் மகசூலை விட, இயற்கை உரம் பயன்படுத்தி னால் 15 சதவீதம் மகசூல் அதிக மாக கிடைக்கிறது.

ஆட்கள் பற்றாக்குறை, மழைப் பொழிவு குறைவு, தேங்காய்க்கு கட்டுப்படியான விலையின்மை போன்ற காரணங்களால் அவதிப் படும் விவசாயிகள், இயற்கை உரம் மூலம் மகசூல் அதிகரிப்பு, அவர்களை உற்சாகம் அடையச் செய்துள்ளது.

சுல்தான்பேட்டையைச் சேர்ந்த தென்னை விவசாயி கனகராஜ் கூறியதாவது: பிற விவசாயங்களை விட, தென்னை சாகுபடிக்கு அதிக அளவு ஆட்கள் தேவைப் படுவதில்லை. இதன் காரண மாக, சுல்தான்பேட்டை வட்டாரத்தில் தென்னை சாகுபடி மிகவும் அதிகமாக உள்ளது. தென்னை சாகுபடி செய்தால் நீண்ட காலம் தொடர்ந்து வருவாய் கிடைக்கும். பெரும் பாலான விவசாயிகள், தங்களது தென்னைக்கு ரசாயன உரங்களையே இட்டு வந்தனர்.

ரசாயன உரங்களை விட, இயற்கை உரங்களை பயன் படுத்தினால் அதிக மகசூல் கிடைக்கும் என்பது சமீபத்தில் தான் விவசாயிகளுக்கு பரவலாக தெரியவந்துள்ளது. தற்போது, வட்டாரத்தில் பல விவசாயிகள் இயற்கை உரத்தை பயன்படுத்தி வருகின்றனர். காயர் வேஸ்ட், காளான் விதை, மாட்டுச்சாணம், வேப்பம் புண்ணாக்கு, பூண்டு, மஞ்சள் தூள் உட்பட 14 இயற்கை பொருட்களை எடுத்து, பெரிய குழியில் போட்டு மாதம் ஒரு முறை அவைகளை நன்றாக கலக்கி, இரண்டு மாதத்துக்கு ஒரு முறை குழிக்கு தண்ணீர் பாய்ச்சுகிறோம்.

இவை ஆறு மாதத்தில் மக்கிய இயற்கை உரமாக உருமாகிறது. இதை தென்னைக்கு உரமாக இடுகிறோம். ஒரு தென்னை மரத்துக்கு ஓராண்டுக்கு 40 கிலோ முதல் 50 கிலோ வரையி லான இயற்கை உரம் போதும். இயற்கை உரம் ஒரு கிலோ தயாரிக்க ரூ.3.50 மட்டுமே செலவாகிறது. ரசாயன உரங்கள் கிலோவுக்கு ஏழு ரூபாய் செல வாகிறது. ரசாயன உரங்களால் மண் வளம் பாதிக்கப்படுகிறது. இயற்கை உரங்களால் மண் வளம் பாதுகாக்கப்படுகிறது.

இயற்கை உரங்களால் விளை விக்கப்படும் தென்னையில் 100 தேங்காய்களுக்கு 17 கிலோ கொப்பரை கிடைக்கும். ரசாயன உரங்களால் விளைவிக்கப்படும் தேங்காய்களில் 100 தேங் காய்க்கு 13 கிலோ கொப்பரை மட்டுமே கிடைக்கும். இதன் காரணமாக, சுல்தான்பேட்டை வட்டாரத்தில் இயற்கை உரங்கள் தென்னைக்கு உரமாக இடுவது பரவி வருகிறது, என்றார்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X