யமுனையில் வெள்ளம் டில்லி மக்கள் தவிப்பு

Added : செப் 10, 2010 | கருத்துகள் (2)
Share
Advertisement
யமுனையில் வெள்ளம் டில்லி மக்கள் தவிப்பு

புதுடில்லி : யமுனை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், டில்லியில் தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


அரியானா மாநிலத்தில் பெய்த பலத்த மழையால், யமுனை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், அரியானாவில் ஹத்தினிகுண்ட் அணை நிரம்பி வழிகிறது. அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், யமுனை ஆற்றில் அபாய அளவை விட ஒரு மீட்டர் அளவுக்கு அதிகமாக தண்ணீர் ஓடுகிறது. இதனால், டில்லியின் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.


இது குறித்து டில்லி முதல்வர் ஷீலா தீட்சித் குறிப்பிடுகையில், "யமுனை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கை கண்டு மக்கள் பீதியடைய வேண்டாம். தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன' என்றார்.டில்லி வெள்ளக் கட்டுப்பாட்டுத்துறை அமைச்சர் ராஜ்குமார் சவுகான் குறிப்பிடுகையில், "வெள்ளம் சூழ்ந்த பகுதிகளிலிருந்து நீரை வெளியேற்ற 100 பூஸ்டர் பம்புகள் பொருத்தப்பட்டுள்ளன. வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்க 74 படகுகளும், 68 மீட்புப் படையினரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்' என்றார்.


Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
maniraj - Kovai,இந்தியா
12-செப்-201008:13:35 IST Report Abuse
maniraj இப்படி வெள்ளம் வந்து அழிந்தால் கூட பரவாயில்லை, ஆனால் வறட்சியான மாநிலங்களுக்கு தண்ணீர் தர அவர்களுக்கு மனம் வராது. நதிகள் இணைப்பு சாத்தியம் இல்லை என்று வேறு அறிவாகப் பேசுவார்கள். இந்தியா ஒன்று தான் என்று நம்ப மனம் மறுக்கிறது.
Rate this:
Cancel
நக்கீரன் - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
11-செப்-201014:57:51 IST Report Abuse
நக்கீரன் ஐயா ராகுல் காந்தி அவர்களே, தயவுசெய்து இந்தியாவில் உள்ள அணைத்து நதிகளையும் இணைக்க உடனடியாக ஒரு தொலை நோக்கு திட்டம் ஏற்பாடு செய்யவும். நதிகளை இணைப்பது சாத்தியம் இல்லை என்று திரும்ப திரும்ப சொல்லவேண்டாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X